என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சனிப்பெயர்ச்சி விழா: மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்
- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தார்.
- சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தார்.
இன்று மாலை முதல் நாளை மாலை வரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிப்பெயர்ச்சிக்கு வருகை தந்து சாமிதரிசனம் செய்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






