என்ஜினீயர் கொலையில் 3 பேரிடம் விசாரணை

வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்ததுபோதை வாலிபர்கள் கல்லால் தாக்கினர்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களிடம் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களிடம் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சீதாபதி மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 50), என்ஜினியர். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியில் கிடைத்த வேலையை செய்து வந்தார்.

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (26) மற்றும் சூர்யா (25) ஆகியோர் ரேசன் கடை எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாலிபால் விளையாடினர்.

வாலிபால் தவறி வேடிக்கை பார்த்த நபர்கள் மீது விழுந்தது.

இதனால் கோபாலகிருஷ்ணன் தரப்பினருக்கும், போதை வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் கோபாலகிருஷ்ணை முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கற்களால் தாக்கி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற தமிழ்வாணன் மற்றும் சூர்யா ஆகியோர் மீதும் கல் வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த தமிழ்வாணன், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின்குமார், மவுரீஸ், நித்திஷ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com