என் மலர்
புதுச்சேரி
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை எப்போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
- உழைத்து வாழ்வில் உயர வேண்டும். உழைப்பை தவிர வேறு பாதை இல்லை.
புதுச்சேரி:
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் புதுவைகிளை மற்றும் ஈடன் பவர் குவாலிட்டி நிறுவனம் சார்பில் புதுவையில் தனியார் ஓட்டலில் நடந்த உணவு அலங்காரப் போட்டியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது:-
இளைஞர்கள் தங்களை தினமும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை வளரும். வாழ்க்கையில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் எப்போதும் உற்சாகமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை எப்போதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை வாழ்வதற்காக தான். சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். பாதையில் இருக்கும் முட்களையும் கற்களையும் அகற்றி நமக்கான பாதையை உருவாக்கி நடக்க வேண்டும்.
உழைத்து வாழ்வில் உயர வேண்டும். உழைப்பை தவிர வேறு பாதை இல்லை.
சமூக வலைதளத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும். தாய் தந்தையை மதிக்க வேண்டும். அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. இலக்கை குறிவைத்து பயணம் செய்ய வேண்டும். முயற்சி செய்து இலக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.
- புதுவையில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் சமூக விரோதிகள் சிலர் திட்டமிடுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
- பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
புதுவையில் பிரெஞ்சு-இந்திய குடியுரிமை பெற்றவர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பிரான்ஸ் நாட்டில் தங்கி வேலை செய்து வருபவர்கள் புதுவையில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி அதற்கு பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம்.
இதற்கிடையே புதுவையில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் சமூக விரோதிகள் சிலர் திட்டமிடுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தியால்பேட்டையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஒருவரை மிரட்டி சிலர் பணம் கேட்டனர். இதுகுறித்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் மற்றும் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து புதுவைக்கான பிரெஞ்சு தூதர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், அவர்கள் அமைதியாக வாழ வழி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் புதுவையில் சொத்துக்களை மிரட்டி அபகரிப்பதை கண்டித்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இரட்டை குடியுரிமை பெற்ற மக்கள் பாரீஸ் மியட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாலா சீனிவாசன், ஜனார்த்தினி, முருக பத்மநாபன், தெய்வப்பிரகாசம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
புதுவையில் சொத்துக்களை அபகரிப்பவர்கள் மீதும், குடியுரிமை பெற்றவர்களை மிரட்டி பணம் பறிக்க நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து பிரான்ஸ் அரசு இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து பிரெஞ்சு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தூதரக அதிகாரிகளிடம் புகார் மனுவையும் அளித்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட பொழுது, முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியவரை புதுச்சேரி முதலமைச்சர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும், மருத்துவர்கள் மற்றும் ஊழியரிடம் முறை யான விசாரணை நடத்த வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று காலை அரசு பொது மரு த்துவமனை மருத்துவர்கள் . செவிலியர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
- அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் இறந்த விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். உரிய சிகிச்சை தரவில்லை என உறவினர்கள் புகார் கூறிய நிலையில், சரியான மருத்துவம் பார்க்கப்பட்டதாக அரசின் குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
- மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வியில் ஏற்பட்ட படிப்பு போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.
மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து,சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான்.
எனவே, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறைரீதியிலான் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படவேன்டும் என, காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாகதியாகராஜன், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட பலர், பாலமணிகண்டன் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மாணவன் சிகிச்சை விசயத்தில் அலட்சியமாக செயல்பட்ட, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சம்பளம் வாங்கிகொண்டு, சர்வீஸ் பிளேஸ்மெண்ட் என்ற பெயரில், புதுச்சேரி மற்றும் பிற இடங்களில் பணிபுரிவோரை உடனடியாக மருத்துவமனைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழு, இன்று காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு, காரைக்கால் இந்துமுன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திரு.பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினிடெம்போ சங்கத்தினர், ஓட்டல்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
- ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலம ணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்து வமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் சிறுவன் உயிரிழக்கவில்லை என்று மருத்துவ குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இதனால், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.
- நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் காரைக்கால் வழியாக காரில் தப்பி செல்லும் போது, காரைக்கால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
- காரைக்கால் எல்லையான அம்பகரத்தூர் வழியாக சேத்தூர் அருகே சென்ற குற்றவாளிகள் காரை தமிழக போலீசார் விரட்டி பிடிக்கும் பொழுது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
புதுச்சேரி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பைனான்சியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் காரைக்கால் வழியாக காரில் தப்பி செல்லும் போது, காரைக்கால் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த பைனான்சியர் மனோகரன் என்பவர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, கொலை தொடர்பாக சிலர் கோர்ட்டில் சரணடைந்து வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளிகள் 2பேர் காரைக்கால் வழியாக தப்பி செல்வதாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசித் தகவல் சென்றது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க காரில் சென்றனர். காரைக்கால் எல்லையான அம்பகரத்தூர் வழியாக சேத்தூர் அருகே சென்ற குற்றவாளிகள் காரை தமிழக போலீசார் விரட்டி பிடிக்கும் பொழுது, கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.
அவ்வாறு செல்லும் பொழுது சாலையில் சென்ற சிலரை கார் இடித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போக்குவரத்து போலீசார், போலீஸ் ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தில் திருநள்ளார் சாலையில் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. தொடர்ந்து, ஒரு சிறிய சந்தில் குற்றவாளிகள் கார் சென்ற பொழுது, காரை மடக்கி பிடித்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பின்னால் வந்த தமிழக போலீசார், அந்த காரில் வந்தவர்கள் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற கொலையின் முக்கிய குற்றவாளிகள் என்றும் அவர்களை பிடிக்க விரட்டி வந்ததாக கூறினர். இதனை அடுத்து பல வாகனங்கள் மீது விபத்தை ஏற்படுத்தியதால் 2 குற்றவாளிகள் ஓட்டிவந்த காரை பறிமுதல் செய்து, 2 குற்றவாளிகளை(கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதால் பெயர்களை , காரைக்கால் போலீசார் தெரியப்படுத்தவில்லை) தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சினிமா பாணியில் தமிழக மற்றும் காரைக்கால் போலீஸார்கள் காரை விரட்டி சென்று குற்றவாளிகளை பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, காரைக்காலில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரை க்கால் மீன்பிடி துறைமு கத்திலிருந்து, கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை, கடலில் நிலவும் தட்ப வெட்ப நிலைக்கு எதிர் மாறாக, இந்திய எல்லை யில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இலங்கைக்கு உட்பட்ட முல்லை தீவு அருகே சென்றதால், அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கீழகாசாக்குடி மேடு மீனவர்களின் விசை ப்படகை சுற்றி வளைத்தது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 12 மீனவர்க ளையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்றனர். இச்செய்தி கீழக்காசாக்குடி மேட்டை சேர்ந்த கிராம த்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் காரைக்கால் மருத்துவமனையில் விசாரணை செய்தனர்.
- சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி யாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடை த்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலம ணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி யாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்து வமனையில் சிகி ச்சையில் இருக்கும் போது, போலீசாரும், மருத்து வர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்து வர்கள் மீது துறைரீதியிலான் நடவ டிக்கை எடுத்து தண்டிக்கப்படவேன்டும் என, காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
மாணவனின் பெற்றோ ரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். அதன்பேரில், புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உத்தரவின் பேரில், புதுச்சேரி ராஜீ வ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் டாக்டர் முரளி தலைமையில், மருத்து வர்கள் ரமேஷ், பாலச்சந்தர் உள்ளிட்ட3 பேர் கொண்ட குழுவினர், காரைக்காலுக்கு வந்தனர். இக்குழுவினர், காரைக்கால் அரசு மருத்து வமனை கண்காணிப்பாளர், டாக்டர், செவிலியர் மற்றும் ஊழியர்களிடம் துருவி த்துருவி விசாரணையில் ஈடுபட்டனர்.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை, மங்கள வாத்தியம், புனித நீர் வழிபாடு நடந்தது. 5-ந் தேதி காலை வேள்வி பூஜை, இரவு 7 மணிக்கு முதல் கால வேள்வி, இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. 8.40 மணிக்கு சற்குருவுக்கு 108 திரவியங்கள் மூலம் வழிபாடு நடத்தப்பட்டன. மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை சற்குருவிற்கு 108 திரவிய வழிபாடு நடந்தது. 9.45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. 10.15 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது.
கும்பாபிஷேகத்தில் புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி, சேலம் ஆர்.டி.ஓ.விஷ்ணுவர்தினி, கோவில் நிர்வாகி முத்துமாணிக்கராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் பெரும்பாலான குற்ற சம்பவங்கள் ஜெயிலில் உள்ள கைதிகள் தங்களது கூட்டாளிகள் மூலம் செய்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டி வந்தனர்.
கைதிகள் ஜெயிலில் இருந்தபடியே தங்களது கூட்டாளிகளுக்கு செல்போனில் பேசி எதிராளிகளை தீர்த்துக்கட்டுவது மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து ஜெயிலில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. ஆனாலும், அதிநவீன செல்போன் மூலம் கைதிகள் தொடர்ந்து தங்களது கூட்டாளிகளிடம் பேசி வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஜெயிலில் கைதிகளின் அறைகளில் அடிக்கடி சோதனை நடத்தி அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதனை மீறியும் கைதிகள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சோதனை நடத்தியபோது ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜெயிலில் கைதிகளின் அறைகளில் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஜெயில் வார்டன்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரவீன்குமார் என்பவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை நடத்தியபோது அங்குள்ள கழிவறையில் செல்போன் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






