என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

ஓடும் மோட்டார் சைக்கிளில் காதல் ஜோடியின் 'ரொமான்ஸ்'

- வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ‘ரொமான்ஸ்’ செய்வது போன்ற காட்சிகள் இருந்தன.
- பயனர்கள், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபரின் மடியில் ஒரு இளம்பெண் அமர்ந்து செல்வது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்த இளம்பெண், வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து 'ரொமான்ஸ்' செய்வது போன்ற காட்சிகள் இருந்தன. டுவிட்டரில் இந்த காட்சிகள் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து காசியாபாத் போலீசார் விசாரணை நடத்தினர். வீடியோவில் உள்ள காதல் ஜோடியின் முகம் தெளிவாக தெரியாத நிலையில், மோட்டார் சைக்கிளின் எண் தெரிந்தது. அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே வீடியோவை பார்த்த பயனர்கள், காதல் ஜோடியை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 'ரொமான்ஸ்' செய்வதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? வைரல் வீடியோவுக்காக எந்த எல்லைக்கும் செல்வதா? என்பது போன்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.