என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
- விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
- பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து
அரியலூர்
அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்(நெகிழி) பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும், அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலவலக வளாகத்தில் இருந்து ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட மாரத்தானை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பையும் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் மாரத்தான் ஓட்டம் நிறைவடைந்தது.
இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






