என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
- மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேல்புறமாக இருந்தது) ஏற்றப்பட்டது தெரியவந்தது.
இதைப்பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியதும் அவசர அவசரமாக கொடியை இறக்கி, சரிசெய்தபின் மீண்டும் வைத்திலிங்கம் ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும்
- பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில், 12 மணி நேரத்திற்கு மேல் மின் தூண்டிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள துணை மின் நிலையம் முன்பு, பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்காலை அடுத்த பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையததில், சில மின் பராமரிப்பு பணி காரணமாக, நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவித்த நிலையில், இரவு 11 மணியாகியும், மின் இணைப்பு தராததால், அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளகினர்.
தொடர்ந்து, பலமுறை மின்துறைக்கு பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தின் முன்பு, திடீரென கூடி, தங்களின் வாக னங்களை சாலையில் நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட் டதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.
- புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்.
- கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்து மாநில நாட்களையும் கவர்னர் மாளிகையில் கொண்டாடும்போது தேச ஒற்றுமை ஏற்படும்.
பல மொழி பேசினாலும், பல மாநிலமாக இருந்தாலும் கலாச்சாரத்தால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். எனக்கு யாராலும் பாதுகாப்பற்ற நிலை வராது.
புதுவையில் பதவியேற்றவுடன் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கும்படி கூறினேன். இதனால் பாதுகாப்புக்கு இருந்த மத்திய பாதுகாப்பு படை சென்றது.
ஓரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. என் பாதுகாப்பை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.
கவர்னர் மாளிகை எதிரே உள்ளது பொதுமக்களுக்கான சாலை. அதனால் தான் திறந்துள்ளோம். எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு தடுப்புகளை எடுக்கும்படி கூறிவிட்டு, இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கோரிக்கை வைக்கிறேன்.
பிரச்சனை என்றால் என்னிடம் நேரில் வந்து பேசுங்கள். புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்.
தெலுங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள்.
இது அந்தந்த மாநில பிரச்சனை. தமிழக மசோதாவை அந்த கவர்னர் எதிர்கொள்கிறார். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.
புதுவையில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் என்ற இணைப்பு சரியாக இருக்க வேண்டும்.
எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதலமைச்சருக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். புதுவை தலைமைச் செயலரை அழைத்து பேசினேன். முதலமைச்சரிடமும் பேசியுள்ளேன்.
அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது.
முதலமைச்சர், அமைச்சர்களை கலந்து ஆலோசித்து சுமூகமாக செயலாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.
தமிழகத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்
தமிழகத்திலும் முதலமைச்சரும், கவர்னரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தெலுங்கானாவிலும் இதே கருத்தையே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுவையில் இருக்க வேண்டும்.
அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன். பயங்கரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
காரைக்கால் நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.சி. சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடை பிடிக்கப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் கடற்கரை பகுதியில், புதுச்சேரி மாநில அளவிலான இருபாலருக்கும் பீச்வாலிபால் போட்டி நடை பெற்றது. போட்டிகளை ஓ.என்.சி. காவிரி அசட் மேலாளர் உதயபாஸ்வான் தலை மை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப் பாளராக இன்டர் நேஷனல் வாலிபால் வீரர் நடராஜன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்ந்த 36 ஆண்கள் அணிகள், 16 பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர். இதில் அரசுத்துறை யினர், காவல்துறை யை சேர்ந்த வாலிபால் அணிகளும் கலந்து கொண்டு விளையா டியது. லீக் முறையில் போட்டிகள் நடந்து வரு கிறது. இதைத்தொடர்ந்து கால் இறுதி, அரை இறுதிப்போட்டிகள் நடத்தப் பட்டு இறுதிப்போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.நிகழ்ச்சியில் ஓ.என்.சி. அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை ஓ.என்.ஜி.சி மேலாளர் (எச்ஆர்) காமராஜ், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அதி காரி பாலாஜி மற்றும் பலர் செய்தி ருந்தனர். ஏராள மான பொதுமக்கள் போட்டி யை கண்டுகளித்தனர்.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிமேடு பகுதியில் மர்ம கும்பல் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.
- கடைகளின் ஷட்டர்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் சமீப காலமாக போதை கும்பல் செய்யும் செயல்கள் அத்துமீறி வருகின்றன.
குறிப்பாக கஞ்சா பழக்கத்துக்குள்ளான ஆசாமிகள் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
அதிலும் 15 வயது முதலான சிறுவர்கள் கஞ்சா போதையில் பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சமடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை நள்ளிரவில் அடித்து நொறுக்கி செல்கின்றனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோரிமேடு பகுதியில் மர்ம கும்பல் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர்.
இதுபோல் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே நிறுத்தியிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றனர்.
இந்த நிலையில் புதிய பஸ்நிலையம் அருகே உருளையன்பேட்டை போலீஸ்நிலையம் எதிரே தென்னஞ்சாலை ரோடு பகுதியில் நேற்று நள்ளிரவு சில போதை ஆசாமிகள் அங்கு நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார், மினி வேன் போன்றவற்றின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் அங்குள்ள கடைகளின் ஷட்டர்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

உடைக்கப்பட்ட கார் கண்ணாடியை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
சேதமடைந்த வாகனங்களை பார்வையிட்டார். போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரழைத்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய போதை ஆசாமிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுவையில் தொடர்ந்து இதுபோன்று நள்ளிரவில் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்து செல்லும் சம்பவத்தால் பொதுமக்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்லவே அச்சமடைந்துள்ளனர்.
- ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர்.
- கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கோலாஸ் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65) தொழிலதிபர்.
பிரைவேட் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தற்போது கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் வருகிறது.
எனவே கிரிப்டோ கரன்சியில் நீங்கள் முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். மேலும், அவருக்கு கிரிப்டோ கரன்சி எப்படி முதலீடு செய்வது என்ற விவரத்தை சில வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பியுள்ளனர். தங்களுக்கு எந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விவரம் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது ராமகிருஷ்ணனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த லாபத்தையும் ராமகிருஷ்ணனுக்கு அவர்கள் அனுப்பவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸ் சூப்பிண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம்
- சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது
புதுச்சேரி:
கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது.
108 மூலிகையால் காப்பு கண்ட 12 அடி செப்பு கோபுரத்தின் கீழ் கருட கருங்கல்லால் ஆன 6 அடி உயரத்தில் சாய்பாபா சிலை உள்ளது.
இந்த ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி வழிகாட்டும் சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சாய்பாபா விற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்
- தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடி படை போலீசார் ஆம்பூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 3 ½ கிலோ கஞ்சாவை கண்டெடுத்தனர்.
இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளரான முதலியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் எம்.டெக். பட்டதாரி ஆவார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அவருடைய நண்பர் அஸ்வின் (34) மூலம் பெங்களூருவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து புதுவை திருமால் நகரை சேர்ந்த என்ஜினியரிங் பட்டதாரி அஸ்வினையும் போலீசார் கைது செய்தனர். விடுதி அறையில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட வினோத்குமார் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ.வின் உறவினர் ஆவார். மற்றொருவரான அஸ்வின் புதுவை அரசியல் கட்சி நிர்வாகியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர்.
- நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் தருமபுரம் மடவிளாகம் பகுதியைச்சேர்ந்த வர் முத்துசாமி (வயது60). அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலை யில், முத்துசாமி சீட்டு நடத்தி வந்தார். அதில் பலர் பணம் கட்டாமல் இவரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் மற்ற சிலருக்கு பணம் தரமுடியாமல் முத்துசாமி அவதியுற்று வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்து வந்த முத்துசாமி, கடந்த 20-ந் தேதி, தான் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. பலர் தனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.
நானும் பலருக்கு பணம் தரமுடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். பலர் என்னை நேரிலும், போனிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து முத்துசாமிய்ன் அண்ணன் தட்சிணாமூர்த்தி, காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடிவருன்றனர். அதேபோல், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த ராஜவேல் (56) என்பவர், கடந்த 19-ந் தேதி காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுநாள்வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் நந்தினி காரைக்கால் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
- ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.
- புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
முதலமைச்சர் ரங்கசாமியோடு என்ஆர்.காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள், துணை சபாநாயகர், பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் உள்ளனர்.
அரசு பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்டு ஆட்சி அமைந்தது முதல் கடந்த 2 ½ ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கு பிறகு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை.
இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு தங்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜனதா மேலிடத்திடம் கேட்டு வருகின்றனர்.
பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், தன்னைவிட தனது தொகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாக புகார் செய்தார். தனது தொகுதி பணிகளை நிறைவேற்றாததை கண்டித்து சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார்.
முதலமைச்சர் ரங்கசாமியுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், பின்னர் அடங்குவதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளரும், மேலிட பார்வையாளருமான நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்திருந்தார்.
நேற்று மாலை புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அதிருப்தியை மேலிட பொறுப்பாளரிடம் மனக்குமுறலாக வெளிப்படுத்தினர்.
வாரிய பதவி இல்லாமல் மக்களை எப்படி சந்திப்பது? வாரிய பதவி இருந்தால் தொகுதியை சேர்ந்த கட்சியினருக்கும், தேர்தல் பணியாற்றியவர்களுக்கும் சலுகைகள் அளிக்க முடியும். இப்போது ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பா.ஜனதா அமைச்சர்கள் வகிக்கும் துறைகளில் வாரியங்கள் உள்ளது. அந்த வாரிய பதவியை அளிப்பதில் என்ன பிரச்சினை? பா.ஜனதா அமைச்சர்களே வாரியம் தராவிட்டால் வேறு யார் தருவார்கள்? பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் பிரதான அங்கமாக இருக்கும். அப்படியிருக்க கட்சியில் உள்ள அந்த சமூக எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கினால்தான் அப்பிரிவு மக்கள் ஓட்டுக்களை நாம் பெற முடியும்.
நாங்கள் கேட்கும் போதெல்லாம் முதலமைச்சர் தரவில்லை என தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அப்படியானால் அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தரலாம். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்களின் வலியும், சூழ்நிலையும் புரியும் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கைக்கு அரசு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றுகிறது. அவர்களுக்கு கார் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தருவதால் எங்களுக்கு எந்த சலுகையும் தர மறுக்கின்றனர்.
தொகுதியில் உள்ள கோவில் கமிட்டிக்கு கூட நிர்வாகிகளை நியமிக்க போராட வேண்டியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் தொகுதியில் செல்வாக்கை இழக்க நேரிடும் என தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தற்போது நெருக்கடி அளித்தால் வாரிய பதவி கிடைக்கும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். இதனால பா.ஜனதா மேலிடம் எம்எல்ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை அரக்குக்கடை அருகில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, பேட்டை மெயின்சாலையைச்சேர்ந்த ராஜசேகரன் (வயது 42) என்பவரை பிடித்து சோத னைச் செய்தனர். அப்போது, சிலருக்கு செல்போன் மூலம் 3 எண் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணையில், அதனை அவர் ஒப்புகொண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திருநள்ளாறு சுரக்குடி சந்திப்பில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, சுரக்குடி சித்ரா காலனியைச்சேர்ந்த குமார் (48) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, சிலருக்கு செல்போன் மூலம் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணை யில், அதனை அவர் ஒப்புகொ ண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது.
- தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து, காரைக்கால் வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், காரைக்கால் எல்லைக்கு வந்த பொழுது, சாலையில் அங்குமிங்கும் அலைந்த வாரும், ஆட்டோவில் மோதுவது போலவும் சென்று சாலையில் உள்ள பேரிக்காட்டில் மோதி நின்றது. தொடர்ந்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர்.
ஒரு சில பயணிகள் காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சேர்ந்த செல்வராஜ் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரை 300கி.மீ தூரம் பயணம் செல்லும் பஸ் டிரைவராக நாகை டெப்போ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பதும் அவரை காரைக்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேறு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்து டிரைவர் செல்வராஜை காரைக்காலில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அனுப்பி வைத்து ஆஜராக அறிவுறுத்தினர்.






