என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
    • தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை.

    உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில், இரண்டு தோட்டாக்கள் கார் மீது பாய்ந்தது. முதல் தோட்டா காரின் இருக்கை மீது பாய்ந்தது. மற்றொரு தோட்டா கதவு வழியாக சென்றபோது ஆசாத்தின் இடுப்பை உரசியது. பின்னர் மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.

    சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி விபின் தடா கூறுகையில், "சந்திர சேகர் ஆசாத்தின் கான்வாய் மீது காரில் வந்த ஆயுதம் ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு தோட்டா அவரைத் தாண்டிச் சென்றது. அவர் நலமாக உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்" என்றார்.

    காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

    மேலும், பீம் ஆர்மி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,"சஹாரன்பூரில் உள்ள தியோபந்தில் பீம் ஆர்மி தலைவரும் தேசியத் தலைவருமான பாய் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

    • கரடி உடை அணிந்து காவல் பணியில் ஈடுபட்ட பிறகு குரங்குகள் போன்ற விலங்குகளின் தொல்லை குறைந்துள்ளது என்றார்.
    • விவசாயிகள் அணியும் கரடி உடைக்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆகிறதாம்.

    உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களுக்குள் ஏராளமான குரங்குகள் புகுந்து கரும்பு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பயிர்களை பாதுகாப்பதற்காக விவசாயிகள் கரடி ஆடைகளை அணிந்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குரங்குகளை பயமுறுத்துவதற்காக விவசாயிகள் கரடி உடை அணிந்து வயல்களுக்கு நடுவே அமர்ந்திருக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    விவசாயிகள் அணியும் கரடி உடைக்கு மட்டுமே ரூ.5 ஆயிரம் வரை செலவு ஆகிறதாம். மேலும் வயல்களில் கரடி பொம்மை அணிந்து நிற்பதற்காகவே சில வாலிபர்களை பணிக்கு அமர்த்தி உள்ளனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.250 கொடுக்க வேண்டியிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சஞ்சீவ் மிஸ்ரா என்ற விவசாயி கூறுகையில், கரடி உடை அணிந்து காவல் பணியில் ஈடுபட்ட பிறகு குரங்குகள் போன்ற விலங்குகளின் தொல்லை குறைந்துள்ளது என்றார்.

    • மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன.
    • 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான். பிரபல ரவுடி.

    உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடி. மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குர்பான் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த குர்பானை பிடிக்க உத்தரபிரதேச போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். குர்பான் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் உத்தரபிரதேச போலீசார் அறிவித்து இருந்தனர். இதுபோல சுல்தான்பூர் போலீசாரும் குர்பான் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் கவுசாம்பி மாவட்டம் மஞ்சன்பூர் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலை அருகே குர்பான் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் அதிரடி படை போலீசார், மஞ்சன்பூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரவுடி குர்பானை போலீசார் கண்டுபிடித்தனர். அவனை சரணடையும்படி போலீசார் கூறினர். ஆனால், அவன் சரணடைய மறுத்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி குர்பான் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தான். அவனை மீட்ட போலீசார், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கவுசாம்பி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-

    கவுசாம்பி மஞ்சன்பூரில் ரவுடி ஒருவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அதிரடி படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு பதுங்கி இருந்த ரவுடி போலீசாரை நோக்கி சுட்டான். போலீசாரும் திருப்பி சுட்டதில் அவன் மயங்கி விழுந்தான். போலீசார் அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்தியதில் அந்த ரவுடி இறந்திருப்பது தெரியவந்தது.

    இறந்த ரவுடி யார்? என விசாரித்த போது, அவன் போலீசார் தேடிய குர்பான் என தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டு அவர்கள் ரவுடிகளை வேட்டையாடி வருகிறார்கள்.

    மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில் 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று குர்பான் என்ற ரவுடியும் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

    • இரண்டரை வயது சிறுவன் நாக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதி
    • சம்பவம் குறித்து அறிந்த துணை முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டார்

    உத்தர பிரதேச மாநிலத்தில் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அவனது மர்ம உறுப்பின் தோலை தவறுதலாக மருத்தவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் பெரேலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இரண்டரை வயது சிறுவன் ஒருவன் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆனால், மருத்துவர்கள் கவனக்குறைவாக அவது மர்ம உறுப்பினர் தோல் பகுதியை (Circumcision) நீக்கினர்.

    இதனால் அந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி மெல்லமெல்ல வெளியே கசிந்தது. இதுகுறித்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததால் செய்தி காட்டுத்தீயாக பரவியது.

    இந்த சம்பவம் சுகாதாரத்துறையை கையில் வைத்திருக்கும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக்கிற்கும் எட்டியது. அவர் உடனடியாக பெரேலி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பல்பீர் சிங்கை தொடர்பு கொண்டு, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.

    உடனடியாக டாக்டர் பல்பீர் சிங் தலைமையிலான குழு மருத்துவமனை சென்று விசாரணை நடத்தியது. அங்கு பணிபுரியும் ஸ்டாஃப்களிடமும் விசாரணை நடத்தியது. அந்த சிறுவனின் உறவினர்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், மருத்துவமனையின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • கொடூர கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
    • திருமண வீட்டில் நடந்த கொலை சம்பவம் கிராம மக்களிடையே பரவியது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மெயூன்பூர் மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ். இவர் டெல்லி நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தம்பி சோனு (வயது21)வுக்கும், சோனி (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிவ்வீர் யாதவ் சொந்த கிராமத்துக்கு வந்து இருந்தார். திருமணத்தில் ஏராளமான உறவினர்களும் பங்கேற்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டதுடன் இந்த திருமண விழா விமரிசையாக நடந்தது.

    சில உறவினர்கள் திருமண வீட்டில் தங்கி இருந்தனர். நேற்று இரவு அனைவரும் தூங்கிகொண்டு இருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் சிவ்வீர் யாதவ் எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ஆவேசத்துடன் தூங்கி கொண்டிருந்தவர்களை வெட்டினார். மேலும் அவர்கள் தலையையும் துண்டித்தார்.

    இந்த கொடூர கொலை வெறி தாக்குதலில் அவரது சகோதரர்கள் புல்லான் (25) புதுமணத் தம்பதியான சோனு-சோனி மற்றும் மைத்துனர் சவுரப்(23) நண்பர் தீபக் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி டோலி(24) அத்தை சுஷ்மா (35) ஆகியோருக்கும் கோடாரி வெட்டு விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில் 5 பேரை கொன்ற சிவ்வீர் யாதவ் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த கொடூர கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. அவர் பயன்படுத்தியது அனுமதி இல்லாத துப்பாக்கி ஆகும்.

    திருமண வீட்டில் புதுமணத்தம்பதி உள்பட 5 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே பரவியது. இதையடுத்து அவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பிணமாக கிடந்தவர்கள் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதார்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ‘ரொமான்ஸ்’ செய்வது போன்ற காட்சிகள் இருந்தன.
    • பயனர்கள், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபரின் மடியில் ஒரு இளம்பெண் அமர்ந்து செல்வது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்த இளம்பெண், வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து 'ரொமான்ஸ்' செய்வது போன்ற காட்சிகள் இருந்தன. டுவிட்டரில் இந்த காட்சிகள் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து காசியாபாத் போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோவில் உள்ள காதல் ஜோடியின் முகம் தெளிவாக தெரியாத நிலையில், மோட்டார் சைக்கிளின் எண் தெரிந்தது. அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே வீடியோவை பார்த்த பயனர்கள், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 'ரொமான்ஸ்' செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? வைரல் வீடியோவுக்காக எந்த எல்லைக்கும் செல்வதா? என்பது போன்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • சமத்துவ சமுதாயம் உருவாக்க காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளால் முடியாது.
    • 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தின் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நாளை பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தனது குடும்ப நிகழ்வு காரணமாக கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெறும் கூட்டத்தில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியிருக்கிறார். இக்கூட்டத்தை தவிர்க்கும் வகையில் மாயாவதி டுவிட்டரில் சில பதிவுகளை செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அவர் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:

    பாட்னா கூட்டமானது, தலைவர்களின் கைகளை கோர்ப்பதை போன்றுதான் தெரிகிறதே தவிர, இதயங்களை இணைப்பது போல இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வன்முறை போன்றவற்றால் நாடு அல்லல்படும்போது அம்பேத்கர் கட்டமைத்து கொடுத்த அரசியல் சாசனம் மூலம் சமத்துவ சமுதாயம் உருவாக்க காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. போன்ற கட்சிகளால் முடியாது.

    இதுபோன்ற கூட்டத்தை கூட்டும் முன்பாக, "பேசுவது ஒன்றும், நோக்கம் வேறாகவும்" உள்ள இப்படிப்பட்ட கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விடுவது நல்லது.

    மேலும், எந்த கூட்டணிக்கும் வெற்றி தேடித் தர அவசியமான, இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையாக 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தின் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை.

    அவசியமான விஷயங்களுக்கு முன்னுரிமை தராமல் மேற்கொள்ளப்படும் மக்களவை தேர்தல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் எவ்வாறு பயனளிக்கும்?

    இவ்வாறு மாயாவதி தெரிவித்திருக்கிறார்.

    உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மற்றும் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சில தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கட்சிகள் பொதுவாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்து விலகி இருப்பவை. எனினும், பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதால் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின தலைமை செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், "2024-ல் பாஜகவுக்கு எதிராக போராட தயாராக உள்ள கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்காது என்று பகுஜன் சமாஜ் கட்சி கூறுகிறது, பிறகு நாங்கள் ஏன் எங்கள் அழைப்பை வீணடிக்க வேண்டும்?" என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 14 முதல் 24-ந் தேதி வரை சிலை பிரதிஷ்டைக்கான 10 நாள் சடங்கு நடைபெறும்.
    • ஜனவரி 24-ந்தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், அடுத்த ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அயோத்தியில் அவர் நிருபர்களிடம் கூறி இருப்பதாவது:-

    மூன்று அடுக்கு கொண்ட ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தி பண்டிகை அன்று கோவிலில் குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளைத் தொடங்க கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

    ஜனவரி 14 முதல் 24-ந் தேதி வரை சிலை பிரதிஷ்டைக்கான 10 நாள் சடங்கு நடைபெறும். அதன் பின்னர், ஜனவரி 24-ந்தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

    ஜனவரி 22-ந்தேதி குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படலாம் எனவும், இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை கோவில் அறக்கட்டளை அதிகாரிகள் அழைப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இக்பாலின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
    • இக்பாலின் 4 மகன்கள் மற்றும் சகோதரர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர்.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்பால்(வயது 60). இவர் மீது சட்டவிரோத சுரங்கம், நில ஆக்கிரமிப்பு, பெண்களை துஷ்பிரயோகம் செய்தல், ஏமாற்றுதல், அரசு சொத்துகளை அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் அவர் தனது தம்பி மஹ்மூத் அலியை எம்.எல்.சி. ஆக்கினார். பகுஜன் சமாஜ் ஆட்சியின்போது இக்பாலுக்கு அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், இக்பாலின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    இதையடுத்து இக்பால் மற்றும் அவரது மகன்கள் அப்துல்வாஜித், ஜாவேத், முகமது அப்சல், அலிஷான் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது சட்டவிரோத சுரங்கம், நில அபகரிப்பு உள்ளிட்ட 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநில போலீசார் மற்றும்சி.பி.ஐ., அமலாக்கத்துறை தனித்தனியே இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது. இக்பாலின் 4 மகன்கள் மற்றும் சகோதரர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ளனர். தற்போது இக்பால் தலைமறைவாக உள்ளார்.

    இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க, அவர்கள்சது பாஸ்போட்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. அவர்கள் மீதான வழக்குகள் நடந்து வருகின்றன. இதனிடையே இக்பாலுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அவற்றை தற்போது உத்தரபிரதேச காவல்துறை முடக்கி உள்ளது. சமூக விரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 14 (1) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், சஹாரன்பூரில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலமும், லக்னோவின் கோமதி நகர் பகுதியில் உள்ள 7 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவும், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 80,000 சதுர மீட்டர் நிலமும் அடங்கும்.

    கிரேட்டர் நொய்டாவில் இக்பாலின் கூட்டாளிகள் டவுன்ஷிப்பை உருவாக்க திட்டமிட்டனர். இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கினார், அதுவும் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் இக்பாலுக்குச் சொந்தமான மேலும் பல முறைகேடான சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்து உள்ளது.
    • ‘கீதா பிரஸ்’ கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

    கோரக்பூர் :

    2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள 'கீதா பிரஸ்' பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை வெளியிட்டு வருகிறது. இது கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

    கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுவது கேலிக்கூத்து என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோட்சே, சாவர்க்கருக்கு விருது வழங்குவது போன்றது என கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்து உள்ளது.

    இந்த நிலையில், காந்தி அமைதி விருதுடன் வழங்கப்படும் ரூ.1 கோடி பரிசுத்தொகையை ஏற்கமாட்டோம் என கீதா பதிப்பகம் அறிவித்து உள்ளது. எந்த வகையிலான நன்கொடையும் ஏற்பது இல்லை என்பதை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவதால், இந்த தொகையை ஏற்க முடியாது என பதிப்பக மேலாளர் லால்மணி திரிபாதி கூறியுள்ளார். அதேநேரம் விருதை நிச்சயம் வாங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • காந்தி அமைதி விருதுக்கு உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த காந்தி அமைதி விருதுடன் ஒரு கோடி ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.

    லக்னோ:

    இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது

    காந்தி அமைதி விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும்.

    2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை வெளியிட்டு வருகிறது. இது கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

    இந்நிலையில், கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுவது கேலிக்கூத்து என கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இது கோட்சே, சாவர்க்கருக்கு விருது வழங்குவது போன்றது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்துள்ளது.

    இதற்கிடையே, நன்கொடை வாங்குவதில்லை என்ற தங்கள் கொள்கையின் காரணமாக 1 கோடி ரூபாய் பணப்பரிசை ஏற்பதில்லை என கீதா பதிப்பகம் அறிவித்துள்ளது.

    • ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர்.
    • 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    லக்னோ :

    உத்தரபிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

    இந்த நிலையில் 4 நாளில் மட்டுமே 57 நோயாளிகள், அதுவும் 60 வயது கடந்த முதியோர் அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது, அங்கு பேசு பொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சாவுகள், அங்கு வெப்ப அலைகள் நிலவுகிற நிலையில் நேரிட்டிருக்கின்றன. இதில் தலைமை மருத்துவ சூப்பிரண்டு டாக்டர் திவாகர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    உயிரிழப்புகள் பற்றி முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறும்போது, "ஆஸ்பத்திரியின் பதிவேடுகள்படி மூன்று நாளில் மட்டும் 54 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 40 சதவீதத்தினருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. 60 சதவீதத்தினர் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். 2 பேர் மட்டுமே வெப்ப அலை தாக்குதலால் இறந்துள்ளனர்" என தெரிவித்தார்.

    இதேபோன்று அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவ சூப்பிரண்டு (பொறுப்பு) டாக்டர் எஸ்.கே.யாதவ் கூறுகையில், " இந்த ஆஸ்பத்திரியில் தினமும் 125 முதல் 135 நோயாளிகள், உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். எனவே இந்த ஆஸ்பத்திரி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. 15-ந் தேதி மட்டுமே 154 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 16-ந் தேதி 20 பேர் இறந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்" என்றார்.

    பிரச்சினைக்குரிய ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்வதற்காக லக்னோவில் இருந்து சுகாதாரத்துறை குழு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் சோதனை நடத்திய பின்னர்தான் நிகழ்ந்துள்ள இறப்புகளுக்கான காரணத்தை உறுதியாகக்கூற முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே பல்லியா மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிரமப்படாத அளவில் ஏர் கூலர்கள் மற்றும் ஏ.சி. வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும், இது தவிர 15 படுக்கைகள் புதிதாக போடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறைக்கு பொறுப்பேற்றுள்ள துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் கூறியதாவது:-

    வெப்ப அலை தாக்குதல் பற்றி தெரியாமல், இறப்புகள் குறித்து தவறான குறிப்புகளை எழுதியதற்காகத்தான் தலைமை மருத்துவ சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியையும் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும், தலைமை மருத்துவ சூப்பிரண்டுகளுக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×