என் மலர்
நீங்கள் தேடியது "arrested friend"
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சாகுல்ஹமீது வெளி நாட்டில் இருப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவணியாபுரத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளார்.பின்னர் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ்பேகம் உடனடியாக உறவினர்களை அழைத்து கொண்டு திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையோரம் கழுத்து அறுத்து முன்தசீர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அவரது தாய், மற்றும் உறவினர்கள் மற்றும் திருவடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்தசீரை அவரது கல்லூரி நண்பர்கள் 3 பேர் சேர்ந்து தீர்த்து கட்டியது தெரிய வந்தது.
கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியை இஜாஜ் அகமது (வயது 20), ஜலாலுதீன் (19), முகமது சமீர் (18) ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்தசீரை கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் முன்தசீர், ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் விவகாரத்தில் முன்தசீரை, நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கைதான 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (30). இவர் கருமத்தம் பட்டியில் உள்ள ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 25-ந் தேதி மங்கலம் அருகே உள்ள கல்லப்பாளையம் காட்டு பகுதியில் மகேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் முத்துசாமி, சரோஜினி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மகேந்திரனை அவரது நண்பர்கள் குமார் (31), செந்தில் குமார் (28)பாண்டியன் (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-
நாங்கள் 4 பேரும் அடிக்கடி மது குடிப்போம். இதற்கு பணம் தேவைப்பட்டால் மங்கலத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து மது அருந்துவோம்.
மேலும் இரவு நேரங்களில் மங்கலம் பகுதிகளில் உள்ள தென்னை மரத்தில் இளநீர்களை திருடி பகலில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து வந்தோம்.
நாங்கள் 3 பேரும் தென்னை மரத்தில் ஏறி இளநீர் வெட்டுவோம். அதனை மகேந்திரன் தான் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் பணத்தை பிரிப்பதில் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
மகேந்திரன் அதிக பணத்தை எடுத்து விடுவார். இதனை பல முறை அவரிடம் கேட்டு வந்தோம். சம்பவத்தன்று இரவு இளநீர் திருட சென்றோம். அப்போது மது அருந்தினோம். அந்த சமயத்தில் மகேந்திரனிடம் நீ மட்டும் பணத்தை அதிகமாக எடுத்து கொள்கிறாயே? என கேட்டோம்.
அதற்கு அவர் நீங்கள் இளநீரை பறித்து மட்டும் தான் கொடுக்கிறீர்கள். நான் தான் ஊர்? ஊராக சென்று விற்று வருகிறேன். அதனால் தான் அதிக பணத்தை எடுத்து கொள்கிறேன் என்றார்.
இதில் எங்களுக்குள் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த நாங்கள் இளநீர் வெட்டும் அரிவாளால் மகேந்திரனை துரத்தி சென்று வெட்டி கொன்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.






