என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன.
- கவரப்பேட்டையில் நிகழ்ந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
சென்னை:
மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நிகழ்ந்த மைசூர் - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். விபத்து நிகழ்ந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மீட்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார்.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், துயர் சூழ்ந்த இந்த வேளையில், அவர்களின் குடும்பத்தினர் உறுதியுடன் இருக்கவும் விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்து 760-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760
10-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,200
09-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,240
08-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
07-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

11-10-2024- ஒரு கிராம் ரூ. 102
10-10-2024- ஒரு கிராம் ரூ. 100
09-10-2024- ஒரு பவுன் ரூ. 100
08-10-2024- ஒரு பவுன் ரூ. 102
07-10-2024- ஒரு பவுன் ரூ. 103
- தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
- மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுதிரி மற்றும் ரெயில்வேயின் முதன்மை பாதுகாப்பு தலைவர் கணேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தண்டவாளத்தில் 51பி பகுதியில் இன்டெர்லாக் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர். மோப்ப நாய் உதவியுடனும் ஆய்வு மேற்கொண்டனர்.
மெயின் லைனில் சென்ற ரெயில், லூப் லைனுக்கு மாறியது எப்படி என ரெயில்வே அதிகாரிகள் தண்டவாளப் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், பாகமதி விரைவு ரெயிலை லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட் ராமவதார் மீனா ஆகியோர் இயக்கிச் சென்றுள்ளனர்.
டிராக் சேஞ்ச் பாயிண்ட் 51 பி அருகே, விஜயவாடா நோக்கி செல்லாமல் லூப் லைனில் நின்றி கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.
- ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.
- சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ணமான சூழ்நிலையை அனுபவிக்கவும், அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
அதுவும் விடுமுறை தினங்கள், கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி மலைப்பாதையில் பயணித்து நீலகிரிக்கு சென்றனர். இதனால் அந்த சாலையில் வழக்கத்தை விட போக்குவரத்து அதிகமாக இருந்தது. ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். அவர்கள் அங்கு 2-வது சீசனையொட்டி மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்களை கண்டு ரசித்தனர். அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.அத்துடன் தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரையில் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடியும் தங்கள் விடுமுறையை கழித்தனர்.
ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், மரவியல் பூங்கா, பைக்காரா படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, அங்கு நிலவிய இதமான காலநிலையை அனுபவித்தனர்.
இதேபோல் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, டால்பினோஸ் காட்சி முனை, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி இன்றும், நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8.20 மணிக்கு குன்னூரில் இருந்து சிறப்பு ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். இதேபோல் ஊட்டி-கேத்தி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரெயிலும் இயக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்களில் சாலைகளில் காத்திருந்து புறப்பட்டு சென்றதையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் சுற்றுலா தலங்களையொட்டி உள்ள கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது.
விடுமுறை தினத்தையொட்டி கோவையில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பொள்ளாச்சி ஆழியார் அணை பூங்காவுக்கு திருப்பூர், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், மோட்டார் சைக்கிள், பஸ்கள், வேன்கள் உள்ளிட்டவற்றில் வந்திருந்தனர்.
அவர்கள் ஆழியார் அணை, அணை பூங்கா உள்ளிட்டவற்றையும் பார்த்து ரசித்தனர். ஆழியார் அருகே உள்ள கவியருவியிலும் (குரங்கு நீர்வீழ்ச்சி) சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஆழியார் பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது.
இதேபோல் கோவை குற்றாலம், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களு க்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளர்ச்சியான கால நிலையே நிலவி வருகிறது. சுற்றுலா தலங்களில் நிலவிய இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
- விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரெயிலை இயக்கியதாக பாக்மதி விரைவு ரெயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவனக்குறைவே ரெயில் விபத்திற்கு காரணம் என ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே விரைவு ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்து நிகழ்ந்ததற்கு கவனக்குறைவே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரெயிலை இயக்கியதாக பாக்மதி விரைவு ரெயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.
ரெயில் விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் மணிபிரசாத் பாபு கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
- சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
இதைதொடர்ந்து, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மேலும், விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், திருச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக வானூர்தி இயக்கக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரிபொருளை குறைத்த பின், தரை இறக்கப்பட்டு 140 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரிக்கப்படுகிறது.
அதன்படி, விமான பைலட், விமான ஊழியர்களிடம் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைலட் மற்றும் கண்ட்ரோல் ரூம் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோ பதிவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விசாரணையை தொடர்ந்து, டெல்லியில் உள்ள வானூர்தி இயக்கக அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
- கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் நேற்று மற்றும் 14, 15 ஆகிய நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று மற்றும் 13, 16-ந்தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறியது. நேற்றைய தினத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முதலே மிதமான மழை பெய்தது. மேலும், இன்று காலை 6 மணியளவில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
- ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்தது.
சென்னை:
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் கோளாறுக்கு பிறகு அதை பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக அதன் விமானி மற்றும் துணை விமானிக்கு நன்றி. இந்த முயற்சி மற்றும் பதற்றமான தருணத்தில் காக்பிட் மற்றும் கேபின் குழுவினரின் துணிச்சல் மற்றும் அமைதியான தொழில்முறை செயல்பாடு உண்மையிலேயே சிறப்புமிக்கது. விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய அவசர சேவைகளில் ஈடுபட்டோர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது இதயபூர்வ பாராட்டுக்கள். பயணிகள் அனைவரும் இனிதான பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- ரெயில் விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
திருவள்ளூர்:
கவரப்பேட்டை அருகே பயணிகள் ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரெயில் விபத்து நடந்த இடத்தை ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வட்டத்தில் உள்ள கவரப்பேட்டையில் நேற்று இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் செல்லக்கூடிய பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. அதில் 6 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் 1,300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியானது.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடனேயே மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத் துறை இணைந்து சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பயணிகள் ரெயிலில் இருந்து ஒவ்வொருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதில் 19 பேருக்கும் மட்டும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் தீவிர காயம் உள்ளவர்களுக்கு ஸ்டாலின்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான காயம் உள்ளவர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது.
உள்ளூர் மக்கள் உதவியுடன் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்றது. ரெயில் பயணிகள் தங்குவதற்கு 3 மண்டபங்களில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்தில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
- மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.
சென்னை:
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதியது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரெயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தகவல் கிடைக்கப் பெற்றவுடன், அமைச்சர் நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கென தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.
விபத்துக்கு உள்ளான ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.






