என் மலர்
தெலுங்கானா
- முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.
- வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு என கூறியது . அதனை உறுதி செய்யும் வகையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருந்தது.
நாளை முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது.
வருகிற 9-ந்தேதி தெலுங்கானா முதல்- மந்திரி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரேவேந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இவ்வளவு நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெறும் நிலையில் உள்ள வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.
கட்சித் தலைமையும் சிவகுமாருக்கு தெலுங்கானா விவகாரத்தை கவனிக்க முழு அதிகாரம் வழங்கி உள்ளது.
- 7-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 1961 வாக்குகள் முன்னிலை.
- காஜ்வெல் தொகுதியில் முதல் சுற்று முடிவில் சந்திரசேகர ராவ் 7028 வாக்குகள் முன்னிலை.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னணி வகிக்கிறது. இதனால் தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவின், ஹாட்ரிக் வெற்றி முடிவுக்கு வர இருக்கிறது.
சந்திரசேகர ராவ் இந்த முறை கமாரெட்டி, காஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கமாரெட்டி தொகுதியில் அவரை எதிர்த்து அனுமுலா ரேவந்த் ரெட்டி போட்டியிட்டுள்ளார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. 7 -வது சுற்று முடிவில் ரேவந்த் ரெட்டி 22515 வாக்குகள் பெற்று 1961 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
காஜ்வெல் தொகுதியில் 5 சுற்று முடிவில் சந்திரசேகர ராவ் 23280 வாக்குகள் பெற்று7028 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.
- நாகார்ஜுன சாகர் அணையை திறப்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- ஆந்திர அதிகாரிகள் அணையின் பூட்டு, சிசிடிவி கேமராக்களை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத்:
நாகார்ஜுனா சாகர் அணையில் மொத்தம் 29 மதகுகள் உள்ளன. இதில் ஒன்று முதல் 13 மதகுகள் வரை தெலுங்கானா மாநிலத்துக்கும், மீதமுள்ளவை ஆந்திர மாநிலத்துக்கும் சொந்தமானது.
இந்த அணையின் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் ஆகியவை தெலுங்கானா மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், நாகார்ஜுனா சாகர் அணையைத் திறப்பதில் தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசுகளிடையே திடீரென நேற்று மோதல் ஏற்பட்டது.
தெலுங்கானா அரசால் பூட்டப்பட்ட அணை கேட்டின் பூட்டுகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை ஆந்திர அரசு அதிகாரிகளால் உடைக்கப்பட்டது.
அணையை திறப்பதில் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்
தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
இதையடுத்து வருகின்ற 3-ந் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறியுள்ளன.
காங்கிரஸ் கட்சி 60 முதல் 79 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெற்றி பெற வேண்டும்.
தெலுங்கானா தேர்தல் தங்களுக்கு சாதகமாகாமல் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதி ஒன்றில் வைத்து பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் நவீன வசதிகள் கொண்ட சொகுசு விடுதியை தயார் செய்து வைத்துள்ளதாம்.
தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், தெலுங்கானா பகுதியில் இருந்து வெற்றி பெறும் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திர சேகர ராவ் கட்சிக்கு தாவுவதை தடுக்கவும், குதிரை பேரத்துக்கான முயற்சிகளையும் முறியடிக்கவும் காங்கிரஸ் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
- 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 வாக்குகள் பதிவாகின.
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் நேற்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகமுள்ள 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மலை 4 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
106 தொகுதிளில் 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 13 தொகுதிகளில் 4 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அனைத்து வாக்காளர்களும் வாக்களித்த நிலையில், 70.60 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சியினர் முழு வீச்சில் செயல்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ஏழு முக்கிய வாக்குறுதிகளை அளித்தது பிரசாரம் மேற்கொண்டது. பா.ஜனதா கடும் சவால் கொடுக்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரசாரத்தில் களம் இறக்கியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் வருகிற 3-ந்தேதி (நாளைமறுதினம்) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 வாக்குகள் பதிவாகின.
- 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
- வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓங்கும் என தெரிகிறது.
இந்நிலையில், தெலுங்கானா மந்திரி கே.டி.ராமாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் சந்திரசேகர ராவ் முதல் மந்திரி ஆவார். கடந்த 2018- தேர்தலின் போது இதேபோன்று எங்களுக்கு பாதகமான கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் இம்முறையும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
- தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குகள் பதிவானது.
- மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
நியூஸ் 18: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10
ஆரா: பிஆர்எஸ் 41-49, காங்கிரஸ் 58-67, பாஜக 05-07
இந்தியா டிவி: பிஆர்எஸ்: 31-47, காங்கிரஸ் 63-79, பாஜக 02-04
சிஎன்என்: பிஆர்எஸ் 48, காங்கிரஸ் 56, பாஜக 10
இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஓங்கும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கருத்துக் கணிப்பு முடிவு இவ்வாறு இருக்கும் சூழலில் வெற்றி யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ம் தேதி 1 மணி அளவிலேயே உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
- 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், தெலங்கானாவில் சட்டசபை தேர்வதுலக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
தெலுங்கானா மாநில தேர்தலையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
விகாராபாத் மாவட்டத்தில் சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரமுகர் ஒருவர் ரூ.500 நோட்டுகளை வைத்துக்கொண்டு கார் சின்னத்துக்கு சத்தியமாக ஓட்டு போடுவோம் என பெண் வாக்காளர்களை கூறவைத்து பணம் வினியோகம் செய்துள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
- கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.
தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் மகள் கவிதா இன்று காலை ஐதராபாத் பஞ்சாரா ஹில்சில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் வாக்களித்தார்.
வாக்களித்து விட்டு வந்த பின்னர் பேட்டி அளித்த கவிதா பி.ஆர்.எஸ். கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கவிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் கவிதா பேட்டி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.
- காங்கிரஸ் மாநிலத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
- அவரது சகோதரர் வாக்குச்சாவடிக்குள் 20 நபர்களுடன் உலா வருவதாக பிஆர்எஸ் புகார்.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இதனால் தேர்தல் முறைகேடு ஏதும் நடந்து விடாமல் தடுக்க இரு கட்சி தொண்டர்களும் தீவிரமாக தேர்தல் பணி செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவரும், வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியின் சகோதரர் கொண்டால் ரெட்டி வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று தேர்தல் அதிகாரியுடன் பேசியதாக பிஆர்எஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டினர். மேலும், கொண்டால் ரெட்டி வாகனத்தை மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பிஆர்எஸ் தொண்டர்கள் கூறியதாவது:-
கொண்டால் ரெட்டி போலி பாஸ் உடன் வாக்குச்சாவடிகளில் உலா வருகிறார். அதோடு தேர்தல் அதிகாரிகளுடன் பேசுகிறார். மொத்தமாக 20 பேருடன் வளம் வருகிறார். மூன்று வாக்கு மையத்திற்குள் அவர்களுடன் கொண்டால் ரெட்டில் சென்றுள்ளார். அதுவும் வாகனத்துடன் சென்றுள்ளார். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. மையத்திற்கு வந்த பிறகு குண்டர்கள் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுடன் சென்றவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். ஆனால், 10 நிமிடத்திற்குள் போலீசார் அவர்களை ரிலீஸ் செய்துள்ளனர். நாங்கள் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" எனத் தெரிவித்தார்கள்.
கொண்டால் ரெட்டி இதுகுறித்து கூறியதாவது:-
நான் பொது முகவர். நான் வாக்குச்சாவடிக்கு சென்றேன். ஆனால், பிஆர்எஸ் தொண்டர்கள் என்னை தடுத்து நிறுத்தினார்கள். என்னுடைய வாகனைத்தையும் மறித்தார்கள். அவர்கள் என்னை தாக்க முயற்சித்தார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என்னை தடுத்து நிறுத்தும் முயற்சியாக பிஆர்எஸ் கட்சியினர் எனது வாகனத்தை கடந்த 2 மணி முதல் 3 மணி வரை பின்தொடர்ந்தனர். நான் காலையில் இருந்து வாக்குச்சாவடி சென்று கொண்டிருக்கிறேன். நான் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
இவ்வாறு கொண்டால் ரெட்டி கூறினார்.
- 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரையும், 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் வாக்குப்பதிவு
- 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 106 தொகுதிகளில் மாலை 5 மணி வரைக்கும், 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்திற்கு வந்தார். அவர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த இளம் வாக்காளர் ஒருவருடன் வாக்களிப்பது குறித்து பேசினார்.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் எல்லா மொழிகளிலும் அபாரமாக ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதேபோல் ஜூனியர் என்.டி.ஆர். அபுல் ரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய தெலுங்கானா சகோதர மற்றும் சகோதரிகள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் நபர்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையை நிறைவேற்ற கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 35,655 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 106 தொகுதிகளில் மாலை ஐந்து மணி வாக்கப்பதிவு நடைபெறும். ஆயுதம் தாங்கிய குழுவால் பாதிக்கப்பட்டுள்ள 13 தொகுதிகளில் 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
3.26 வாக்காளர்களில் 1,63,13,268 பேர் ஆண் வாக்காளர்கள். 1,63,02,261 பெண் வாக்காளர்கள் ஆவார்கள்.
முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி. சஞ்சய் குமார் மற்றும் டி. அரவிந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி தேர்தல் தேதி அறிக்கப்பட்டதில் இருந்து தெலுங்கானாவில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்தது.
பிஆர்எஸ் 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜனதா 111 தொகுதிகளிலும், கவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துள்ளது. காங்கிரஸ் சிபிஐ-க்கு ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்து 118 இடத்தில் போட்டியிடுகிறது.
2.5 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 77 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






