என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
    • புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு, காரைக்கால் மட்டுமில்லாது, அண்டை மாவட்டமான, நாகை,திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான நோயாளிகள், தினசரி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றவண்ணம் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, உயர்தர சிகிச்சை, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஜிம்பர் சார்பில், அண்மையில், சுமார் ரூ.30 கோடிக்கு மேல் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், தொடரும் அவலமாக, கடந்த சில வாரமாக, நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், வெறும் தரையிலும், சிலர் பாய், போர்வை உள்ளிட்ட வசதிகளோடு படுத்துறங்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர். இதில், அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட நோயாளிகளும் இருப்பது வேதனையானது. இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய ஆஸ்பத்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.

    அதேபோல், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற அனுமதி பெற்று, புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும். இல்லையேல் அவர்களின் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, குறைந்த செலவில், நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி. ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத ந்தால், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை க்காக வந்து மரணம் அடையும் நோயாளிகளின் எண்ணி க்கை குறையும். எனவே, முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை செய்துதர முதல் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்வரவேண்டும், என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரைக்காலில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • உன் குழந்தையை கொஞ்சம் கொடு காட்டிவிட்டு வருகிறேன்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பிறந்து 6 நாள் ஆன நிலையில், பஸ் நிறுத்தம் அருகில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி மஞ்சு(வயது33). இவர் கடந்த வாரம், காரைக்கால் அரசு மருத்துவமனையில், பிரவசத்துக்காக சேர்க்கப்பட்டார். அப்போது, 45 வயது மதிக்கத்தக்க ரபீக் என்ற பெண் தனது மகளை இதே மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்த்துள்ளதாக கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர், மஞ்சுவின் செல்போன் எண்ணை வாங்கிகொண்டு, குழந்தை பிறந்துவிட்டதா என கூறி அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுவிற்கு, கடந்த 8-ந் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த ரபீக், குழந்தை மற்றும் மஞ்சுவை பார்த்து, அப்பிள், ஆர்லிக்ஸ் மற்றும் பொருட்களை கொடுத்து நலம் விசாரித்து வந்துள்ளார்.

    பின்னர் 2 நாட்கள் கழித்து, எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால், உன் குழந்தையை கொடு, நான் நன்றாக வளர்க்கிறேன் என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, மஞ்சு, தரமுடியாது என கூறியுள்ளார். தொடர்ந்து, கடந்த 13-ந் தேதி, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்த மஞ்சுவை, காரைக்கால் எம்.ஓ.எச் பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்தி, தனது உறவினர் நசிமா பானு என்ற பெண்ணுடன் சென்று, தனது மகள் அருகில் உள்ள ஆட்டோவில், குழந்தை இல்லை என்ற சோகத்தில் இருப்பதால், உன் குழந்தையை கொஞ்சம் கொடு காட்டிவிட்டு வருகிறேன். என கூறி, பிறந்த 6 நாள் ஆண் குழந்தையை, ரபீக், மஞ்சுவிடம் வாங்கிச்சென்றுள்ளார். ஒரு மணி நேரம் ஆகியும் குழந்தையை கொண்டுவராததால், நசிமா பானுவிடன் மஞ்சு கேட்டுள்ளார். அதற்கு, நீ இங்கேயே நில்லு, நான் குழந்தையை வாங்கி வருகிறேன் என நசிமா பானு சென்றதாக கூறப்படுகிறது.

    நசிமா பானுவும் குழந்தையை கொண்டுவராததால், ரபீக்கு மஞ்சு போன் செய்துள்ளார். அதற்கு, குழந்தையை பார்த்ததும், தனது மகள் குழந்தையுடன் சென்றுவிட்டதால், மறுநாள் காலை கொண்டுவருகிறேன் என ரபீக் கூறியதாக தெரிகிறது. மறுநாளும் குழந்தையை கொண்டுவராததால், மஞ்சு காரைக்கால் நகர போலீஸ்ல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ரபீக், நசீமா பானு என்ற இரு பெண்களை வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் குழந்தை கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் பகுதியில் ரபீக் மற்றும் நசீமா பானுமிடமிருந்து மீட்டு, நேற்று காரைக்காலில் உள்ள தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் குழந்தை உண்மையில் கடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது ஒப்பந்த முறையில் குழந்தை கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து ரபீக் மற்றும் நசீமா பானுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால் பூவம் அரசு தொடக்க பள்ளியில் ஸ்மார்ட்-கணினி வகுப்பறை திறக்கப்பட்டது.
    • நூலக வசதி, மாணவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஆகியவை அமைந்துள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்துள்ள பூவம் அரசு தொடக்க பள்ளியில், தனியார் தொழிற்சாலை பங்களிப்புடன், ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மற்றும் கணினி வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. இதனை, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி நேற்று திறந்து வைத்தார்.

    இப்பள்ளியின் சிறப்பு அம்சமாக, கணினி வழி கல்வி மற்றும் இ.கணெக்ட் மூலம் கற்றல் கற்பித்தல் மற்றும் நூலக வசதி, மாணவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஆகியவை அமைந்துள்ளன. இந்நிகழ்வில் காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், வட்ட ஆய்வாளர் பொன்.சவுந்தர ராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

    • படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.
    • மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். காரைக்காலில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்ப படித்து வந்தார். படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.

    இதில் மயங்கி விழுந்த பால மணிகண்டன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாய் சகாய மேரி விக்டோரியாவை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு எலி மருந்து ஏேதனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் வடிவேலு.
    • பீடி பற்ற வைத்த போது உடையில் தீ பிடித்ததில் முதியவர் உடல் கருகி இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது80). இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் இவர் தனிமையில் வசித்து வந்தார்.

    இவருக்கு உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய உதவிகளை சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரில் வசிக்கும் இவரது மருமகள் கலா மற்றும் பேரன் விஜயகாந்த் ஆகியோர் செய்து வந்தனர்.

    வடிவேலுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதற்கிடையே வயது முதிர்ச்சி காரணமாக வடிவேலுக்கு பார்வை குறைபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வடிவேலு வீட்டில் பீடி பற்றவைத்த போது தீக்குச்சி இவரது உடையில் விழுந்து தீபிடித்தது.

    தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனால் வலியால் வடிவேலு அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரது மருமகள் கலாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலா மற்றும் அவரது மகன் விஜயகாந்த் ஆகியோர் விரைந்து வந்து வடிவேலை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை வடிவேலு பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது பேரன் விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 580 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் மாதம் ரூ.11 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர். பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2017-ல் 2 மாதத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஆனால் ஜிப்மரில் இப்போதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதை கண்டித்து ஜிப்மர் ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், கண்காணிப்பாளர் கிருஷ்ணகோபால்கோயல் ஆகியோர், சங்க தலைவர் சிவசங்கரன், பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி உட்பட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் நோயாளிகளை இடமாற்றம் செய்தல், மருத்துவ பதிவேடு, புறநோயாளி பதிவு, உள் நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், சலவை, எக்ஸ்ரே, ரத்த வங்கி உட்பட 60-க்கும் மேற்பட்ட துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துறைகளில் தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    • காரைக்காலில் இருந்து டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர்.
    • தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94 வரை விற்பனை செய்யப்படுவதால், இந்த கடத்தல் என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பத்தூர் பகுதியில், திருநள்ளாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது காரைக்கால் அடுத்த பச்சூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து, தமிழக பகுதியான சேலத்திற்கு, 12,000 லிட்டர் டீசல் கடத்தி சென்றது தெரியவந்தது. காரைக்காலில் ஒரு லிட்டர் டீசல் ரூ.86 என்றால், தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94 வரை விற்பனை செய்யப்படுவதால், இந்த கடத்தல் என லாரி ஓட்டுநர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதனை அடுத்து, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரிச்செல்வன் (வயது 25), பெட்ரோல் பங்க் மேலாளர் ராஜ்குமார் (38), ஊழியர் மதிமாறன் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கைது செய்யப்பட்ட 3 பேரையும், கடத்தல் லாரியையும் ஒப்படைத்தனர்.

    • கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.
    • ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார்.

    புதுச்சேரி :

    காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியில் வசிப்பவர்கள் ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதிகள். ஸ்டெல்லா மேரி வரிச்சிக்குடியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சலேத் நிதிக்சனா (வயது 14) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், 7-ம் வகுப்பு படித்து வந்தார். சலேத் நிதிக்சாவிற்கு கடந்த சில மாதமாக தசை சுருக்க நோய் ஏற்பட்டதால், சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி சலேத் நிதிக்சனா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஏன் வாந்தி எடுத்தாய் என, சிறுமியிடம் தாய் கேட்டபோது, ஜன்னல் பக்கம் இருந்த கேக் ஒன்றை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்சனா கூறி மயங்கி விழுந்துள்ளார். உடனே தாய் ஸ்டெல்லா மேரி சிறுமி சலேத் நிதிக்சனாவை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த சிறுமி சலேத் நிதிக்சனா சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இது குறித்து, கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பர்கரை பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்தது.
    • ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறினர்.

    சேதராப்பட்டு:

    புதுவை கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டல் உள்ளது.

    இங்கு திண்டிவனத்தை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வரும் டேவிட் (வயது 29) மற்றும் இவரது நண்பரும் இந்த ஓட்டலில் பர்கர் வாங்கி உள்ளனர்.

    அதை சாப்பிடும்போது அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனே அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த டேவிட் இதுகுறித்து உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறினர்.

    அதற்கு டேவிட் வேண்டாம் என கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து புகாரையும் அனுப்பி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் பிரபல உணவுக்கடையில் சாப்பிடும் தின்பண்டத்தில் கையுறை இருந்தது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார்.
    • இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் பட்டி னச்சேரி சுனாமி குடியி ருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது30). எலெக்ட்டிரிக்கல் வேலை செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார். தொடர்ந்து, நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தில், புதிய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை தொடங்கினார். வீட்டுக்கா ரரிடம் பணம் வாங்கி வேலையை தொடங்கிய இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    எனவே கடந்த ஜூலை மாதம் வீட்டைவிட்டு சென்றவர், இதுநாள் வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. சமயத்தில் இது போன்ற வீட்டில் சொல்லாமல் செல்லும் சிவக்குமார் சில நாட்களில் வீடு திரும்புவது வழக்கமாம். அதுபோன்று சென்றி ருப்பார் என மனைவி விக்னேஸ்வரி இருந்து விட்டார். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பாத தால், கலக்கம் அடைந்த விக்னேஸ்வரி, சொந்த காரர்கள் வீடுகளில் பல நாட்கள் தேடியும், விசாரித்தும் சரியான பதில் இல்லாததால், திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சிவக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான பி.எஸ்.ஆர். கோல்டன் நகர் அருகே, சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசாரை பார்த்ததும், வாலிபர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து, போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர், அவரை சோதனை செய்போது, அவர் பாக்கெட்டில் 70 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவரிடம் நடத்திய விசார–ணையில், காரைக்கால் லெமேர் வீதியைச்சேர்ந்த அந்துவான் (வயது 22) என்பதும், நாகை மாவட்ட–த்திலிருந்து கஞ்சாவை வாங்கிவந்து, அதை சிறு சிறு பொட்டங்களாக மாற்றி சிறுவர்களுக்கு விற்றதையும் அவர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அந்துவானை கைது செய்து, அவரிட–மிருந்து ரூ.8 ஆயிரம் மதிப்பி–லான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது.

    புதுச்சேரி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×