என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் 314 விநாயகர் சிலைகள் அமைப்பு
- அரியலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 314 விநாயகர் சிலைகள் அமைப்பு
- பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
அரியலூர்,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வீடுகளிலும்,விநாயகர் சிலைகள் வைத்து, அவல்,பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர்.அரியலூர் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா.பழூர், திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் உள்ளிட்ட 314 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு 13 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.