என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக வயிற்று வலி"

    • அமுதா அதிக வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.
    • இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திபடுகையைச்சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அமுதா (வயது 48). அமுதா அதிக வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார். இதற்கான சிகிச்சையும் அவர் எடுத்து வந்துள்ளார். இருந்தும், வயிற்று வலி அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இப்படி வயிற்று வலியால் அவதியுறுவதை காட்டிலும் செத்துவிடலாம் என புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அமுதா குடித்தார். அப்போது அங்கு வந்தகலியபெருமாள் உடனடியாக தேனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்து போனார். இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×