என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விலை போகாததால் பூத்து குலுங்கிய முருங்கை மரங்களை வேரோடு அழித்த விவசாயி: உருக்கமாக பேசும் வீடியோ வைரல்
- 2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது.
- வயலில் 4 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் உற்பத்தியாகும் முருங்கை காய்களை கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார்.
தற்போது முருங்கை பூவும் பிஞ்சுமாய் காய்த்து வருகிறது. கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்பட்ட முருங்கைக்காயை விற்பனைக்காக கும்பகோணம் சந்தைக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு ஒரு கிலோ முருங்கை காய்க்கு ரூ. 2 விலை நிர்ணயம் செய்திருந்தார்கள். இது பேர் அதிர்ச்சியாக இருந்தது.
அடுத்த சில நாட்களில் முருங்கைக்காயின் விலை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பறிக்கப்பட்ட முருங்கைக்காயை சந்தைக்கு கொண்டு சென்ற குமாருக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விவசாயி முருங்கை வயலுக்கு வந்து பறிக்கும் கூலிச் செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்பனையாகவில்லையே என விரக்தியில் பூவும் பிஞ்சுமாய் காயுமாக இருந்த முருங்கையை டிராக்டர் கொண்டு அழிக்க முடிவு செய்தார்.
பின்னர் அதிரடியாக முருங்கை மரத்தை முழுவதுமாக வேரோடு அழித்து உழவு செய்துள்ளார்.
இதுகுறித்து விவசாயி குமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் முருங்கைக்கு ஆதார விலை என்று அரசு நிர்ணயிக்காததால் தற்போது இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய்க்கு கூட சந்தையில் வாங்குவதற்கு ஆள் இல்லை.
இந்த விலை முருங்கைக்காயை பறிப்பதற்கான கூலி செலவுக்கு கூட கட்டுபடியாகவில்லை. இந்த வயலில் 4 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது. வேறு வழி இல்லாததால் இதனை தற்போது அழித்து வருகிறேன். வருங்காலங்களில் இது போன்ற சூழல் விவசாயிக்கு ஏற்படாத வகையில் முருங்கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என கையெடுத்து கும்பிடுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்