என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் வருவாய் வட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது
    • அமைச்சர் சா.சி.சிவசங்கர் போட்டிகளை தொடக்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரியலூர் வரு வாய் மாவட்ட அளவிலான இரண்டு நாள்கள் நடை பெறும் குடியரசு தின தடகளப் போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகி த்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகள் இந்த வருவாய் மாவட்ட அள விலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.14, 17 மற்றும் 19 வயது என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படுகிறது.இதில்100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 80 மீட்டர், தடை தாண்டுதல் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 110 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 800 மீ, 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டம்,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எரிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், அரி யலூர் வருவாய் கோட்டா ட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அரியலூர் ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்
    • பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பொன்நகரை சேர்ந்த கருணாநிதியின் மகன் சிவபாரத் (வயது 20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இடையார் பிரிவு சாலை அருகே பின்னால் வானத்திரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மோகன்ராஜ் (37) ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக சிவபாரத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவீன முறை சலவையகங்கள் அமைக்க நிதி உதவி வழங்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் ஆனி மேரி அறிவித்துள்ளார்
    • பத்து பேர் கொண்ட குழுவிற்கு 3 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண்/பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்படிவம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்-16) அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சிறுவலூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி
    • கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கடுகூர் ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கருத்தாழன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், செவ்வேள் தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • 2 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் உல்லாசம் அனுபவித்து திருமணம் செய்ய மறுப்பதாக புகார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கீழசிந்தாமணி பகுதியில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவ ரும், தஞ்சை மாவட்டம், நெடுங்கொள்ளை பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும், கடந்த 2 ஆண்டுகளாக காத லித்து வந்தனர்.இதையடுத்து அவரை திருமணம் செய்து கொள்வ தாக கூறி உடையார்பா ளையத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் அந்த பெண்ணை தங்க வைத்த கார்த்திக் உல்லாசமாக இருந்துள்ளார்.அதன்பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.அதன்பேரில் இன்ஸ்பெ க்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
    • மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபுவனேஸ்வரி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முல்லையூர், தங்கையன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையார், பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியத்திருக்கோணம், குணசேகரன், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தா.பழூர், அமலோற்பவம், தலைமையாசிரியர், பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம், சுகுணா, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சோழன்குடிகாடு, செ.இராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியர் மாண்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற மேற்கண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அரியலூர் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஆசிரியர்கள் தொடர்ந்து இதே போன்று மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணியினை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்சாமி முத்தழகு, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடமிருந்து 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
    • அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது

     அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொது மக்கள் அளித்த மனுக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பயனாளி ஒருவருக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் பணி நியமன ஆணையை வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, தனித்துணை ஆட்சியர் இளங்கோவன், மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டும் என்று அரியலூர் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்
    • 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது,அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 தாலுகா மருத்துவமனைகள், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்க ளில் காய்ச்சலால் பாதிக்க ப்பட்ட நபர்களுக்கு பரிசோ தனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்க ளாகவே மருந்து கடைக ளுக்கு சென்று மாத்திரை களை வாங்கி சாப்பிடக்கூ டாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் மற்றும் அரசு மருத்து வமனைகளுக்கு சென்று டாக்டரை அணுகி தேவை யான சிகிச்சை பெற்று க்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி, ஏர் கூலர், குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒரு முறை பிளீசிங் பவுடரை கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலர வைத்து பிறகு தண்ணீரை நிரப்பி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் சிர ட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்ப டுத்தி, அவைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகாமல் விழிப்புணர்வுடன் பாது காத்து கொள்ள வேண்டும்.தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். 

    • அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சர் தளமாக அறிவிக்க தமிழக அரசு பரிந்துரை
    • இந்த வருடம் பணிகள் விரைவில் மேற்கொள்ள ப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது

    அரியலூர்,

    உலக அளவில் ஈர நில ங்களை பாதுகாக்க ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள ப்பட்டது.ராம்சர் தளங்கள் ஈரா னில் 1971ல் கையெழுத்தி டப்பட்ட ராம்சர் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஈரானில் கையொப்பமிடப்பட்ட ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்,இது ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் புத்தி சாலித்தனமான பயன்பா ட்டிற்கான தேசிய நடவடி க்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்ட மைப்பை வழங்குகிறது.அதன்படி தமிழகத்தில் 14 ராம்சர் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டி யலில் இணைக்கப்பட்டது.தற்போது மாநிலத்தில் உள்ள கரைவெட்டி பறவை கள் சரணாலயம் உள்ளிட்ட மேலும் சில இடங்களை சேர்க்க தமிழக அரசு ராம்சர் தளத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.ராம்சர் தளத்தில் இருப்ப தற்கு அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்ட ஒன்பது அளவுகோல்களில் ஒன்றை யாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதில் கரை வெட்டி பறவைகள் சரணா லயம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் இருக்கும் அல்லது ஆபத்தான உயிரினங்களை ஆதரிப்பது,20 ஆயிரத்துக்கும் மேற்ப ட்ட நீர்ப்பறவைகள் இரு ப்பது, அல்லது மீன்கள், முட்டையிடும் இடம் என பல அம்சங்களை உள்ளட க்கியதாக உள்ளது.மாநிலத்தில் 82 நீர்ப்ப றவைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சரணாலயம் அடிப்படை யானது.

    இந்த சரணாலயம் புலம் பெயர்ந்த நீர் பறவைகளுக்கு மிக முக்கியமான நன்னீர் உணவளிக்கும் இடமாகும். இந்த நீர் நிலைக்கு வரும் முக்கியமான பார்வை யாளர்களில் ஆபத்தில் இருக்கும் பார் ஹெட் வா த்தும் உள்ளது. அரியலூர் மாவட்டத்தின் அதிகா ரப்பூ ர்வ இணைய தளத்தி ன்படி, பறவைக ளைப் பார்ப்பதற்கு சரணால யத்திற்குச் செல்ல சிறந்த நேரம் அக்டோபர் - மார்ச் மாதங்களாகும்.ஏற்கனவே இந்த பறவை கள் சரணால யத்தை மேம்ப டுத்த மாநில அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, துறை மானியத்தின் போது, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.இந்த வருடம் பணிகள் விரைவில் மேற்கொள்ள ப்படும் என எதிர்பார்க்க ப்படுகிறது.இதற்கிடையே கரைவெ ட்டி பறவைகள் சரணால யத்தை ராம் சர் தளத்தில் சேர்க்க பரிந்துரை செய்து ள்ள நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர்மதிவேந்தன், போக்குவ ரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், முதன்மை தலைமை வனப் பாதுகா வலர் சுப்ரத் மொகபத்ரா, கலெக்டர் அன்னே மேரி ஸ்வர்ணா ஆகியோருடன் பறவைகள் சரணாலயத்தி ற்குச் சென்று வளர்ச்சி த் தேவைகள் மற்றும் வசதிக ளை மதிப்பீடு செய்தனர்.காரைவெட்டி பறவை கள் சரணாலயத்தை புன ரமைத்து புதியதாக மாற்ற தேவையான அனை த்து நடவடிக்கைகளும் எடு க்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

    • மீன்சுருட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • நிதி ஒதுக்கியும் புதிய கட்டிடம் கட்ட தாமதம் ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

    அரியலூர், 

    மீன்சுருட்டியில் 2 அரசு விடுதிகள் பழுதடைந்த தால் தனியார் விடுதிக்கு மாண வர்கள் மாற்றப்ப ட்டுள்ள னர்.

    அரியலூர் மீன்சுருட்டி யில் ஆதி திராவிடர் நல ஆண்கள் மாணவர்கள் விடுதி 1996 முதல் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படி ப்பை மேற்கொண்டு வருகி ன்றனர்.இந்நிலையில் விடுதி கட்டிடம் மிகவும் பழமை யாகி, பழுதடைந்த நிலைக்கு சென்றதால், விடுதியில் தங்கி இருந்த மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 2020 டிசம்பர் மாதம் மீன் சுருட்டியில் உள்ள தனியார் கட்டிடத்தில் தங்க வைக்கப்ப ட்டு உள்ளனர்.

    மாணவர் விடுதிக்காக இந்த தனியார் கட்டிடத்திற்கு மாதம், மாதம் ரூ.9 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தனியார் கட்டிடத்தில் 30 மாணவர்கள் மட்டுமே தங்கக்கூடிய அள விற்கு இட வசதி உள்ளது.ஆனால் 60 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள தா ல், பள்ளி மாணவ ர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே, இங்கே தங்கி உள்ளனர். இதனால் பலர் தங்களது வீடுகளுக்கு அடிக்கடி செல்லும் நிலை ஏற்படுகிறது. புதிய தங்கும் விடுதி கட்டுவதற்கு மாநில அரசு ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிக ளின் மெத்தன போக்கால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதே போல மீன்சுரு ட்டில்யில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிற்படுத்தப்ப ட்டோர் நலத் துறை சார்பில் மாணவர் விடுதி பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த விடுதியில் சுமார் 50 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படிப்பை தொடர்ந்து வந்தனர். பழைய கட்டிடம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி கடந்த 2023 மார்ச் மாதம் பஞ்சாயத்து கட்டிடத்திற்கு விடுதி மாற்றப்பட்டது.

    இரண்டு விடுதிகளிலும் உள்ள மாணவர்கள் அடிப்ப டை வசதிகள் இல்லாததால் சிரமங்களை எதிர்கொள்கி ன்றனர், சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மாணவர்களின் நலன் கருதி இரண்டு புதிய விடுதிகள் கட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை.

    போதிய வசதி இல்லாத காரணத்தால் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் குளியலறை மற்றும் கழி வறை செல்வதற்கு மாணவ ர்கள் நீண்ட நேரம் காத்திரு க்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு தாமத மாக செல்லுதல் உள்ளிட்ட தேவையற்ற சிரமங்கள் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால், இரவு நேரங்களில் மாணவர்க ளுக்கு நிம்மதியான தூக்க மும் கிடைப்பதில்லை.

    மேலும் தனியார் கட்டிடத்திற்கான வாடகையை ஏப்ரல் மாதம் முதல் அரசு செலுத்தாததால் கட்டிட உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த விடுதிகளுக்கு பதிலாக புதிய விடுதிகள் கட்ட உடனே நடவடிக்கை மேற்கெர்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான தேர்வு அரியலூரில் 233 பேர் எழுதினர்
    • 233 பேர் தேர்வெழுதிய நிலையில் 140 பேர் எழுத வரவில்லை

    அரியலூர்,

    மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெறுவதற்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது.தேர்வு எழுதுவதற்காக அரியலூர் மாவட்டத்தில் 373 பேர் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 233 பேர் கலந்து கொண்டனர். 140 பேர் எழுத வரவில்லை. அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தேர்வின்போது ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் உள்ள தையல்நாயகி உடனுறை சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • திருவாசகம் முற்றேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழன் கட்டி வழிபட்ட ஐந்து சிவாலயங்களில் ஒன்றான தையல்நாயகி உடனுறை சென்னீஸ்வரர் கோவிலில் நேற்று முழுவதும் திருவாசகம் முற்றேற்றுதல் நடைபெற்றது.ராஜேந்திர சோழன் ஆயிரம் வருடங்களுக்கு முன் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த போது சிவனின் ஐந்து முகத்திற்கு எடுத்துக் காட்டாக, நமசிவாயம் என்ற பஞ்சாக்ஷர ஐந்து எழுத்துக்களின் உதாரணமாக, அரியலூர் மாவட்டத்திலேயே பழமையான சிவாலயங்கள் ஆக விளங்கி வரும் ஜெயங்கொண்டம் பெரியநாயகி உடனுறை கழுமலைநாதர், சௌந்தரநாயகி உடனுறை பழமலைநாதர், சௌந்தரநாயகி உடனுறை சோழிஸ்வரர். தையல்நாயகி உடனுறை சென்னீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆலீஸ்வரர் முடையார் என 5 சிவாலயங்களை கட்டினார். இக்கோவில்களில். தினமும் மாலை வேளையில் சைவ தமிழ் வேதம் என்று கூறும் சிவனடியார்கள் நாயன்மார்களில் நால்வர்களான. அப்பர், திருஞானசம்பந்தர், மணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகியோர்களின் பாடல்களை பாடி வழிபடுவது வழக்கம். தையல்நாயகி உடனுறை சென்னீஸ்வரர் கோவிலில் நேற்று சிவனடியார்கள் ஒன்று கூடி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை திருவாசகத்தின் அனைத்து பாடல்களை ஒன்றன்பின் ஒன்றாக பாடி திருவாசகம் முற்றேற்றுதலில் ஈடுபட்டனர்.

    ×