என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் ரவுடி கொலையில் வாலிபர் கைது
    X

    அரியலூர் ரவுடி கொலையில் வாலிபர் கைது

    • அரியலூர் ரவுடி கொலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • தலைமறைவாக உள்ள ஒருவரை பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூச்சி என்ற சுதாகர் (வயது 41). பிரபல ரவுடியான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இவருக்கும், குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் பாஸ்கர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் பாஸ்கர் மற்றும் கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூன்ராஜ் ஆகியோர், சுதாகர் வீட்டின் வெளியே நின்றபடி தகாத வார்த்தையால் பேசி, அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.ஆனால் வீட்டிற்குள் இருந்த சுதாகர் வெளியே வராததால் ஆத்திரமடைந்த பாஸ்கரும், அர்ஜூன்ராஜும் வீட்டின் முன் பகுதியில் இருந்த ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த சுதாகர், தனது குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் மீது மிளகாய் பொடியை வீசி, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து சுதாகரின் உடலை தெருவில் வீசிவிட்டு அங்கிருந்து பாஸ்கரும், அர்ஜூன்ராஜுனும் அங்கிருந்து தப்பி சென்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது பற்றி திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெேராஸ்கான் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.தனிப்படை போலீசார் விரைவாக செயல்பட்டு அர்ஜூன்ராஜை கைது ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பாஸ்கரை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர்.

    Next Story
    ×