என் மலர்
புதுச்சேரி
- தெலுங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.
- தெலுங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
புதுச்சேரி :
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரட்டை ஆட்சி நடத்துவதாகவும், தெலுங்கானாவில் அவரால் மக்களை நேரடியாக சந்தித்து குறைகேட்க முடியுமா? என்றும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த துறையில் எந்த பதவியில் இருந்தாலும் மக்கள்சேவைதான் பிரதான பணி என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை. புதுவை தலைமை செயலாளரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். அரசு செயலாளர்கள், கலெக்டர்கள், துறை தலைவர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் அலுவலக பணிகளை விடுத்து மக்களை சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.
இதற்கான சுற்றறிக்கை அனுப்ப கேட்டுள்ளேன். அதற்கு அவரும் இசைவு தெரிவித்துள்ளார். அதேபோல நானும் என்னை சந்திக்க விரும்பி முன்பதிவு செய்யும் பலரையும், பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால் மின்னஞ்சல் போன்றவை மூலமாக தொடர்புகொள்ள முடியாதவர்கள் குறிப்பிட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டால் நாங்கள் தங்களை சந்திக்க வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதால் மக்களை சந்திக்க மாதத்தில் 2 நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன்.
இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது. மக்களை சந்திக்கும் பழக்கம் எனக்கு நெடுநாட்களாகவே இருந்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். மாணவர்களையும், பெண்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன்.
நான் பதவியேற்ற முதல் வாரத்திலேயே பிரஜா தர்பார் என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். இது யாருடைய, எந்த நிகழ்வின் தொடர்ச்சியும் அல்ல. நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன். தெலுங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூறியதைப்போல் அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.
அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு தெலுங்கானா மாநிலத்தில் நான் 3-ம் ஆண்டில் செய்த அன்றாட பணிகளை பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டம்.
- தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக மேலாண்மை வணிகவியல் துறை, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் பட்டய (ஏசிசிஏ) சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர் கே.தரணிக்கரசு, தேசிய கல்விக் கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏ.சி.சி.ஏ. கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏ.சி.சி.ஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- என்.சி.சி மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
- முகாமில் 10 என்சிசி அதிகாரிகள், 5 ராணுவ பயிற்றுநர்கள் உள்ளிட்ட 15 பேர் பயிற்சி அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 என்சிசி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி;
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் 8 நாட்கள் நடைபெறும் என்சிசி மாணவர்களின் வருடாந்திர பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இப்பயிற்சி முகாமை என்சிசி கமாண்டிங் அதிகாரி கர்னல் எல்.கே.ஜோஷி தொடங்கி வைத்தார். இம்முகாமில் ராணுவப் நடை பயிற்சி, துப்பாக்கியை பிரித்தல், மீண்டும் கோர்த்தல் மற்றும் சுடுதல் பற்றிய பயிற்சி, துப்புரவு பணி, தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முகாமின் நிறைவில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் கேம்ப் பையர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. முகாமில் 10 என்சிசி அதிகாரிகள், 5 ராணுவ பயிற்றுநர்கள் உள்ளிட்ட 15 பேர் பயிற்சி அளிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 என்சிசி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
- சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஆனந்த்.
- இடமாற்றம் செய்ததால் சென்னையை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் புதுவை தங்கும் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 57). இவர் அங்குள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிபுரிந்து வரும் அலுவலகத்திலேயே அவரது மனைவி லட்சுமியும் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே ஆனந்தை பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஆனந்த் புதுவை புதிய பஸ் நிலையம் அருகே மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று மதியம் விடுதி ஊழியரிடம் அறை எடுத்து தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவு வேண்டுமா? என்று கேட்டு வரும்படி மானேஜர் பாபு அறிவுறுத்தினார்.
அதன்படி விடுதி ஊழியர் ஒவ்வொரு அறையாக சென்று வாடிக்கையாளர்களிடம் மதிய உணவு வாங்கி தருவது குறித்து கேட்டு வந்தார்.
அதன்படி ஆனந்த் தங்கிய அறைக்கு சென்று விடுதி ஊழியர் கதவை தட்டிய போது அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர் மானேஜர் பாபு உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது ஆனந்த் கழிவறை நுழைவு வாயிலில் சிமெண்ட் கட்டையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸ் விசாரணையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஆனந்த் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி ஆனந்தின் மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அவர் புதுவைக்கு விரைந்து வருகிறார்.
- விவேகானந்தன் காரைக்கால் பொதுப்பணித்துறைக்கும், பிரேமா காமராஜர் என்ஜினீயர் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- ஊழல் குற்றச்சாட்டில் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
கழிவறை கட்டியதில் மோசடியில் ஈடுபட்டு அரசு பணத்தை ஊழல் செய்த இளநிலை என்ஜினீயர், கல்லூரி இயக்குனர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் கடந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வட்டார வளர்ச்சி முகமை மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் புதுவை அரியாங்குப்பம் முன்னாள வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா ஆகியோர் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டாமல் கட்டியதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே விவேகானந்தன் காரைக்கால் பொதுப்பணித்துறைக்கும், பிரேமா காமராஜர் என்ஜினீயர் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதில் கழிவறை கட்டாமல் பயனாளிகள் பெயரை பயன்படுத்தி அரசு பணத்தை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
அதனடிப்படையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் விவேகானந்தன் மற்றும் அரசு என்ஜினீயர் கல்லூரி இயக்குனர் பிரேமா ஆகியோரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட் டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்ரி விற்பனையை, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பஸ் நிலையம் அருகே, மோட்டார் சைக்களில் வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரியை விற்பனை செய்வதாக, நகர போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. தொடர்ந்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, லாட்டரி விற்பனை செய்த நபர், அங்கிருந்து கிளம்பினார். போலீசார், அவரை விரட்டி பிடித்து, மோட்டார் சைக்கிளை சோதனைச் செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்ரி, டைரி, நோட்டு, 3 செல்போன், பணம் ரூ.2,700 இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 29) என்பதும், அவரது செல்போனில், வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், ஸ்ரீநாத் தலைவனாக சேலத்தை சேர்ந்த மோகன்ராஜ் செயல்படுவது தெரிய வந்தது. மோகன்ராஜின் செல்போனை கண்காணித்த போலீசார் அவரிடம் காரைக்காலை சேர்ந்த ஹாஜா மைதீன் (48), குல் முகமது (40), ஹாஜா (46), ஆகியோர் காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஸ்ரீநாத், ஹாஜா மைதீன் (48),குல் முகமது (40), ஹாஜா (46), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 செல்போன், லாட்ரி, செல்போன், ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மூளையாக செயல்படும் சேலம் மோகன்ராஜ் மற்றும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
- புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நேற்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதேபோல அங்கு புதிதாக 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
- புதுவையில் மீனவ கிராமங்களுக்கு இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினையும் ஏற்பட்டது.
- கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுருக்குவலையுடன் துறைமுகம் வந்த படகை, சில மீனவர்கள் விரட்டியதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் காலாப்பட்டு, வீராம்பட்டினம், வம்பாகீரப்பாளையம், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், பிள்ளை சாவடி, சோலை நகர், பனித்திட்டு, நரம்பை உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 250-க்கும் மேற்பட்ட படகுகளும், அங்கீகரிக்கப்படாத 38-கண்ணா படகு என்ற சுருக்குவலை பயன்படுத்தும் படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
சுருக்கு வலைகளை பயன்படுத்துவதால் மீன் இனங்கள் அழியும் அபாயம் உள்ளதால் சுருக்கு வலயை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவு புதுவையில் தீவிரமாக நடைமுறைப் படுத்தவில்லை.
இதன் காரணமாக புதுவை மற்றும் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி புதுவை கடல் பகுதியில் மீன்களை பிடித்து வருகின்றனர். இதனால் புதுவையில் மீனவ கிராமங்களுக்கு இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினையும் ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுருக்குவலையுடன் துறைமுகம் வந்த படகை, சில மீனவர்கள் விரட்டியதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இதனையடுத்து வீராம்பட்டினம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்து சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் சுருக்கு வலையுடன் புதுவை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் யாரும் நுழையக் கூடாது அப்படி மீறி நுழைந்தால் அவர்களது படகுகளையும், வலைகளையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கடந்த 3 நாட்களாக போலீசார் மீனவ கிராமங்களிலும், துறைமுக வளாகத்திலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சுருக்கு வலையுடன் சில மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளதாகவும், அவர்கள் எப்படி தங்களது வலைகளை அங்கேயே விட்டுவிட்டு வர முடியும்.
எனவே அவர்கள் சுருக்கு வலையுடன் துறைமுகம் வர அனுமதித்து, சுருக்கு வலைகளை பயன்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு மற்ற மீனவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனிடையே, சுருக்கு மடி வலைகளுடன் கடலுக்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்று கரை திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மீனவ கிராமங்களில் பதட்டம் உருவானது. இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் தேங்காய்திட்டில் இருந்து மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீனவர்களுக்குள் தகராறு ஏற்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
இதனிடையே துறைமுக பகுதியில் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் முருகன், மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கலெக்டர் தலைமையில் மீண்டும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
- ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலக வாயிலில் நலவழித்துறை யில் பணிபுரியும் ஆஷா ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போரா ட்டத்திற்கு ஆஷா பணி யாளர் சங்க தலைவர் ரோசி தலைமை தாங்கி னார். காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொருளாளர் மயில்வா கனன், துணை தலைவர் சுப்பராஜ், இணை பொதுச் செயலாளர் கலைச்செல்வன், செய லாளர் ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில், காரைக்கால் நலவழித்து றையில் பணிபுரியும் ஆஷா ஊழியர்களுக்கு, அறிவி க்கப்பட்ட ஊக்கத்தொ கை ரூ.3000 உடனே வழங்க வேண்டும். முறையான விடுமுறை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.போராட்டத்தில் ஈடு பட்ட ஊழியர்களை, துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் சந்தித்து, ஊழியர்களின் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக கூறினார். மேலும் இந்த போராட்டத்தில் ஏராள மான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிடவேண்டும் அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி:
மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வலியுறுத்தி, காரைக்காலில் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நேற்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காரைக்கால் பெரிய பள்ளி வாசல் முகப்பில் தொடங்கிய இந்த பேரணி க்கு, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணை ப்பாளர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பேரணி, காரைக்கால் திருநள்ளாறு சாலை, பாரதியார் சாலை, தோமாஸ் அருள் வீதி, காமராஜ் சாலை வழியாக சென்று, காரைக்கால் கடற்கரை சாலையில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், திரு.பட்டினம், அம்பகரத்தூர், நிரவி, சேத்தூர், நல்லம்பல், திருநள்ளாறு, புதுத்துரை, நேரு நகர் பகுதி ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமு கர்கள், சமுதாய அமைப்பு களின் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், தேசிய புலனா ய்வு முகமையை கலைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்ட த்தில், சிறுபான்மை சமூ கங்கள் மற்றும் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளை யும், ஜனநாயக அமைப்பு களையும் அச்சுறுத்தும் வகையிலும் மற்றும் மனித உரிமைக்கு எதிரான மத்திய அரசின் உ.பா சட்டத்தை உடனே திரும்பபெற வேண்டும். மாநில அரசின் உரிமை களையும், மாநில காவல் துறையின் அதிகாரங்க ளையும் முற்றிலும் பறிக்கக் கூடிய தேசிய புலனாய்வு முகமையை, ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தவறாக பயன்படுத்தி வருவதை உடனே கைவிட வேண்டும். அல்லது அந்த அமைப்பை கலைக்கவேண்டும். என வலியுறுத்தப்பட்டது.
- சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதை ஏற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு புது நகர் பகுதியில் கெஸ்ட் ஹவுசுடன் மதுபார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து காலாப்பட்டு பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது போராட்டம் நடத்தியவர்கள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தில் உரிமம் இல்லாமல் மது பார் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாரால் இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ காலாப்பட்டு தொகுதியில் காலாப்பட்டு, ஆலங்குப்பம் பகுதியில் 4 மது கடைகள் திறக்கப்படுவதாக இருந்ததை அறிந்து சட்டசபை வளாகத்தில் முற்றுகையிட்டேன்.
எனக்கும், முதல்-அமைச்சருக்கும் இதனால் பிரச்சனை ஏற்பட்டது. இதனை நீங்கள் எல்லோரும் அறிந்தது தான். எனவே இந்த பகுதியில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளேன். இந்தப் பகுதியில் கூடுதலாக மதுக்கடைகள் பார் திறக்க அனுமதிக்க மாட்டேன். அவ்வாறு திறந்தால் மக்களோடு சேர்ந்து நான் போராடுவேன் என்று கூறினார்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதை ஏற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கில் விண்வெளி அறிவியல் கண்காட்சியை நடைபெற்றது.
- விண்வெளி அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் பைபாஸ் சாலையில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விண்வெளி அறிவியல் கண்காட்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்எல்ஏ நாஜிம், கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் பலர் உள்ளனர்.






