என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது
- முகாமில் மொத்தம் 11 மனுக்கள் விசாரிக்கப்பட்டன
அரியலூர்,
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் மொத்தம் 11 மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மனுதாரர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
- அரியலூர் மாவட்ட ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவிப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, சூரக்குழி, கீழநெடுவாய், புக்குழி, சாத்தனப்பட்டு, பெரியதத்தூர், டி.வி.சாவடி, மேலநெடுவாய், அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குப்பம், குடிகாடு, குளத்தூர், இடையக்குறிச்சி, தேவனூர், வல்லம், கல்வெட்டு, அகினேஸ்புரம், இராங்கியம், பெரிய கருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன். பாப்பாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, அழகர் கோவில், வேம்புகுடி, முத்துசேர்வமடம், சலுப்பை, சத்திரம், வெட்டியார்வெட்டு, இருதயபுரம், குண்டவெளி, ராமதேவநல்லூர், வெண்ணங்குழி, வாழகுட்டை, நெல்லித்தோப்பு, வீரபோகம், காட்டுக்கொல்லை, குட்டகரை, வங்குடி, இறவாங்குடி, ஏ.என்.பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி. ஓலையூர் துணை மின் நிலையத்தில் பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி டிரைவர் விபத்தில் பலி யானார்
- முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் மோதி விபத்து
அரியலூர்,
திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன்(வயது 50), லாரி டிரைவரான இவர் டிப்பர் லாரியில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது மேலப்பழுவூர் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் அடித்தால் சீதாராமன் ஓட்டி சென்ற லாரி அந்த லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் சீதாராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூரில் 70 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- பிரபல அசைவ உணவகத்துக்கு சீல் வைப்பு
திருச்சி,
நாமக்கல்லில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட இளம் பெண் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்ட மாண வர்கள் மயக்கம் அடை ந்தனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை த்தொடர்ந்து ஹோட்ட ல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகி ன்றனர்.
அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரியலூர் நகரில் உள்ள பல்வேறு உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இதில் காலாவதியான கெட்டுப்போன சிக்கன், மட்டன், காடை போன்ற 70 கிலோ இறைச்சியினை பறி முதல் செய்தனர்.மேலும் அரியலூர் கலெ க்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு அதிரடியாக சீல் வைத்தனர்.மேலும் 3 கடைகளுக்கு அபராதம் விதித்து குறைகள் இருந்த 3 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர்.இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் கூறும் போது, இறைச்சி பாக்கெட்டுகளை ஓபன் செய்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டும் இறைச்சிகளை அதற்குரிய வெப்ப நிலையில் சரிவர பராமரிக்க வேண்டும் சைவ, அசைவ பொருட்களை தனித்தனியாக குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சமையலறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
- அரியலூரில் 3 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கும் அரசு கல்லூரி விடுதி
- போதிய வசதி இல்லாததால் குறையும் மாணவர்கள் எண்ணிக்கை
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக்க ல்லூரி வளாகத்தில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல மாணவர்கள் விடுதி இயங்கி வந்தது.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அந்த மாணவர் விடுதியை மாற்ற முடிவு செய்தனர்.அதை தொடர்ந்து அந்த விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எழு த்துக்காரன் பட்டியில் உள்ள பேரிக்காய் செந்துறை ரவுண்டானாவில் உள்ள தனியார் நல விடுதிக்கு மாற்றியுள்ளனர்.இந்த தனியார் விடுதி கல்லூரியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப் பால் உள்ளது. ஆகவே விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் தினமும் வெகு தூரம் நடந்து கல்லூ ரிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் விடுதி மாணவர்களின் எண்ணி க்கையும் சரிந்து உள்ளது.இது ஒரு புறம் இருக்க தனியார் விடுதிக்கு மாதா ந்திர வாடகை கட்டணம் ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படு கிறது.கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த பழைய விடுதியில் 165 மாணவர்கள் தங்கும் வசதி இருந்தது. ஆனால் தற்போது உள்ள தனியார் விடுதியில் 96 மாணவர்கள் மட்டுமே தங்கி உள்ளார்கள். புதியவர்க ளும் இந்த தனியார் விடுதி யை தவிர்க்கிறார்கள்.இது தொடர்பாக சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறும் போது,தனியார் கட்டிடத்தில் இயங்கும் நலவாழ்வு விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை என்ற போர்வை யில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.மாதா ந்திர வாடகை கூட சரியாக கொடுக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, விடுதியில் (கல்லூரி வளாகத்தில்) எப்பொழுதும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் கல்லூரிக்கும் விடுதிக்கும் இடையிலான தூரம் அதிக மாக இருப்பதால் மாண வர்கள் விடுதியில் தங்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்
விடுதி மாற்றப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் கடந்தும், புதிய நலவாழ்வு விடுதிக்கு இடம் தேர்வு செய்யாதது வருத்தம் அளி க்கிறது. கல்லூரி அருகே விடுதி கட்ட மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
விடுதியில் தங்கி படிக்கும் 19 வயது மாணவி கூறுகை யில், கடந்த இரண்டு ஆண்டு களாக போதிய பஸ் வசதி இல்லாததால் நடந்தே கல்லூரிக்கு சென்று வருகி றேன். கல்லூரிக்கு வர குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது என்றார்,மற்றொரு விடுதியாளர் கூறுகையில், "3 கட்டில் உள்ள ஒரு அறையை பத்து மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இத னால், இருவர் படு க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.இதுகுறித்து ஆதி திரா விடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை அதிகாரி விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டபோது, "புதிய கட்டிடம் (விடுதி) அமைக்க இடம் தேடி வருகிறோம்" என்று தெரிவித்தார். வாடகை பாக்கியில், "அரசாங்கம் பணம் கிடைத்ததும் நாங்கள் செலுத்துவோம்" என்றார்.
- அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன்தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், அணிச்செயலாளர்கள் மாணவரணி சங்கர்,இளைஞரணி சிவசங்கர்,மகளிரணி ஜீவா,சிறுபான்மைபிரிவு அக்பர்ஷெரிப், வக்கில் பிரிவு வெங்கடாஜலபதி, ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், பாலு, திருமானூர் வடிவழகன், அன்பழகன், ஆண்டிமடம் மருதமுத்து, ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் கல்யாணசந்தரம், விக்கிரம பாண்டியன்,தா.பழர் அசோகன், வைத்தியநாதன், நகரசெயலாளர்கள் அரியலூர் செந்தில், ஜெயங்கொண்டம் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோசிவ பெருமாள், செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் இஸ்மாயில், யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி, வக்கில் சிவஞானம், பாஸ்கர், மகளிரணி பாப்பாத்தி, சினுக்கா, செல்வாம்பாள் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும்கலந்துகொண்டனர். மாவட்டசெ யலாளரும், முன்னாள் அரசுதலைமை கொறடாவுமான தாமரை. எஸ்ராஜேந்திரன்ேபபேசும்போது,விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரஇருக்கின்றது. சட்டமன்ற தேர்தலும் வரவாய்ப்பு இருக்கின்றது. பூத் கமிட்டி அமைக்கும் பணியினை மிகவிரைவாக முடிக்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40ம் நமதே என்ற லட்சியத்தோடு பணியாற்ற வேண்டும். மதுரையில் அதிமுக வெற்றிவிழா எழுச்சி மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்த்தது. மற்ற அரசியல் கட்சிகளைவிட அதிக தொண்டர்களை கொண்ட இயக்கம் அதிமுக. வெற்றி ஒன்றே நமது இலக்காக அமையவேண்டும் என பேசினார். கூட்ட முடிவில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆண்டிமடத்தில் உள்ள விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
- சிறப்பு அபிசேகமும் , விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் விளந்தை-ஆண்டிமடம் மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்தல விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 9 ம் தேதி முதல் தினமும் பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, சந்தனம், மஞ்சள், அரிசி மாவு, பன்னீர் போன்ற அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து 10ம் நாளான நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு அபிசேகமும் விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதன் பின்னர் உற்சவர் சன்னதியை சுற்றி வலம்வந்தார். இதில் ஆண்டிமடம், விளந்தையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் போலீஸ் நிலையம் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. காலை கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து கலச அபிசேகம், மதியம் அன்னதானம், இரவு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கபட்டது. இதேபோல் ஆண்டிமடம் வெற்றிவிநாயகர், விளந்தை அழகு சுப்ரமணியர் கோவில் ஸ்தல விநாயகர், புதுபிள்ளையார் கோவில், வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் ஆண்டிமடத்தை சுற்றியுள்ள அனைத்து பிள்ளையார் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
- அரியலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 314 விநாயகர் சிலைகள் அமைப்பு
- பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
அரியலூர்,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வீடுகளிலும்,விநாயகர் சிலைகள் வைத்து, அவல்,பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர்.அரியலூர் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா.பழூர், திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் உள்ளிட்ட 314 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு 13 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
- அரியலூரில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 10 ஆடுகள் செத்தது
- இடிபாடில் சிக்கி காயமடைந்த இரண்டு வாலிபர்களுக்கு சிகிச்சை
அரியலூர்,
அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் அரியலூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தனியார் மண்டபத்திற்கான கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக அதனை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தன.
கனமழையால் அந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அதன் அருகே கட்டப்பட்டிருந்த ஆடுகளின் மீது சுவரின் இடிபாடுகள் விழுந்தன. இதில் 10 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் சந்துரு (வயது 21), ராஜேஷ் (20) ஆகியோர் காயமடைந்தனர்.இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்தநிலையில், அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இந்த சம்பவம் குறித்து அரியலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரியலூரில் வீட்டை விட்டு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்
- விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டி திருக்கோணம் காங் கேயம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது47). விவசாயி. இவரது மகள் தேன்மொழி (17). இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.கடந்த 15-ந் தேதி தேன்மொழியின் தாத்தா-பாட்டி ஆகியோர் வீட்டு வேலை செய்யவில்லை என திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த தேன்மொழி வீட்டை விட்டு சென்று ள்ளார்.ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படு கிறது. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விக்கிரம ங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன தேன்மொழியை வலைவீசி தேடி வருகிறார்.
- திருமணம் செய்ய மறுத்த காதலியால் காதலன் தீக்குளித்து தற்கொலை
- டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி காதலன் பரிதாபமாக இறந்தார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 29). 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த இவர், அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தனது வீட்டில் உள்ளவர்க ளிடம் அந்த பெண்ணிடமும் சத்தியராஜ் கூறியுள்ளார்.இதனை கேட்ட அந்தப் பெண் திருமணத்திற்கு மறு ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறதுஇதனால் மனமுடைந்த சத்தியராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எ ண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.தீ மளமளவென எரிய தொடங்கிய உடன் வலி தாங்கமுடியாமல் சத்தியராஜ் அலறியுள்ளார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பின்னர் அவரை மீட்டு ஜெயங்கொ ண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலனி ன்றி சத்தியராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- கணவன்-மனைவி இடையே தகராறில் விபரீத முடிவு
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 30). விவசாயி. இவரது மனைவி இளம்மொழி. இந்த நிலையில் வினோத் தனக்கு தெரிந்தவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளம்மொழி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து, வினோத்குமார் தனது மனைவியை வீட்டிற்கு வரும் படி அழைத்து உள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததால் மனவேதனை அடைந்த வினோத், பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






