என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
    • கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் 100 அடி சாலையில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான பகுதி உள்ளது.

    இதன் காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிறிய கேட் உள்ளது. இதற்குள் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள குடோன் உள்ளது.

    இதன் மாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியோடு இன்று சோதனை செய்தனர்.

    அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே. பாபு (வயது 26) என்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது, பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அவரை கொண்டுசென்று விசாரணை நடத்தினர். அவர் வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுவை உட்பட வெளி மாநிலங்களில் கொத்தடிமையாக விற்பனை செய்துள்ளாரா?

    எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றுள்ளார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புள்ளதா? ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா? பயங்கரவாத செயல்களுக்கு துணை போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுவையில் அவர் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் போலீசார் சோதனையிட்டதில் எந்த தகவலும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் அனைத்தும் போலியாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

    புதுவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    சுமார் 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    • காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார்
    • போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    புதுச்சேரி:

    காரைக்காலில் சாலை யில் கிடந்த ரூபாய் 2000 பணத்தை பள்ளி சிறுமி உரியவரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா (வயது7) தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரம் 2000 ரூபாய் (4-500 நோட்டு கள்) கிடந்ததை கண்ணெடுத் துள்ளார். அச்சமயம் அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.

    பணத்தை தவறவிட்டவர் அங்கு தேடி கொண்டு வந்த போது, அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்து அவரது பணம் தான் என்பதை உறுதி செய்த பின்னர், அந்தப் பணத்தை கொண்டு வந்து கொடுத்த சிறுமியிடம் கொடுத்து பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் செலவுக்கு அதிக மாக பணம் உள்ள சூழ்நிலை யில், பணத்திற்கு ஆசைப் படாமல் அப்பணத்தை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறுமிக்கு விதைத்த பெற்றோர்க ளையும், சிறுமியையும் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    • கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் தெரிவித்தார்.

    இந்தநிலையில் சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். வக்கீல்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபிரியங்கா தானே நேரடியாக குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தான் ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனை தட்டி கேட்டதால் அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னை சண்முகம் கட்டுப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சந்திரபிரியங்கா முன் வைத்துள்ளார்.

    மேலும் குடிகாரன், பெண் வெறியன், தன் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண், தன்னைப் பற்றி கிசுகிசுக்களைப் பரப்பும் மற்றும் பேசும் ஒரு ஆணுடன் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்து இதை தாக்கல் செய்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கணவருடனான சந்திரபிரியங்காவின் மோதல் தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டு வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு, தனது சைக்கிளில் வரிச்சிக்குடி ரோட்டில் சென்றபோது, காரைக்கால் மாதாகோவில் வீதியைச்சேர்ந்த சங்கர் (52) என்பவர் வேகமாக காரில் வந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி காந்திநகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது51). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு, தனது சைக்கி ளில் வரிச்சிக்குடி ரோட்டில் சென்றபோது, காரைக்கால் மாதாகோவில் வீதியைச்சேர்ந்த சங்கர் (52) என்பவர் வேகமாக காரில் வந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    அங்கிருந்தோர், பாலகிருஷ்ணனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாலகிருஷ்ணனின் மகன் மணிபாலன், காரைக்கால் போக்குவரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
    • ப.கண்ணன் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசியலில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் ப.கண்ணன். சபாநாயகர், அமைச்சர், ராஜ்யசபா எம்.பி. என அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

    2021 சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதாவிலிருந்த அவர் அதன் பிறகு அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகியிருந்தார். மணிப்பூர் கலவரத்தின்போது பா.ஜனதாவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

    கடந்த 1-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக ப.கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்பட்டது.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.51 மணியளவில் அவர் மரணமடைந்தார். மறைந்த ப.கண்ணனுக்கு வயது 74.

    மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. ப.கண்ணன் இறந்த தகவல் கிடைத்தவுடன் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அவரின் ஆதரவாளர்கள் ப.கண்ணன் வீட்டில் குவிந்தனர்.

    இன்று காலை முதல் ப.கண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

    அவரது உடலுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித்தலைவர் சிவா, மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் இருந்து வந்த தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ப.கண்ணன் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது. பின்னர் ப.கண்ணன் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. 

    • புதுச்சேரி வைசியாள் வீதியில் ப.கண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • காங்கிரஸ் கட்சியில் விலகி அடுத்தடுத்து அ.தி.மு.க., பா.ஜனதாவில் இணைந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன். அவருக்கு வயது 74. இவர் ரத்த அழுத்த குறைவு, நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று இரவு ப.கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் நிமோனியா காய்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 9.51 மணிக்கு அவர் காலமானார். ஏற்கனவே அவர் 5 ஆண்டுகளாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி வைசியாள் வீதியில் ப.கண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெற்றோர் பழனிசாமி- காமாட்சியம்மாள். ப.கண்ணனுக்கு சாந்தி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.

    பள்ளி படிப்பை அவர் புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியிலும், பட்ட படிப்பை தாகூர் கலைக்கல்லூரியிலும் முடித்தார். பெருந்தலைவர் காமராஜரின் கொள்கை மற்றும் அவரது அரசியல் நேர்மை ஆகியவற்றின் மீது கொண்ட தீராத பற்றால் 1970-ம் ஆண்டு மாணவர் காங்கிரசில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். மேடை பேச்சு மூலம் மக்களை கவர்வதில் வல்லவர். மாணவர் காங்கிரசின் பணியாற்றிய அனுபவமும், கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும் ஒரு கட்டத்தில் கண்ணனை இளைஞர் காங்கிரஸ் தலைவராக்கியது.

    1985-ல் காசுக்கடை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணன், அப்போது பரூக் மரைக்காயர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரானார். பின்னர் 1991-ல் நடந்த சட்டசபை தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று, வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக பதவி வகித்தார்.

    1996-ல் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, கண்ணன் புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி போட்டியிட்டு வெற்றி பெற்று, 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜானகிராமன் தலைமையிலான கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

    பின்னர் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 2001-ல் நடந்த சட்டசபைக்கான தேர்தலில் தான் போட்டியிடாமல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தார். அதையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை புதுச்சேரிக்கு அழைத்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் தன்னை மீண்டும் இணைத்து கொண்டார்.

    2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் மீண்டும் தனிக்கட்சி தொடங்கி 3 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தார். பின்னர் 29.8.2009 அன்று புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் முழு விருப்பத்திற்கேற்ப காங்கிரஸ் கட்சியில் கண்ணன் 3-வது முறையாக இணைந்தார். அவர் 2009 செப்டம்பர் 26-ந்தேதி போட்டியின்றி மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதன்பின் காங்கிரஸ் கட்சியில் விலகி அடுத்தடுத்து அ.தி.மு.க., பா.ஜனதாவில் இணைந்தார். தொடர்ந்து கட்சி மாறியதால் அரசியலில் அவர் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

    கண்ணனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைசியாள் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இறுதி சடங்கிற்கு பின், கருவடிக்குப்பம் மயானத்தில் மாலை 4 மணியளவில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    • ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது.
    • போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தி தேவராஜ். இவரது மகள் சான்ரேச்சல் (வயது 23). இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.

    மிஸ் புதுச்சேரி-2020, மிஸ் பெஸ்ட் ஆட் டிட்யூட்-2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு-2019, குயின் ஆப் மெட்ராஸ்-2022 ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா-2023 அழகி போட்டியில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவர் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து

    பெற்றார். மேலும் இப்போட்டியில் பங்கேற்க நிதியுதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

    • மோதி சைக்கிளில் சென்ற செல்வரசி மீது பயங்கரமாக மோதியது.
    • அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், ஹோம்கார்டு பயிற்சி எடுத்து வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி யானார். மேலும் 4 பேர் காயம் காயம் அடைந்தது குறித்து, காரைக்கால் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் நித்தீஸ்வ ரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வரசி (வயது 23).இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் நேரு நகர் அருகே உள்ள பாரதியார் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பூவத்தை சேர்ந்த சண்முக வேல் (61), மற்றொரு மோட்டார் சைக்கி ளில் சென்ற மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த எழிலன் (26) ஆகியோர் மீது மோதி சைக்கிளில் சென்ற செல்வரசி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் செல்வ ரசி சாலையில் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் சண்முகவேல், எழிலன் மற்றும் காரில் சென்ற, மயிலாடுதுறை மாவட்டம் ஆயர்பாடியை சேர்ந்த ஜெகபர் அலி (73), காரை ஓட்டிய திருக்களாச் சேரியை சேர்ந்த முபாரக் அலி (48) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் செல்வரசி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து காரைக்கால் போக்கு வரத்து போலீசார் முபாரக் அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை.
    • மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் ஒப்பிலார் மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இரவு இவர் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு விட்டு, மகன் திவ்யேஷ் கார்திக் (15), உறவினர் மகன் சரவண ப்பிரியன் (17) ஆகியோ ருடன் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். காரை க்கால் காமராஜர் சாலை கென்ன டியார் வீதி சந்திப்பில் சென்ற போது எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்த அர்ஷாத் (19) என்பவர் மோதியதில், இருதரப்பும் தடுமாறி சாலையில் விழுந்தனர்.

    இதில், பாலசுப லட்சுமியின் 2 பற்கள் உடைந்து போனது. மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது. அர்ஷாத்துக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பாலசுபலட்மியை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீ சாரிடம் பாலசுபலட்மி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஷாத்தை விசாரித்து வருகின்றனர்.

    • பிரசாந்த்குமார் மனைவியின் சேலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாந்த்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் சிக்மா செக்யூரிட்டி பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக (ஏ.எஸ்.ஐ) பிரசாந்த்குமார் (50) பணியாற்றி வந்தார்.

    இவர் மேரி உழவர்கரையில் வைரம் நகர் 3-வது குறுக்குத்தெருவில் வசித்து வந்தார். இவரின் மகளுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்து மகள் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரசாந்த்குமார் நேற்று இரவு தனது மனைவியின் சேலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் இதைப்பார்த்த அவரின் மனைவி மேரிகிளேர் அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாந்த்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
    • மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விடுதலை நாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேல்புறமாக இருந்தது) ஏற்றப்பட்டது தெரியவந்தது.

    இதைப்பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியதும் அவசர அவசரமாக கொடியை இறக்கி, சரிசெய்தபின் மீண்டும் வைத்திலிங்கம் ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×