என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபார் திறக்க எதிர்ப்பு- கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்திய காட்சி

    மதுபார் திறக்க எதிர்ப்பு- கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியல்

    • சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதை ஏற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு புது நகர் பகுதியில் கெஸ்ட் ஹவுசுடன் மதுபார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து காலாப்பட்டு பகுதி பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், அப்போது போராட்டம் நடத்தியவர்கள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தில் உரிமம் இல்லாமல் மது பார் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாரால் இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ காலாப்பட்டு தொகுதியில் காலாப்பட்டு, ஆலங்குப்பம் பகுதியில் 4 மது கடைகள் திறக்கப்படுவதாக இருந்ததை அறிந்து சட்டசபை வளாகத்தில் முற்றுகையிட்டேன்.

    எனக்கும், முதல்-அமைச்சருக்கும் இதனால் பிரச்சனை ஏற்பட்டது. இதனை நீங்கள் எல்லோரும் அறிந்தது தான். எனவே இந்த பகுதியில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் கூறியுள்ளேன். இந்தப் பகுதியில் கூடுதலாக மதுக்கடைகள் பார் திறக்க அனுமதிக்க மாட்டேன். அவ்வாறு திறந்தால் மக்களோடு சேர்ந்து நான் போராடுவேன் என்று கூறினார்.

    கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. கூறியதை ஏற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×