என் மலர்
உள்ளூர் செய்திகள்

நவீன முறை சலவையகங்கள் அமைக்க நிதி உதவி
- நவீன முறை சலவையகங்கள் அமைக்க நிதி உதவி வழங்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் ஆனி மேரி அறிவித்துள்ளார்
- பத்து பேர் கொண்ட குழுவிற்கு 3 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண்/பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்படிவம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்-16) அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.






