search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி நிர்வாகம் வேகமாக செயல்பட மாநில அந்தஸ்து வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி
    X

    புதுச்சேரி நிர்வாகம் வேகமாக செயல்பட மாநில அந்தஸ்து வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி

    • மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும்.
    • மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில்,40,000 குடும்பத்தலைவிகளுக்கு, ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பரிசோதனை முயற்சியாக, 1 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    அடுத்து, 50 எம்.எல்.டி குடிநீர் வழங்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.

    பிரீபெய்டு மீட்டர் திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தின் சாதகம், பாதகம் குறித்து அறிந்து திட்டம் செயல்படுத்தப்படும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும். அதுபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரமில்லாத சைக்கிள்களை மாற்றி தர ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    அரசு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான திட்டங்களை வேகமாக செயல்படுத்தினால் தான் வளர்ச்சி இருக்க முடியும். இதை வலியுறுத்த வேண்டியது அரசின் கமை என்பதால், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    அதனால் அரசு. அதிகாரிகள் அதிகமாக கேள்விகளை கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பக்கூடாது.

    இது போன்ற பிரச்சினைகளுக்கு மாநில அந்தஸ்து தான் தீர்வாக இருக்கும். இதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து

    வலியுறுத்தி வருகிறேன். நிர்வாகம் வேகமாக செயல்பட மாநில அந்தஸ்து தேவை.

    மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். தேசிய ஜனநாயகக்கூட் டணி அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி வருகிறது.

    மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் பா.ஜனதா கூட்டணியில் உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எனவே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி நிலை தான் உங்களுக்கு ஏற்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியது குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி அதுபோன்று எந்த நிலையும் எப்போதும் ஏற்படாது என்றார்.

    மேலும் அவரிடம் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் உங்களை முதலமைச்சராக ஏற்க தயார் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனரே என்று கேட்டதற்கு முதலமைச்சர் ரங்கசாமி சிரித்து கொண்டே நன்றி என பதில் தெரிவித்தார்.

    Next Story
    ×