search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Starting"

    • புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ரத வீதியில் பூமிக்குள் புதைக்கப்பட்ட மின்கம்பி பயன்பாட்டுக்கு வந்தது
    • அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோடும் வீதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில், மின்கம்பிகளை அகற்றி ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதைவட கம்பி அமைக்கப்பட்டுள்ளதை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு தமிழகம் முழுவதும் தேரோடும் வீதிகளில் மின்கம்பிகளை அகற்றி புதைவட கம்பி அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் தேர் திருவிழா நாளன்று தேர் செல்லும் போது எவ்வித மின்சார இடையூறுமின்றி தேர் செல்வதற்கு வழிவகை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, இந்துசமய அறநிலையத்துறை சார்பில், திருவப்பூர் ஈஸ்வரன் திருக்கோவில் திருப்பணிக்காக ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய சிறப்பு வழிபாடு நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத்தலைவர்லியாகத் அலி, செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவபாஞ்சாலன், உதவி மின்பொறியாளர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், வட்டாட்சியர் கவியரசன், நகர்மன்ற கவுன்சிலர் கனகம்மன் பாபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடைபெற்றது
    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உலக சுற்றுலா தினவிழா- 2023 முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் விழிப்புணர்வுசுற்றுலா பயணத்தை சுற்றுலாத்துறையின் மூலமாக கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து புகழிமலை சமணர்படுக்கை, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசு அருங்காட்சியகம், இராயனூர் மைசூர் போர் நினைவுதூண், திருக்காம்புலியூர் அம்மா பூங்கா மற்றும் வைகைநல்லூர் குண்டாங்கல் சமணர்சிற்பம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டது .இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை மாணவ, மாணவியர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அறிவு சார்ந்த நல்ல தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

    • புகழூர் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணி தொடங்கியது
    • புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டுக்கு உட்பட்ட மாத்யூ நகர் முதல் ராம் நகர் வரை (மாத்யூ நகர் விரிவாக்கம்) பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.புகழூர் நகராட்சி 16-வதுவார்டுக்கு உட்பட்ட செந்தூர் நகர், மீனாட்சி நகர், மோகனா நகர் பகுதி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் செல்வகுமரன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கணினி துறையில் 2 திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டது
    • இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமியின் (ஐ.சி.டி. அகாடமி ) சார்பில் செப்டம்பர் 30-ந் தேதி மதுரையில் பிரிட்ஜ் 2023-ன் 52-வது பதிப்பு மாநாடு நடைபெற்றது.டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல் என்பதே இந்த கருத்தரங்கின் கருப்பொருள் ஆகும். எனவே இதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கல்வி சேவையின் மூலம் சமூக வ ளர்ச்சிக்கு முக்கிய ப ங்காற்றும் மிக சிறந்த ஆளு மையாக விளங்குபவர். புதிய தொ ழில்முனைவோர்களையும், புதிய, சிறந்த கண்டுபி டிப்பாளர்களையும் உருவாக்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருபவர். இந்த மாநாட்டில் வேந்தரின் வழிகாட்டுதலின்படி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் பங்களிப்புடன் கணினி துறையில் 2 எக்சலென்ஸ் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும். கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல பெரிய சர்வதேச கம்பெனிகளில் பணியில் சேர மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்க்காக அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் வழங்கப்படும் "கிளவுட் ஆர்கிடெக்ட்டிங்" என்ற பயிற்சி வகுப்பும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் வழங்கப்படும் மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ. டேட்டா அனலிஸ்ட் என்ற பயிற்சி வகுப்பும் ஐ.சி.டி. அகடெமியின் பங்களிப்புடன் இந்த மையத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் சார்பாக, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொழில் நிறுவங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் , மனித வளமேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் மூத்த கல்வியாளர்கள்களின் பயனுள்ள உரைகளை கேட்க இந்த குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில், நாம் அனைவரும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் பேசிய அனைவரும் சுட்டிக்காட்டினர். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

    • அரியலூர் காதி கிராப்ட்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது
    • தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடக்கி வைத்தார்

    அரியலூர்,

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அரியலூர் கதர் மற்றும் கிராம பொருள்கள் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடக்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு அரியலூரில் கதர் மற்றும் கிராம பொருள்கள் ரூ.33.59 லட்சத்துக்கு விற்பனையாகின. நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அவர் அங்குள்ள மகாத்மாகாந்தி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து கு.சின்னப்பா எம்.எல்.ஏ., காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் விற்பனையாளர்கள் நாகராஜன், பூதபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கியில் 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவ ட்டம் மணமேல்குடி அம்மா பட்டினத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடாசுற்று ச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் கடற்கரை பகுதியில் திருவ ள்ளுர் முதல் கன்னியா குமரி வரை 14 மாவட்டங்க ளில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரத்தில் 1 கோடி பனை விதைகள் நட ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை சீனியார் அன்பறிவகம், தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் எஸ். ரகு பதி, மெய்ய நாதன் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டு நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்த னர்.முன்னதாக பனை மரம் குறத்தும் அதன் பயன்பாடு மற்றும் பராமரித்தல் குறித்து ம் உறுதிமொழி ஏற்கப்ப ட்டது.

    • ஜெயங்கொண்டம் கோ ஆப்டெக்ஸ்-சில் தீபாவளி விற்பனை தொடங்கியது
    • மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    ஜெயங்கொண்டத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,

     இது குறித்து கலெக்டர் கூறும் போது, நிகழாண்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு, புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் வந்துள்ளன.

    • அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.அரியலூர் ஒன்றியம் ராயம்புரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் ராயம்புரம், பொட்டவெளி சாலை மேம்படுத்துதல், சிறுபாலம் திரும்ப கட்டுதல் மற்றும் 129 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.தொடர்ந்து செந்துறை ஒன்றியம், வாளரக்குறிச்சி கிராமத்தில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இரும்புலிக்குறிச்சி, பாளையபாடி , மணகெதி வரையிலும், நாகல்குழி ஊராட்சியில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் உஞ்சினி , வாரியங்காவல் வரையிலும் சாலையை அகலப்படுத்தல் பணியையும், அதே போல் இலை க்கடம்பூர் ஊரா ட்சியில் ரூ.1 கோடி மதிப்பீ ட்டில் செந்துறை , மாத்தூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியையும் தொடக்கி வைத்த அமைச்சர் சிவ சங்கர், பணியை தரமான பொரு ள்களை கொண்டு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகி த்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் சிட்டிபாபு, ராஜா, செந்துறை வட்டாட்சியர் பாக்கியம்விக்டோரியா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது
    • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை தொகுதி மேம்பாட்டு நிதியில் தொடக்கம்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை தொகுதி மேம்பாட்டு நிதியில் வளவம்பட்டி ஊராட்சியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா, அரவம் பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் கட்டிட பூமி பூஜை, கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கான ரூ.10 லட்சம் மதிப்பிலான நிழற்குடை பூமி பூஜை,கந்தர்வகோட்டை பணிமனையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தரைத்தளம் அமைத்தல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.விழாவில் புதுக்கோட்டை தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாமா பாலமுருகன், தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார், துணைத்தலைவர் அருண் பிரசாத்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமார், தாமரை. பழனிவேலு,சித்திரை வேல், ராமையன், இளையராஜா அரசு ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    • ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
    • அமைச்சர் சிவசங்கர் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர், உடையார்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.42.36 இலட்சம் ம திப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, இலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலையூர் - கண்டியங்கொல்லை சாலை அமைக்கும் பணி, பெரியாத்துக்குறிச்சியில், தேசிய சுகா தார திட்டத்தின் கீழ் ரூ. 30.00 இலட்சம் மதிப்பீட்டில்ஆ ரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் ப ணி,ஓலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ஓலையூர் - அழகாபுரம் சாலை அமைக்கும் பணி, திருக்கோணத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் மதிப்பீட்டில் சிலம்பூர் - திருக்கோணம் சாலை அமைக்கும் பணி, விளந்தையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூபாய் 28.00 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கு ம் பணி, விளந்தையில், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியா ய விலைக்கடை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, நா கம்பந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 5.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, இடையக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில்,எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 5.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
    • எம்.எல்.ஏ. இளங்கோ தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை இளங்கோ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.வேட்டமங்கலம் ஊராட்சியில் ஓலப்பாளையம் முதல் அதியமான்கோட்டை வழியாக மூலிமங்கலம் பிரிவு வரை ரூ. 63 லட்சத்து 18ஆயிரம் மதிப்பிலும், ஓகேஆர் நகர் முதல் நல்லிக்கோவில் வரை ரூ.12லட்சத்து 84ஆயிரம் மதிப்பிலும், சேமங்கியில் இருந்து காமராஜ் நகர் வழியாக ஓகேஆர் நகர் வரை ரூ. ஒரு கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், குளத்துப்பாளையத்தில் இருந்து ஒரம்புபாளையம் வழியாக கொங்கு நகர் வரை ரூ.16லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலும், எம்ஜிஆர் நகர் முதல் செட்டிதோட்டம் வழியாக கவுண்டன்புதூர் வரை ரூ.49 லட்சத்து 76ஆயிரம் மதிப்பிலும், செல்வநகரில் ரூ.23லட்சத்து 64ஆயிரம் மதிப்பிலும், கோம்புப்பாளையம் ஊராட்சி முத்தனூரில் ரூ.9 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், முனிநாதபுரத்தில் ரூ.5லட்சத்து64ஆயிரம் மதிப்பிலும், கோம்புப்பாளையத்தில் ரூ.14 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலும்,என்.புகளூர் ஊராட்சி தவிட்டுப்பாளையம் முதல் கட்டிபாளையம் வரை ரூ. 20 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 83ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது . இதில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கலந்து கொண்டு தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சித் மன்ற தலைவர்கள் கோம்புபாளையம் பசுபதி, என். புகழூர் மதிவாணன், வேட்டமங்கலம் ராமச்சந்திரன், திருக்காடுதுறை அசோக்குமார், ஊராட்சி செயலர்கள் வேட்டமங்கலம் ரகுபதி, கோம்புப்பாளையம் பாலு,என்.புகளூர் இந்து மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூரில் உள்ள 263 அரசு பள்ளிகளில் தொடங்கப்படுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளிகளில் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளிக்கு விரிவுப்ப டுத்தப்பட்டது. இதனால் அந்த பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 180 மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். தற்போது விரிவுப்ப டுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 263 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கான சோதனை முயற்சி பெரம்பலூர் மாவட்டத்தில் விரிவுபடுத்தப்படவுள்ள பள்ளிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×