என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
    • அமைச்சர் சிவசங்கர் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர், உடையார்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.42.36 இலட்சம் ம திப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, இலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலையூர் - கண்டியங்கொல்லை சாலை அமைக்கும் பணி, பெரியாத்துக்குறிச்சியில், தேசிய சுகா தார திட்டத்தின் கீழ் ரூ. 30.00 இலட்சம் மதிப்பீட்டில்ஆ ரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் ப ணி,ஓலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ஓலையூர் - அழகாபுரம் சாலை அமைக்கும் பணி, திருக்கோணத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் மதிப்பீட்டில் சிலம்பூர் - திருக்கோணம் சாலை அமைக்கும் பணி, விளந்தையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூபாய் 28.00 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கு ம் பணி, விளந்தையில், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியா ய விலைக்கடை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, நா கம்பந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 5.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, இடையக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில்,எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 5.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

    • அரியலூர் அரசு கல்லூரிகளில் சமூக நீதி நாள் அனுசரிக்கப்பட்டது
    • சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முன்னதாக இந்த சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது.அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து, சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வெ.கருணாகரன், மேரி வைலட் கிருஸ்டி ஆகியோர் செய்திருந்தனர்.இதே போல் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், முதல்வர் ரமேஷ் தலைமையில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.
    • தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ஜெயங்கொண்டம்:

    பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் சீர்காழியில் நடைபெ ற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் புறப்பட்டார். காரை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் ஜெயங்கொண்டம் வாரியாங் கோவில் பகுதியில் வந்த போது 2 வாலிபர்கள் அவரது காரை திடீரென வழிமறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.

    பின்னர் அவரது கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயனுக்கு முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்தது தெரியவந்தது. பின்னர் தப்பி ஓடிய இலையூர்மேலவழி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சிவா (வயது 24) என்பவரை கைது செய்தனர். ரோட்டு தெருவை சேர்ந்த பூபாலன் என்பவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது.
    • வயலில் 4 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதில் உற்பத்தியாகும் முருங்கை காய்களை கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார்.

    தற்போது முருங்கை பூவும் பிஞ்சுமாய் காய்த்து வருகிறது. கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்பட்ட முருங்கைக்காயை விற்பனைக்காக கும்பகோணம் சந்தைக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு ஒரு கிலோ முருங்கை காய்க்கு ரூ. 2 விலை நிர்ணயம் செய்திருந்தார்கள். இது பேர் அதிர்ச்சியாக இருந்தது.

    அடுத்த சில நாட்களில் முருங்கைக்காயின் விலை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பறிக்கப்பட்ட முருங்கைக்காயை சந்தைக்கு கொண்டு சென்ற குமாருக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

    2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விவசாயி முருங்கை வயலுக்கு வந்து பறிக்கும் கூலிச் செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்பனையாகவில்லையே என விரக்தியில் பூவும் பிஞ்சுமாய் காயுமாக இருந்த முருங்கையை டிராக்டர் கொண்டு அழிக்க முடிவு செய்தார்.

    பின்னர் அதிரடியாக முருங்கை மரத்தை முழுவதுமாக வேரோடு அழித்து உழவு செய்துள்ளார்.

    இதுகுறித்து விவசாயி குமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் முருங்கைக்கு ஆதார விலை என்று அரசு நிர்ணயிக்காததால் தற்போது இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய்க்கு கூட சந்தையில் வாங்குவதற்கு ஆள் இல்லை.

    இந்த விலை முருங்கைக்காயை பறிப்பதற்கான கூலி செலவுக்கு கூட கட்டுபடியாகவில்லை. இந்த வயலில் 4 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது. வேறு வழி இல்லாததால் இதனை தற்போது அழித்து வருகிறேன். வருங்காலங்களில் இது போன்ற சூழல் விவசாயிக்கு ஏற்படாத வகையில் முருங்கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என கையெடுத்து கும்பிடுகிறார்.

    அரியலூரில் சம்பவம்விலை போகாததால் பூத்து குலுங்கிய முருங்கை மரங்களை வேரோடு அழித்த விவசாயி உருக்கமாக பேசும் வீடியோ வைரல்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்ற னர். குறிப்பாக தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிக ளில் விவசாயிகள் முருங்கை யை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதில் உற்பத்தியாகும் முருங்கை காய்களை கும்ப கோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார்.

    தற்போது முருங்கை பூவும் பிஞ்சுமாய் காய்த்து வருகிறது. கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்பட்ட முருங்கைக்காயை விற்பனை க்காக கும்பகோணம் சந்தை க்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு

    ஒரு கிலோ முருங்கை காய்க்கு ரூ. 2 விலை நிர்ண யம் செய்திருந்தார்கள். இது பேர் அதிர்ச்சியாக இருந்தது.

    அடுத்த சில நாட்களில் முருங்கைக்காயின் விலை அதிகரிக்கும் என்ற எண்ண த்தில் தொடர்ந்து பறிக்க ப்பட்ட முருங்கைக்காயை சந்தைக்கு கொண்டு சென்ற குமாருக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

    2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கை க்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது.இதனால் விரக்தி அடைந்த விவசாயி முருங்கை வயலுக்கு வந்து பறிக்கும் கூலிச் செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்ப னையாகவில்லையே என விரக்தியில் பூவும் பிஞ்சுமாய் காயுமாக இருந்த முருங்கையை டிராக்டர் கொண்டு அழிக்க முடிவு செய்தார்.

    பின்னர் அதிரடியாக முருங்கை மரத்தை முழுவ துமாக வேரோடு அழித்து உழவு செய்துள்ளார்.

    இதுகுறித்து விவசாயி குமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் முருங்கை க்கு ஆதார விலை என்று அரசு நிர்ணயிக்காததால் தற்போது இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய்க்கு கூட சந்தையில் வாங்கு வதற்கு ஆள் இல்லை.

    இந்த விலை முருங்கை க்காயை பறிப்பதற்கான கூலி செலவுக்கு கூட கட்டுபடி யாகவில்வை. இந்த வயலில் 4 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது. வேறு வழி இல்லாததால் இதனை தற்போது அழித்து வருகிறேன். வருங்கால ங்க ளில் இது போன்ற சூழல் விவசாயிக்கு ஏற்படாத வகையில் முருங்கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என கையெடுத்து கும்பிடுகிறார்.

    அரியலூர் அருகே சம்பவம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு ஊழியரை தாக்கிய 9 பேர் கைதுமற்றொரு சம்பவத்தில் 4 பேர் மீது வழக்கு

    அரியலூர். 

    அரியலூர் மாவட்டம் நெல்லி தோப்பு கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலை யம் இயங்கி வருகிறது. இங்கு கோடாலி கருப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த குணசே கரன் (வயது 42) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    குண்டவெளி காலனி தெருவை சேர்ந்த பிரதீப் (20), பிரசாத் (20) ஆகியோர் தங்க ளது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அதற்கு குணசேகரன் பணம் கேட்டதற்கு பிரதீப் கூகுள் பேயில் பணம் அனுப்பியதாக கூறியுள்ளார்.

    ஆனால் குணசேகரன் பணம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தக ராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது சொக்கலிங்க புரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த கலையரசன் (40), திலகர் (45) ஆகியோர் என்ன பிரச்சினை என்று கேட்டுள்ள னர். அதற்கு பிரதீப், பிரசாத் ஆகியோர் தகாத வார்த்தை களால் திட்டியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களது உறவினர்க ளுக்கு போன் செய்து ஜெயசீ லன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து குணசேகரன், திலகரை தாக்கி யுள்ளனர்.

    இதுகுறித்து குணசேகரன், கலையரசன், திலகர் ஆகி யோர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் க பிரதீப், பிரசாத், விஜேந்தி ரன் (20), ராஜ்குமார் (20) உள்பட 9 பேரை கைது செய்த னர்.

    இருதரப்பினர் இடையே மோதல்

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள இடையத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 38), வெளிப்பிரிங்கியம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (24). சம்பவத்தன்று பெரிய திருக்கோணம் மெயின் ரோட்டில் பால்ராஜுக்கு சொந்தமான டிப்பர் லாரியை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த சூர்யா டிப்பர் லாரியை தடு த்து நிறுத்தி காலை நேரத்தில் மெயின் ரோட்டில் டிப்பர் லாரி செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பால்ராஜ், அவரது நண்பர் ராவணேஸ்வரன் மற்றும் சூர்யாவின் தந்தை காமராஜ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்ட னர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்ச ந்திரன் மோதலில் ஈடுபட்ட பால்ராஜ், ராவணேஸ்வரன், சூர்யா, காமராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.36.20 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
    • அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56,070 ரொக்கம், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் சில போலி நியமனை ஆணை கடிதங்களை பறிமுதல்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.36.20 லட்சம் பணம் மோசடி செய்து, போலி ஆணை வழங்கிய தம்பதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள கண்டமங்கலம், குமிளங்காட்டு தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(43). இவரது வீட்டுக்குச் சென்ற உறவினரான அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த விழபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(42), இவரது மனைவி மதியழகி(35) ஆகியோர் பணம் கொடுத்தால் தங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் வங்கி பரிவர்த்தனை மூலமாக ரூ.4,90,000}மும், ரொக்கமாக ரூ.4 லட்சமும் பெற்றுக் கொண்டனர்.

    மேலும், ஊரில் யாராவது படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தால் அழைத்து வாருங்கள் அவர்களுக்கும் வேலை வாங்கித் தருவதாக அந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய பிரபாகரன், தமது ஊரைச் சேர்ந்த பிரேம்குமார், முருகன், ரகுபதி, சண்முகசுந்தரம், கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரைச் சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரகாஷிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

    இவர்களிடம் சிமென்ட் நிறுவனம், சேலம் ஆவின் நிறுவனம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அஞ்சல் துறை போன்ற இடங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27,10,000}யை பெற்றுக் கொண்டார்.

    இதையடுத்து பிரகாஷ், பிரபாகரனுக்கும், கவிமணிக்கும் அஞ்சல் துறையில் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் அஞ்சல் துறையில் விசாரித்த போது, பணி நியமன ஆணை போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக பிரபாகரன், பிரகாஷிடம் கேட்டபோது இது பற்றி வெளியில் ஏதாவது புகார் கொடுத்தால் உங்களை வெட்டி கொலை செய்து விடுவதாக என்று மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து பிரபாகரன் கடந்த 29.9.2022 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, பிரகாஷ் மற்றும் அவரது மனைவி மதியழகி ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி, உதவி ஆய்வாளர்கள் ரவி, முருகன் உள்ளிட்ட காவல் துறையினர், ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷையும், அரியலூர் ராஜீவ் நகர் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த பிரகாஷ் மனைவி மதியழகியையும் புதன்கிழமை இரவு கையும் களவுமாக பிடித்து, விசாரணை மேற்கொண்டு வியாழக்கிழமை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56,070 ரொக்கம், 3 ஏடிஎம் கார்டுகள் மற்றும் சில போலி நியமனை ஆணை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கடன் மேளாவில் கலந்து கொள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு அைழப்பு
    • கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களிலும் கடன் மேளா நடத்தப்படுகிறது என்று மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நுற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் கொண்டா டப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூட்டுறவு துறை சார்பில் கடன் மேளா நடத்தப்படுகிறது.

    அதன்படி இன்று(செப்.15) அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் உள்ள 24 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், செப்.22 ஆம் தேதி செந்துறை, ஜெய ங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஒன்றிய ங்களில் உள்ள 40 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன் மேளாக்கள் நடைபெற்றது.

    இம்மேளாக்களில் வைப்புகள் திரட்டுதல், பயிர்க்கடன், சுய உதவிக் குழுக் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், டாப்செட்கோ கடன். டாம்கோ கடன், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளி கடன், மத்திய காலக் கடன் மற்றும் தான்ய ஈட்டுக்கட ன்களு க்கான விண்ணப்ப ங்கள் விநியோகி த்தல், புதிய சேமிப்பு கணக்குகள் துவங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டம் கடன் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.

    எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • உடையார்பாளையம் புது பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்திரை (வயது 48). இவர் மைக் செட் கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் மணகெதி கிராமத்திற்கு நேற்று இரவு 7 மணியளவில் சின்னத்திரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையார்பாளையம் புது பஸ் நிலையம் அருகே ஒருவர் வழியைமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சின்னத்திரை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆண்டிமடத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • போலீசாரின் திடீர் ஆய்வில் சிக்கியது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதிகளில் பெட்டிக்கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பதாக ஆண்டிமடம் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீரென கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு தடை செய்த ஹான்ஸ் 50 பண்டல் கூல் லீவ் 62 பண்டல் விமல் சைடு பாக்கு உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பொருளின் மதிப்பீடு சுமார் ரூ.40 ஆயிரத்திற்கு மேலாக இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.

    • மத்திய அரசை கண்டித்து அரியலூரில் சி.பி.ஐ. கட்சியினர் மறியல் போராட்டம்
    • மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்

    அரியலூர்,

    மத்திய அரசின் முறைகேடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படாமல் ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிப்பது, நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்பது, மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தாதது ஆகியவற்றை கண்டித்து அரியலூர் அண்ணாசிலையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலகமாக சென்றனர். கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்ற அவர்களை காவல் துறையினர் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் அரியலூர் டி.ராயதுரை, திருமானூர் மு.கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலர் சொ.ராமநாதன், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது
    • அலுவலகங்கள் காலியாக கிடந்ததால், பணிகள் பெரும்பாலும் முடங்கின

    அரியலூர்,

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிப்புரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் கணினி உதவியாளர் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரியகாலத்தில் வழங்க வேண்டும்ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.இதனால் அரியலூர், திருமானூர், செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் 80 சதவீத பணியாளர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் காலியாக கிடந்தது. பணிகள் பெரும்பாலும் முடங்கின.

    ×