என் மலர்tooltip icon

    அரியலூர்

    • உடையார் பாளையம் அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது
    • பணம் பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

     அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் மேலத்தெருவை சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது 35), விவசாயி. இவர் நேற்று அரியலூர் நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உடையார்பாளையம் தான்டான் ஏரி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கவாஸ்கரிடம் இருந்த ரூ.200-ஐ வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கவாஸ்கர் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜ் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரியலூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
    • உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கவிதாசன் (வயது 25), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சைனி வில்சியா (21). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சைனி வில்சியா தனது கணவரிடம் வட்டி தொகையை செலுத்த பணம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தில் அவர் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சைனி வில்சியா தனது கணவரை சத்தம் போட்டுள்ளார். இதில், மனவேதனை அடைந்த கவிதாசன் வயலுக்கு அடிக்க வைத்து இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கவிதாசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
    • ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 46). இவர் புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கொளஞ்சி அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சாமிக்கண்ணு மற்றும் அவரது நண்பர்களான கண்ணன், அய்யப்பன் ஆகியோர் கொளஞ்சியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொளஞ்சி அளித்த புகாரின் பேரில் கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கொலை மிரட்டல் விடுத்த சாமிக்கண்ணு, கண்ணன், அய்யப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை.
    • தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழப்பாடி புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 42).

    பிரபல ரவுடி. இவர் மீது அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் குல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பாஸ்கர் ரவுடி சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் கண்டிரா தீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி அர்ஜு ன்ராஜ் என்பவருடன் அரிவாள், மிளகாய் பொடி ஆகியவற்றை எடுத்து மறைத்து வைத்து கொண்டு சுதாகர் வீட்டுக்கு சென்றனர்.

    பின்னர் வீட்டு முன்பு நின்று கொண்டு அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டினர். ஆனால் இதை சுதாகர் கண்டுகொள்ளாமல் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தார்.

    பின்னர் அவரை வெளியில் வர வைப்பதற்காக பாஸ்கர், அர்ஜுன் ராஜ் ஆகிய இருவரும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுதாகரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.

    அப்போதும் சுதாகர் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொலையாளிகள் வீட்டின் மேற்கூறையில் கற்களை வீசி தாக்கினர். இதில் ஓடுகள் உடைந்து விழுந்தது.

    அதைத்தொடர்ந்து சுதாகர் தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார்.

    அடுத்த நொடி தயாராக நின்ற பாஸ்கரும், அர்ஜுனும் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சுதாகர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து திருமானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் விசாரணை நடத்தினர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடினர்.

    பின்னர் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு அர்ஜுன்ராஜை அதிரடியாக கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில், கொலை செய்யப்பட்ட ரவுடி சுதாகருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பாஸ்கரின் அண்ணன் ஜெகதீசனின் மனைவியுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த ஜெகதீசனின் சகோதரர் பாஸ்கர் அதிர்ச்சி அடைந்து ரவுடியை கண்டித்தார். அவர்களுக்குள் பல முறை சண்டையும் நடந்தது. இருந்தபோதிலும் சுதாகர் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் நானும் அவரும் சென்று வீட்டுக்குள் இருந்த ரவுடியை வெளியே வர வைத்து வெட்டிக்கொலை செய்தோம் எனக் கூறியுள்ளார்.

    தலைமுறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பாஸ்கரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரியலூர் ரவுடி கொலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • தலைமறைவாக உள்ள ஒருவரை பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூச்சி என்ற சுதாகர் (வயது 41). பிரபல ரவுடியான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இவருக்கும், குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் பாஸ்கர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் பாஸ்கர் மற்றும் கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூன்ராஜ் ஆகியோர், சுதாகர் வீட்டின் வெளியே நின்றபடி தகாத வார்த்தையால் பேசி, அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.ஆனால் வீட்டிற்குள் இருந்த சுதாகர் வெளியே வராததால் ஆத்திரமடைந்த பாஸ்கரும், அர்ஜூன்ராஜும் வீட்டின் முன் பகுதியில் இருந்த ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த சுதாகர், தனது குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் மீது மிளகாய் பொடியை வீசி, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து சுதாகரின் உடலை தெருவில் வீசிவிட்டு அங்கிருந்து பாஸ்கரும், அர்ஜூன்ராஜுனும் அங்கிருந்து தப்பி சென்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது பற்றி திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெேராஸ்கான் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.தனிப்படை போலீசார் விரைவாக செயல்பட்டு அர்ஜூன்ராஜை கைது ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பாஸ்கரை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மாயமான முதியவர் குட்டையில் பிணமாக மீட்பு
    • குடிபோதையில் கால் கழுவ சென்றபோது, குட்டையில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டிக்குழிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 75). இவர் மின்சார வாரியத்தில் இளமின் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவி பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ெபரியசாமி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் ராஜ்குமார், பெரியசாமியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இந்நிலையில் கோரியாம்பட்டியில் இருந்து செட்டிக்குழிபள்ளம் செல்லும் சாலையில் கல்லுக்குழி குட்டையில் ஒருவர் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குட்டையில் பிணமாக மிதந்தது பெரியசாமி என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமி குடிபோதையில் கால் கழுவ சென்றபோது, குட்டையில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டிலால் வாலிபர் மண்டை உடைப்பு
    • ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் புத்தர் புதுத் தெருவை சேர்ந்த வினோத்குமார்(வயது 28) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது திடீரென ராஜேஷ்குமார்(28) வினோத்குமாரை மது பாட்டிலால் மண்டையிலும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த வினோத்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் பேச முடியாத சூழல் உள்ளதால் அவரது சகோதரர் மனோஜ்குமார் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கும்பாபிஷேகத்திற்கு சென்ற செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் மாயம்
    • வழக்கு பதிந்து ஜெயங்கொண்டம் போலீசார் தேடி வருகின்றனர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (75) இவரது மனைவி உமா (55) அப்பகுதி அருகே கோயில் கும்பாபி ஷேகத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் தியாகராஜன் அக்கம் பக்கத்தில், உறவினர்கள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான உமாவை தேடி வருகின்றனர்.

    • அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1567 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது
    • மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான கிரிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான கிரிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5078 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 707 சிறுகுற்ற வழக்குகளும், 19 சிவில் வழக்குகளும், 11 மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், 2 காசோலை வழக்குகளும், 3 குடும்ப வன்முறை வழக்குகளும், 1 பராமரிப்பு வழக்கும், ஜெயங்கொண்டத்தில் நிலம்கை யகப்படுத்துதல் 596 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது, இதில் குடும்பநல நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன், தலைமைகுற்றவியல் நடுவர் அறிவு, ஜெயங்கொண்டம் சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் லதா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் ராஜசேகர், செந்துறை நீதித்துறை நடுவர் ஆக்ணேஷ்ஜெயகிருபா, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், அரசு வக்கில்கள், வக்கில் சங்க பிரதிநிதிகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், சட்டஆணைக்குழு அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

    • விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
    • பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்(நெகிழி) பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும், அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலவலக வளாகத்தில் இருந்து ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட மாரத்தானை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பையும் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் மாரத்தான் ஓட்டம் நிறைவடைந்தது.

    இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூரை அடுத்த சனிக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 70). விவசாயி. இவருக்கு போளூர் சி.சி. ரோட்டில் 2 கடைகள் உள்ளன. இவர் அவ்வப்போது எலக்ட் ரிக்கல் வேலையும் செய்வார். நேற்று காலையில் போளூர் வந்த அவர் தனக்கு சொந்தமான கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்து விட்டார். இது குறித்து அவருடைய மகன் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன்பேரில் போளூர் போலீசார் விசாரணை

    வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில்

    அரியலூர்:

    அரியலூர் தாமரைக்குளம்: சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், தூய்மையான காற்று கிடைக்கவும் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். குறிப்பாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.

    ×