என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காதலன் தீக்குளித்து தற்கொலை
  X

  காதலன் தீக்குளித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமணம் செய்ய மறுத்த காதலியால் காதலன் தீக்குளித்து தற்கொலை
  • டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி காதலன் பரிதாபமாக இறந்தார்

  ஜெயங்கொண்டம்,

  அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 29). 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த இவர், அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தனது வீட்டில் உள்ளவர்க ளிடம் அந்த பெண்ணிடமும் சத்தியராஜ் கூறியுள்ளார்.இதனை கேட்ட அந்தப் பெண் திருமணத்திற்கு மறு ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறதுஇதனால் மனமுடைந்த சத்தியராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எ ண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.தீ மளமளவென எரிய தொடங்கிய உடன் வலி தாங்கமுடியாமல் சத்தியராஜ் அலறியுள்ளார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். பின்னர் அவரை மீட்டு ஜெயங்கொ ண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலனி ன்றி சத்தியராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×