என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் புயல்,மழை போன்ற இயற்கை பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்கவும், உலக அமைதிக்காகவும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் பாடி கூட்டு பிராத்தனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல் அலுவலர் செல்வகுமார், மேலாளர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 112 ஏரிகள் 25 சதவீதம் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இதில் 416 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
248 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 132 ஏரிகள் 50 சதவீதம், 112 ஏரிகள் 25 சதவீதம் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
- தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்த நிலையில் அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர் தலத்தை அழித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (13-ந்தேதி) நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,977 கனஅடியாக அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 3,977 கனஅடியாக அதிகரித்த நிலையில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து 713 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3,977 கனஅடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 80 சதவீதம் நிறைந்ததால் அதிகளவு உபரிநீர் திறக்கப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 21-ந்தேதி உலக சேலை தினம்.
- வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.
சென்னை:
மின்மினி செயலி மற்றும் போத்தீஸ் இணைந்து உலக சேலை தின சிறப்பு போட்டியை நடத்துகிறது.
நம் பண்பாட்டின் அடையாளமாகவும், பெண்களின் வாழ்வின் அங்கமாகவும் விளங்குவது சேலை. ஆடை வகை என்பதையும் தாண்டி நேர்த்தியான உழைப்புக்கும், கலை நயத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பது சேலை.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உடையாகிய சேலையை கவுரவிக்கும் விதமாக வருகிற 21-ந்தேதி 'உலக சேலை தினம்' கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த சேலை தினத்தை முன்னிட்டு ஆடை ரகங்களின் தன்னிகரற்ற அடையாளமான போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் போத்தீஸ் சேலை தினச் சிறப்பு 'ஹேஷ்டேக்' போட்டியை அறிவித்து உள்ளார்கள்.
இந்த போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விருப்பும் பெண்கள் சேலை அணிந்துகொண்டு அதை புகைப்படமாகவோ அல்லது சுவாரசியமான ரீல்ஸ்களாவோ எடுத்து அதை அவர்களது சொந்த இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட வேண்டும்.
அப்படி பதிவிடும்போது தவறாமல் ஹேஷ்டேக் போத்தீஸ் சேலை தினம் அதாவது #PothysSareeDay என்பதை இணைத்து பதிவிட வேண்டும். மேலும் அவர்களது புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை பதிவிடும் போது மறக்காமல் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 'டேக்' செய்ய வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ள நினைக்கும் பெண்கள் வருகிற 17-ந்தேதிக்குள் தங்களது பதிவுகளை மேலே குறிப்பிட்ட விதத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும்.

நம் பண்பாட்டின் மேன்மையை வெளிப்படுத்தும் சேலையைக் கொண்டாடும் விதமாக போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு அட்டகாசமான போட்டோ மற்றும் சுவாரசியமான ரீல்ஸ்களை பதிவிடும் பெண் போட்டியாளர்களின் சிறப்பான பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.
வெற்றியாளர்களின் தேர்வு நடுவர் குழு மற்றும் நிர்வாகத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். மேலும் விவரங்களுக்கு 85915 85915 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
சென்னை :
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று 3 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
தெற்கு மற்றும் வடகடலோர மாவட்டங்களுக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
- கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது.
கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
திருப்பூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்து வந்ததுடன், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
காலை 6 மணியளவில் லேசான தூரலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், பல்லடம், அவினாசி, உடுமலை உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், இன்று காலை பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.
- ஒரு பயணிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.
பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சாணாபுத்தூர் செல்லும் அரசு பஸ்(எண் டி62) இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வீரய்யன் ஓட்டினார். காலையில் மழை பெய்து கொண்டு இருந்ததால் 2 பயணிகள் மட்டும் பஸ்சில் இருந்தனர்.
பொன்னேரி அடுத்த காட்டாவூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.
இதில் ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. டிரைவர், கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
- மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன்.
- நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.
நெல்லை:
நெல்லைக்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று இரவு நெல்லை வந்தார்.
தொடர்ந்து இன்று காலை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு அவர்களுக்கு பல்வேறு உறுதியினை அளித்தார்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தற்போது மாஞ்சோலை மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வந்திருக்கிறோம். தமிழக அரசு மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மக்களுக்கான 11 வகையான சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே 4 குடும்பத்தினருக்கு வீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள சிலருக்கு நெல்லை மாநகர பகுதியில் ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு கொடுக்கிறோம்.
மக்கள் கேட்கும் இடத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டும் இல்லாமல் இங்கு உள்ள மக்கள் அனைவரும் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் சமத்துவபுரம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தனியார் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து கூடுதல் நிதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வரும்போது அதற்கென ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன். மாஞ்சோலை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து உதவியும் செய்யப்படும். மேலும் ஒரு சில மக்கள் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்துள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகன்யா, உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கி பாண்டி, யூனியன் சேர்மன் பரணி சேகர், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.
- பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழா 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது.
- விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
சென்னை:
திருச்சியில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள சாரணர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவிற்கு தமிழக அரசு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறி இருப்பதாவது:-
பாரத சாரணர் இயக்குனரகத்தின் வைர விழா 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறும்.
இதில் இசைக்குழு அணிவகுப்பு, வண்ணமிகு அணிவகுப்பு, உடல் திறன் வெளிப்பாடு, நாட்டுப்புற நடனம், உணவுத் திருவிழா, சாகச நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விழாவை சிறப்பாக நடத்துவதற்கு ரூ.39 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்பள்ளி சாமல் பள்ளம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டு இருந்தது.
மல்லசந்திரத்தில் சேர்ந்த முருகன் மகன் சதீஷ் (வயது 25) என்பவர் கூலி வேலைக்காக சாமல் பள்ளத்தை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் பள்ளி பஸ் மல்லசந்திர பகுதிக்கு வந்தபோது திடீரென்று சதீஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த சதீஷின் தாய், தந்தை மற்றும் உறவினர் 100 மேற்பட்டவர்கள் பஸ்டிச முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி பஸ்சின் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் விபத்தில் உயிரிழந்த சதீஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






