என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எங்கள் வலிகளைப் புரிந்துகொண்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி: விஜய்
- கரூர் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கரூர் சம்பவத்துக்குப் பிறகு பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த நேரத்துல எங்களோட வலிகளை, நிலைமையை புரிஞ்சிகிட்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.






