என் மலர்
புதுச்சேரி
- காரைக்கால் அக்கரைவட்டம் சித்தர் சித்தானந்த சாமிகளின் 108-வது மகா குருபூஜை விழா நடைபெற்றது.
- அக்கரைவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் அழைப்பை ஏற்று காரைக்கால் சென்று பல அற்புதங்களை செய்தவர்.
புதுச்சேரி:
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சித்தர் சித்தானந்த சுவாமிகள். சிவபெருமானின் அருள்பெற்று பல்வேறு சித்து வேலைகள் மூலம் பல்வேறு நோய்களை, பிரச்சினைகளை தீர்த்து வைத்ததால், அப்பகுதி மக்களால் பெரும் வரவேற்பை பெற்றவர். நாகை மாவட்டம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு இவர் வந்தபோது, காரைக்கால் அக்கரைவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் அழைப்பை ஏற்று காரைக்கால் சென்று பல அற்புதங்களை செய்தவர். தொடர்ந்து, அக்கரைவட்டம் சௌந்தரியவல்லி சமேத சோமநாதர் கோவிலுக்கு சொந்தமான மாமரத்தின் கீழ் 30.8.1914-ம் ஆண்டு முக்கிதியடைந்தார்.
இவரது சமாதியின் கீழ் மக்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மகா குருபூஜை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பூஜை நேற்று (5-ந் தேதி) நடந்த குருபூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சித்தர் சமாதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிப்பட்டனர். தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சோமநாதர் சுவாமி தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினர், அக்கரைவட்டம் திருமூலர் திருமுறை மன்றத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.
- புதுவை நகரப்பகுதியில் காணவில்லை என்ற போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.
- கடந்த 4 ஆண்டுகளாக பூனை வீட்டை விட்டு வெளியேறியது இல்லை.
புதுச்சேரி:
புதுவை நகரப்பகுதியில் காணவில்லை என்ற போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.
காரணம் காணாமல் போனது பூனை.இந்த போஸ்டரை காந்திநகர் வேளாண் தோட்டத்தை சேர்ந்த ராமன் என்பவர் ஓட்டி உள்ளார். அதில் "குட்டூ" என அழைக்கப்படும் தனது பூனையை 3-ந் தேதி முதல் காணவில்லை.
பூனையை பற்றி தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு தனது செல்போன் எண்ணையும் ராமன் இணைத்துள்ளார். இதுகுறித்து பூனை உரிமையாளர் ராமன் கூறியதாவது:-
சென்னையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக இருந்த இந்தப் பூனையை தனது மகள் புதுவைக்கு கொண்டு வந்து வளர்த்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக பூனை வீட்டை விட்டு வெளியேறியது இல்லை.
கடந்த 3-ந் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தில் ஒருவர் காணாமல் போனது போல் செல்ல பிராணியான பூனை வீட்டில் இல்லாததால் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறோம்.
இவ்வாறு ராமன் கூறினார்.
செல்ல பிராணியை காணவில்லை என ராமன் ஒட்டியுள்ள போஸ்டரை பார்த்த பலரும் அதனை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி பூனையை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி வருகின்றனர்.
- காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள்.
- துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க, ராஜ்குமார் விசைப்படகில் சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், ராஜ்குமார் தலைமையில், வழக்கம் போல், கடந்த 2-ந்தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க, ராஜ்குமார் விசைப்படகில் சென்றனர்.
கோடியக்கரை அருகே நடுகடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென வந்த இலங்கை கடற்படையினர். பிடித்த மீன்களில் பெரிய மீன்களை தரும்படி மிரட்டினர். அதற்கு மீனவர்கள் மீன் இல்லை என கூறிய தால், தங்களது ரோந்துப்படகிலி ருந்து, 3-க்கு மேற்பட்ட கடற்படையினர், மீனவர் களின் விசைப்பட கிற்கு சென்று, மீனவர்களை தாங்கள் வைத்திருந்த கம்பு மற்றும் கயிற்றால் அடித்து, உதைத்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான மீன், அரிசி, மளிகை, ஜி.பி.எஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்தனர்.
பின்னர் இந்த பகுதி யை விட்டு உடனே செல்ல வேண்டும். இல்லை யென்றால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்துவிடுவோம் என மிரட்டி சென்றனர். காயம் அடைந்த மீனவர்கள், நேற்று மாலை காரைக்கால் திரும்பி, காரைக்கால் அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் உதவி பெற்று சென்றனர். அதிகம் காடையம் அடைந்த ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்ல பட்டுள்ளார்.
- கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்து போனது.
- சிறுமியின் பெற்றோர் பல்வேறு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியை சேர்த்து சிகிச்சை அளித்தும், இதுவரை சரி செய்ய முடியவில்லை.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு. பட்டினம் மீனவ கிராமத்தில் வசிப்பவர் சதீஷ். இவர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் குழந்தை நதினா (வயது 9). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு வரை எல்லோரையும் போல் சென்று வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்து போனதால் நடக்க முடியாமலும், பள்ளிக்குச் செல்ல முடியாமலும் அவதியுற்று வருகிறார்.
சிறுமியின் பெற்றோர் பல்வேறு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியை சேர்த்து சிகிச்சை அளித்தும், இதுவரை சரி செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. தொடர் சிகிச்சையளிக்க பொருளாதாரம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தசை சிதைவு நோயால் அவதியுறும் 9 வயது சிறுமியின் மேல் சிகிச்சைக்கு, பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு பெற்றோர், மாவட்ட கலெக்டர் முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு வழங்கி கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளனர்.
- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் தமீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
புதுச்சேரி:
காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் கேஸ் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் நிரவி சாலையில், ஓ.என்.ஜி.சி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க தலைவர் முத்துகுமரசாமி, விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பால்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பழனிவேல், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க தமிழ்மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், புதுச்சேரி மாநில தலைவர் வின்சென்ட், காரைக்கால் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் தமீம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுப்பதை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும். என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் கேஸ் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
- இன்று முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.
- 23-ந்தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
மணக்குள விநாயகர் கோவிலின் 62-வது பிரம்மோற்சவ விழா நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.
9-ந் தேதி காலை 7 மணிக்கு ரதோற் சவம், தொடர்ந்து கன்யா லக்னத்தில் திருத்தேர் வீதியுலா நடக்கிறது.
10-ந் தேதி காலை நர்த்தன கணபதி நேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி வெள்ளி மூஷிக வாகன சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.
11-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம், 15-ந் தேதி காலை கிருத்திகை, இரவு பால சுப்ரமணியர் உற்சவம், வெள்ளி மயில் வாகன வீதி உலாவும் நடக்கிறது.
விழாவில் 17-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி விடையாற்றுதல் உற்சவமும், 22-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது.
விழாவில் 23-ந் தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சியும், 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தேவஸ்தான அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
- தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது.
- தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் வள்ளலார் நகர் அருகே, தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற காரைக்கால் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் பஹத்தை(வயது19) போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பிலான 40 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்கால் அருகே திரு.பட்டினம் போலகம் பகுதியில் புதுச்சேரி தொழில் வளர்ச்சி மையமான பிப்டிக் மையம் உள்ளது. இப்பகுதி பாதுகாப்பு அற்ற பகுதியாக, அடர்ந்த காடாக இருப்பதால், சமூகவிரோதிகள் பலர் அப்பகுதியில் தஞ்சம் புகுந்து, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் சிலர் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நேற்று நடைபெறுவதாக திரு.பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் திரு.பட்டினம் போலீசார் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் ரோந்து சென்ற பொழுது, பிப்டிக் மைய கருவேல மரங்களுக்கு இடையே இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய பொழுது, காரைக்கால் மதகடி பகுதியை சேர்ந்த ராமானுஜன் ( வயது39), திருநள்ளார் பேட்டை பகுதியை சேர்ந்த விவேக் (28) என்பதும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுவையில் ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாக உள்ளது.
- புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் வெளியில் இருந்து வரும் வாகனங்களும் புதுவையில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உச்சத்தை தொட்டது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால்வரியை குறைத்தது. அதோடு மாநிலங்கள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை.
அதேநேரத்தில் புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. பெட்ரோலுக்கான வாட் வரி 23 சதவீதம் இருந்ததை 14.55 சதவீதமாக குறைத்தது. டீசலுக்கான வாட் வரியை 6.91 சதவீதமாக நிர்ணயித்தனர்.
இதனால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுவையில் ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாக உள்ளது.
இன்றைய தினம் புதுவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.22. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.104.30, கடலூரில் ரூ.103.12, திருவண்ணாமலையில் ரூ.103.60, சென்னையில் ரூ.102.63 ஆக உள்ளது. புதுவையில் இன்றைய டீசல் விலை ரூ.86.33. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.95.36, கடலூரில் ரூ.95.40, திருவண்ணாமலையில் ரூ.95.24, சென்னையில் ரூ.94.24 ஆக உள்ளது.
இதனால் புதுவையை சுற்றியுள்ள அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். இதனால் மாநிலத்தில் எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் வெளியில் இருந்து வரும் வாகனங்களும் புதுவையில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.
புதுவையில் வார இறுதியில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவார்கள்.
அப்படி வருபவர்களும் திரும்பிச்செல்லும்போது தங்கள் வாகனங்களில் முழுமையாக பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.
இதேபோல் புதுவை மாநிலத்தின் காரைக்காலில் அந்த பகுதியை சுற்றியுள்ள தமிழக பகுதியினரும், மாகியில் கேரள மாநிலத்தவரும், ஏனாமில் ஆந்திர மாநிலத்தவரும் பெட்ரோல், டீசல் வாங்க குவிகின்றனர்.
- காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் விநாயகர் சிலை வழிபாட்டில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- பாலசுப்பிரமணியம் கதவைத் திறந்தபோது கையில் அரிவாளுடன் செந்தில் நின்றுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் விநாயகர் சிலை வழிபாட்டில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை கிராமத்தில், விநாயகர் சிலை வைப்பது தொடர்பான பிரச்சினையில், தோப்புத் தெருவைச் சேர்ந்த ஜே.சி.பி ஆப்பரேட்டர் பாலசுப்பிரமணியம் (வயது49) தரப்புக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி (66) தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது மகள் கவுசல்யாவை கல்லூரியில் சேர்ப்பதற்காக, மனைவி தமிழரசியுடன் பாலசுப்பிரமணியம் மோட்டார்சைக்களில் புறப்பட்டார். அப்போது பாலசுப்பிரமணியத்தின் மோட்டார் சைக்கிளை, ராஜலட்சுமியின் மகன்களாகிய சங்கர், செந்தில் இருவரும் மறித்து பிரச்சனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தின் வீட்டு காலிங் பெல்லை செந்தில் அடித்துள்ளார். . இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியம், அவரது மனைவி தமிழரசி, அதே பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து செந்தில் மற்றும் ராஜலட்சுமியிடம் தகராறு செய்து தாக்கிய தாக கூறப்படுகிறது. அவர்களும் பதிலுக்கு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாலசுப்பிரமணியம், ராஜலட்சுமி இரு தரப்பினரும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்
- 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்
புதுச்சேரி:
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:
புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்.
மரபணு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். புதிய சட்டமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமைக்கப்படும். 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
- கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
- சிறைக்கு வாகனம் திரும்பியபோது வழக்கம் போல் வாகனத்தை சிறை துறையினர் சோதனை செய்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
ஜெயிலில் மருத்துவ மையமும் உள்ளது. ஆனால் கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இதுபோல் கடந்த 23-ந் தேதி கைதி ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவரை சிறை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை சிறைத்துறை காவலர் ஜெயக்குமார் ஓட்டிச் சென்றார்.
பின்னர் சிறைக்கு வாகனம் திரும்பியபோது வழக்கம் போல் வாகனத்தை சிறை துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவரின் இருக்கையின் கீழ் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்(ஹான்ஸ் பொட்டலங்கள்) இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த போதை பொருட்கள் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கோர்ட்டுக்கு அறிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சிறை கைதிகளுக்கு சப்ளை செய்ய ஆம்புலன்சில் போதை பொருள் கடத்திய சிறைத்துறை டிரைவர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறைத்துறை டிரைவர் ஜெயக்குமார் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
- இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
- போலீசார் 2 வாலிபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 2 வாலிபர்களை, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். நாகை மாவட்டம் சங்கரன்பந்தல் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ரதிஷ்குமார் (வயது25). இவர் காரைக்காலில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இவர் காரைக்கால் சிங்காரவேலர் சாலை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கு இளைஞர்கள் சிலர் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டி ருந்ததை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
அப்பொழுது 2 மர்ம நபர்கள் ரதிஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, கண் இமைக்கும் நேரத்தில் திருடி சென்றனர். இதனை பார்த்த ரதிஷ்குமார் சத்தம் போட்டார். தொடர்ந்து ரிதிஷ் குமார் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 2 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் காரைக்கால் அம்மன்கோவில் பத்து, கூடல் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (26) மற்றும் திரு.பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த விக்ரம் மூர்த்தி (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் 2 வாலி பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.






