என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.
- நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:-
* கரூர் பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாக தெரியவில்லை.
* 10 மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள், அடியெடுத்து வைக்க கூட இடமில்லாமல் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காத்துக்கொள்ள முயன்ற நிலையில்தான் இந்த பேரவலம் நடந்தேறியது என்ற உண்மையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.
* கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.
* நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
* உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே விஜய் நோக்கமாக கொண்டிருக்கிறார்.
* சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் வீடியோ உறுதிபடுத்துகிறது.
* சங்பரிவார் சக்திகளிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* தி.மு.க.வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார்.
* தமிழ்நாட்டை குறி வைத்து வெளிப்படையாகவே தங்களது சித்து விளையாட்டை பா.ஜ.க. தொடங்கி விட்டது.
* தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பா.ஜ.க.வின் கருவி தான் என்பது உறுதியாவதாக கூறியுள்ளார்.
- கடந்த மாதம் ரூ.1,738-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
- வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 16 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.1,754.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,738-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
- தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
- உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதவில், " எண்ணூரில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்துறை அமைச்சர் சிவகுமார் அவர்களையும், TANGEDCO தலைவர் ராக்ரி அவர்களையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடந்தது.
- திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சென்னை:
சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
- உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
* மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
* அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்
* குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.
- ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டார்.
- கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனே அதை நீக்கினார்.
சென்னை:
த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டு அதை நீக்கினார். நேபாளத்தில் நடந்த ஜென் இசட் போராட்டம் போல இங்கும் நிகழும். அதுவே ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் என பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனே அதை நீக்கினார்.
இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மக்கள் ஆசியோடு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.
- எனவே பழிவாங்கும் அரசியல் அவருக்கு தெரியாது, வராது.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் 5 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய விஜய், "எங்களுக்கு தரப்பட்ட இடத்துல நாங்க பேசிட்டு இருந்தோம். அதை தவிர நாங்க எந்த தவறும் செய்யல. எங்க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மேல FIR... அது மட்டுமில்ல சமூக வலைத்தளங்களை சேர்ந்த நண்பர்கள் மேல FIR போட்டு புடிச்சிட்டு இருக்காங்க.
CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள். அவங்க மேல கை வைக்காதீங்க. நா வீட்டுல இருப்பேன் இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணா பண்ணுங்க" எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுதியிடம் கேள்வி எழுப்பியதற்கு "முதலமைச்சருக்கு யாரையும் பழி வாங்கும் எண்ணம் கிடையாது. பழிவாங்கும் அரசியல் அவருக்கு தெரியாது. அது அவருக்கு வேண்டியதும் இல்லை. தேவையும் இல்லை.
பழிவாங்கும் அரசியல் செய்து, ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்திருந்தால், ஜெயலலிதா இல்லாத 2016-17 காலத்திலேயே ஆட்சிக்கு வந்திருக்க முடியும். அப்படி ஆட்சிக்கு வரும் கெட்ட எண்ணம் முதலமைச்சருக்கு கிடையாது. மக்கள் ஆசியோடு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். எனவே பழிவாங்கும் அரசியல் அவருக்கு தெரியாது, வராது" எனப் பதில் அளித்தார்.
- கரூர் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.
கரூர்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.க்கள் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடினர்.
பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர். அப்போது கரூர் எம்.பி. ஜோதிமணி, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில், கரூர் பயணம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் ஏற்பட்ட துயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் தனியாக இல்லை என்ற செய்தியை அனுப்பி உள்ளோம். உண்மையில் முழு தமிழகமும் இந்தியாவும் வேதனையில் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் முழு நாடும் உங்களுடன் உள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் தமிழக மக்களுடன் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
- கரூர் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கரூர் சம்பவத்துக்குப் பிறகு பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த நேரத்துல எங்களோட வலிகளை, நிலைமையை புரிஞ்சிகிட்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- எனக்கு தெரியும். இதுக்கு என்ன சொன்னாலும் ஈடே ஆகாதுன்னு...
- கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.
கரூர் துயர சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட வலி மிகுந்த பிரச்சனையை நான் எதிர்கொண்டதே கிடையாது. மனசு முழுக்க வலி... வலி மட்டும்தான்.
இந்த சுற்றுப்பயணத்துல மக்கள் என்னை பார்க்க வராங்க. அதுக்கு ஒரே ஒரு காரணம்தான். அவங்க என்மேல வைச்சிருக்கிற அன்பும் பாசமும்... அந்த அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்பவுமே கடமை பட்டிருக்கேன்.
அதனாலதான் இந்த சுற்றுப்பயணத்துல மத்த எல்லா விஷயத்தையும் தாண்டி மக்களோட பாதுகாப்புல எந்த சமரசமும் செய்யக்கூடாதுனு மனசுல ரொம்ப ஆழமா எண்ணம் இருந்தது.
இந்த அரசியல் காரணங்கள் எல்லாத்தையும் தவிர்த்துட்டு, ஒதுக்கி வைச்சிட்டு... மக்களோட பாதுகாப்பை மட்டும் மனசுல வைச்சிகிட்டு அதுக்கான இடங்களை தேர்வு செய்றது... அனுமதி வாங்குவது... ஆனா நடக்க கூடாதது நடந்துருச்சு...
நானும் மனுஷன் தானே... அந்த நேரத்துல அத்தனை பேரு பாதிக்கப்ட்டுட்டு இருக்கும்போது... எப்படி அந்த ஊரை விட்டு என்னால கிளம்பி வரமுடியும்.
நா திரும்பி போகணும்னு (கரூருக்கு) இருந்தா... அதை காரணம் காட்டி அங்க வேற ஏதாவது அசம்பாவிதங்கள் நடத்துற கூடாதுனுதான் அதை நான் தவிர்த்து விட்டேன்.
இந்த நேரத்துல சொந்தங்களை இழந்து தவிக்கிற அத்தனை குடும்பங்களுக்கும் என்னோட ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு தெரியும். இதுக்கு என்ன சொன்னாலும் ஈடே ஆகாதுன்னு... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவிலேயே குணமாகி வரணும்னு நான் வேண்டுகிறேன். கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
- கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர்.
- தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
கரூர்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்களான ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட குழுவினர் இன்று மக்களைச் சந்தித்தனர்.
அப்போது பா.ஜ.க. குழுவினரிடம் பெண்மணி ஒருவர் கூறுகையில், எதிர்ப்பக்கம் யாரோ சிலர் கைகளில் கத்தியால் கிழித்தனர். நான் இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தேன்.
எனக்குத் தெரிந்த 4 பேர் கைகளில் கிழிபட்டு படுகாயம் அடைந்து ஜி.எச்.சில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
ஸ்கூல் பிள்ளைகளில் சிலருக்கு கை உடைந்துள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
எதிர்ப்பக்கத்தில் தான் மரத்தில் ஏறி இருந்தனர். அதிலிருந்து சிலர் கீழே விழுந்தனர். இந்தப் பக்க மரத்திலும் ஏறி இருந்தனர்.
விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சிலர் ஏறி இருந்தனர் என தெரிவித்தார்.






