என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் திடீர் என மழை பெய்தது
    • திடீர் மழையால் பொமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    அரியலூர்,

    அரியலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். இந்தநிலையில் அரியலூரில் நேற்று மாலை சுமார் 4.10 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் சிறிது நேரத்தில் பெரிய அளவில் மழையாக 4.30 மணி வரை பெய்தது. திடீரென பெய்த மழையால் சாலையில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. இந்த திடீர் மழையால் பொமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த திடீர் மழையால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக சாலையோரம் போடப்பட்டிருந்த தரைக்கடை வியாபாரிகளும், அங்கு பொருட்களை வாங்க வந்திருந்தவர்களும் அவதியடைந்தனர். அதன்பின்னர் இரவு 8.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    • அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் நாளை மறுநாள் மின்தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

    அரியலூர், 

    கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், வைப்பம், கல்லக்குடி, கருவிடச்சேரி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என திருமானூர் இயக்குதலும், காத்தலும் உதவி மின் செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் புதுமார்க்கெட்டில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளைடிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

     அரியலூர் புதுமார்க்கெட் 3-வது தெருவை சேர்ந்தவர் குரு (வயது 39). இவர் உறவினர் வீட்டு விசே ஷத்திற்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவி ட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டி ற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்க ப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த குரு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவ ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்
    • ‘நீட்’ தேர்வில் கவர்னர் கையெழுத்திடாததை கண்டிக்கும் விதமாக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி

    ஜெயங்கொண்டம், 

    தஞ்சாவூர் மாவட்டம் ஒழுகச்சேரி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அணைக்கரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையிலான நிர்வாகிகள் 10 பேர் 'நீட்' தேர்வில் கவர்னர் கையெழுத்திடாததை கண்டிக்கும் விதமாக கவர்னருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்தனர்.

    இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன், ஒன்றிய பொருளாளர் சக்கராயுதம் உள்ளிட்ட 9 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்சுருட்டி போலீசார் கைது செய்தனர்.

    • தா.பழூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் பலியானார்
    • தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 65). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தனது அண்ணன் மகன் ராஜ்குமார் (45) வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் ஒரே நேரத்தில் 30 மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆண்டிமட விவசாயிகளுக்கு கூழ் மரம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
    • தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆண்டிமடம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் நிலக்கரி சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, திரும்ப விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்களில் குறுகிய காலத்தில் கூழ் மரம் சாகுபடி செய்து அதிக வருமானத்தை ஈட்டும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சார்பாக தேவனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் பங்கேற்று வனத்துறை திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன உதவி பொதுமேலாளர் ரவி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் உதவி பொது மேலாளர் ரவி, முதுநிலை மேலாளர் செழியன், துணை மேலாளர் பிரசாத் மற்றும் தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சவுக்கு, தைலமர மரக்கன்றுகள் கருத்தரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    • அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொறியியல் ஆய்வகம் திறப்பு
    • அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு வேளாண் ஆய்வகத்தினை திறந்து வைத்து பேசினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொறியியல் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு வேளாண் ஆய்வகத்தினை திறந்து வைத்து பேசினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கு.தமிழரசு, வேளாண் பொறியியல் துறைத் தலைவர் ம.அப்பூதி அடிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

      அரியலூர், 

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவ ட்டம், செந்துறை அரசு பெண்கள் மே ல்நிலைப் பள்ளியில், மாவ ட்ட நிர்வாகம் ,மாவட்ட வே லைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டல் மை யம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வே லைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமனச் சா ன்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.முகாமுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அரி யலூர் எம்.எல்.ஏ கு.சின்ன ப்பா முன்னிலை வகித்தார். இந்த வேலைவாய்ப்பு முகா மை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார். பின்னர் பணி நியமனச் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில்,இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு 102 நிறுவனங்கள் வந்திரு க்கின்றன. முகா முக்கு வந்த 2,063 பேர் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து ள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வே லைவாய்ப்பு வழங்க முடியா து. முகாமில் கலந்து கொ ண்டவர்களில் 297 நபர்க ளுக்கு வேலை வாய்ப்பு க்கான ஆணை வழங்கப்ப டுகிறது. மேலும் 512 நபர்கள் 2-ம் கட்ட நேர்முக தேர்வு க்குகு தேர்வாகி யுள்ளனர். மீதம் இருப்பவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறுகின்ற இதே போன்ற வேலைவாய்ப்பு முகாம்க ளில் நாம் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள நம்மை தயார் செய்ய வே ண்டும. இந்த அனுபவத்தின் மூ லமாக அடுத்த நேர்கா ணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளி க்கும் வகையில் நாம் நம்மை தயார் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் தொழில் முத லீட்டு மாநாடு நடைபெற இரு க்கின்றது. பல நாட்டைச் சேர்ந்த தொழில் நிறு வனங்களை பங்கேற்க செய்து தமிழகத்தில் வேலை வா ய்ப்பு பெறுகின்ற வகை யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். குன்னம் தொகுதியில் சிப்காட்டில் தைவான் நாட்டைச் சேர்ந்த கா லனி தயாரிக்கும் தொ ழிற்சாலை வரவுள்ளது. அ தனையொட்டி 5,000 முதல் 10,000 வேலை வாய்ப்பு பணிகள் கிடைக்க உள்ளது என்றார். இம்முகாமில் ஊ ரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மா வட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.க லைச்செ ல்வன், செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மூ.வினோ த்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விவரங்களை அறிய உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது

    அரியலூர்,

    மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் வருகிற 19-ந்தேதி முதல் இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறியவும், அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்கவும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.அதன்படி, அரியலூர் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) குமரையா - 9626725241, 04329228151, அரியலூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோவிந்தராசு - 9843869337, 04329222058, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் உமாசங்கரி -7598720601, 04331245352, அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் (பொறுப்பு) பசுமதி - 9786326209, 04329222062.ஜெயங்கொண்டம் தலைமையிடத்து துணை தாசில்தார் அண்ணாதுரை- 9095689998, 04331-250220, செந்துறை தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வக்குமார் - 9025277223, 04329242320, ஆண்டிமடம் தலைமையிடத்து துணை தாசில்தார் பார்த்திபராஜன் - 9841304410, 04331299800 ஆகியோரை தொடர்பு கொண்டு பயனாளிகள் தங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த உதவி மையங்கள் வருகிற 30-ந் தேதி வரை செயல்படும். விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றால் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.விடம் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம்.மேலும், இந்த திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு வருகின்ற குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புகளை நம்பி ஓ.டி.பி. எண்கள் மற்றும் இதர விவரங்களை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். இதுபோன்ற விவரங்கள் கேட்கப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
    • விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    அரியலூர்,

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் உசேன்(வயது 26). இவர் வி.கைகாட்டியில் அரியலூர் சாலையில் இருசக்கர வாகனங்களின் இருக்கை கவர் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் உசேன், டீ வாங்கிக்கொண்டு அரியலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உசேனை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உசேனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரியலூரில் மகன் திட்டியதால் தந்தை தற்கொலை செய்து கொண்டார்
    • கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    . அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது மகன் ஏன் தினமும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்ததனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியலூர் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் பூமிப் பந்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓசோன் படலத்தை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்நாகரிக வளர்ச்சியில் மனிதன் பயன்படுத்தும் பல பொருள்கள் ஓசோன் படலத்தை சிதைக்கின்றன. ஓசோன் சிதைவை பாதுகாக்கும் ஒரே வழி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.பூமியில் உயிரினங்களின் ஆதாரம் மரங்களே ஒவ்வொரு மாணவரும் குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.முன்னதாக பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன் வரவேற்றார் . முடிவில் செந்தமிழ்ச் செல்வி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்கொண்டனர்.

    ×