20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை :

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று 3 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தெற்கு மற்றும் வடகடலோர மாவட்டங்களுக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். 

X

Maalai Malar
www.maalaimalar.com