என் மலர்
இந்தியா

தெலுங்கானா தேர்தல்: சத்தியம் வாங்கி ஓட்டுக்கு பணம் வினியோகம்
- சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
தெலுங்கானா மாநில தேர்தலையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
விகாராபாத் மாவட்டத்தில் சீலாப்பூர் கிராமத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிவிட்டு பணம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரமுகர் ஒருவர் ரூ.500 நோட்டுகளை வைத்துக்கொண்டு கார் சின்னத்துக்கு சத்தியமாக ஓட்டு போடுவோம் என பெண் வாக்காளர்களை கூறவைத்து பணம் வினியோகம் செய்துள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






