search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineer killed"

    • வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது
    • போதை வாலிபர்கள் கல்லால் தாக்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சீதாபதி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 50), என்ஜினியர். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியில் கிடைத்த வேலையை செய்து வந்தார்.

    இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (26) மற்றும் சூர்யா (25) ஆகியோர் ரேசன் கடை எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாலிபால் விளையாடினர்.

    வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது.

    இதனால் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கும், போதை வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் கோபாலகிருஷ்ணை முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கற்களால் தாக்கி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற தமிழ்வாணன் மற்றும் சூர்யா ஆகியோர் மீதும் கல் வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த தமிழ்வாணன், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின்குமார், மவுரீஸ், நித்திஷ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குடும்பத்துடன் காரில் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    அரக்கோணம் அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராவணையா (வயது 33). இவர் ஓசூரில் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்பா, இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் அரக்கோணத்தில் இருந்து குடும்பத்துடன் காரில் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு ராவணையாவை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ராவணையா பரிதாபமாக உயிரிழந்தார்.

    காயம் அடைந்த ராவணையாவின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரவணணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதி முழுவதும் ேசதம் அடைந்தது.

    சூலூர்,

    சூலூர் அருகே இருகூரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது43). என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் இருகூர் பா.ஜ.க முன்னாள் இளைஞரணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இயற்கை அறக்கட்டளை அறங்காவலராகவும் பதவி வகித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று தங்கராஜ் தனது நண்பரான சரவணன்(40) என்பவருடன் காரில் இருகூர் நோக்கி வந்தார். சரவணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இருகூர் மயானம் அருகே கார் வந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதி முழுவதும் ேசதம் அடைந்தது.

    இதில் காரில் இருந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த தங்கராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த சரவணணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரேன் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால் பாரதியார் சாலையை கடக்க முயன்ற என்ஜினீயர் விபத்தில் பலியானார்.
    • இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு தனியார் நூற்பாலையில், எலக்ட்ரிக் என்ஜினியராக வேலை செய்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது49). இவர் அதே பகுதியில், தனியார் நூற்பாலை குடியிருப்பில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார். காரைக்கால் ரெயில் நிலையம் அருகே பாரதியார் சாலையை கடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்களில் வேகமாக வந்த காரைக்கால் ராஜாத்தி நகரைச்சேர்ந்த கஜனி (26) என்பவர் மோதியது.

    இதில், கோபால கிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்து போனார். இது குறித்து, கோபாலகிருஷ்ணனின் நண்பர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கஜனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வானூர் அருகே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தொள்ளமூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பி.இ. முடித்த இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.தற்போது விடுமுறைக்காக ராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தார். அங்கிருந்து மோட்டார் ைசக்கிளில் இன்று காலை புதுவை மாநிலம் புதுக்குப்பம் நோக்கிசென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்தில் இறந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல்அறிந்த வானூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.இன்று நடந்த அரசுநிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு கலெக்டர் ேமாகன் சென்றார். அப்போது மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை அவரது நண்பர்கள் 3 பேர் கொலை செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சாகுல்ஹமீது வெளி நாட்டில் இருப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவணியாபுரத்தில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.பின்னர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ்பேகம் உடனடியாக உறவினர்களை அழைத்து கொண்டு திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையோரம் கழுத்து அறுத்து முன்தசீர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த அவரது தாய், மற்றும் உறவினர்கள் மற்றும் திருவடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்தசீரை அவரது கல்லூரி நண்பர்கள் 3 பேர் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரிய வந்தது.

    கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியை இஜாஜ் அகமது (வயது 20), ஜலாலுதீன் (19), முகமது சமீர் (18) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்தசீரை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    போலீசார் விசாரணையில் முன்தசீர், ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் விவகாரத்தில் முன்தசீரை, நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கைதான 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    உத்தரபிரதேசத்தில் என்ஜினீயரை சுட்டுக் கொன்ற போலீஸ்கார் கைது செய்யப்பட்டார். #policemanarrest

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் விவேக் திவாரி (38). என்ஜினீ யரான இவர் மல்டி நே‌ஷனல் கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

    இன்று அதிகாலை 1.30 மணியளவில் தன்னுடன் பணிபுரிந்த ஒருவரை ஆடம்பர சொகுசு காரில் அழைத்து வந்தார். லக்னோவின் புற நகரான கோம்தி நகர் விரிவாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு ரோந்து சென்ற 2 போலீசார் அவரது காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டார். அதில் விவேக் திவாரி மீது குண்டு பாய்ந்தது.

    உடனே அவரை லக்னோவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் பிரசாந்த்குமார் மற்றும் உடன் இருந்த மற்றொரு போலீஸ் காரரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்த சைகை காட்டிய போது நிற்காமல் சென்றனர். பின்னர் எங்களது மோட்டார்சைக்கிள் மீதும், எங்கள் மீதும் காரை ஏற்ற முயன்றனர்.

    காரை விட்டு வெளியே வரும்படி கூறினோம். வர மறுத்து மீண்டும் காரை ஏற்ற முயன்றார். இதனால் கீழே விழுந்த நான் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டேன் என தெரிவித்தார். #policemanarrest

    ×