என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காரைக்கால் மேலகாசாகுடியில் சாலை விபத்து: சிறுவன் பலி-ஒருவர் காயம்
  X

  காரைக்கால் மேலகாசாகுடியில் சாலை விபத்து: சிறுவன் பலி-ஒருவர் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிஷோரின் தலையில் பலத்த காயமுற்று மயங்கினார்.
  • போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  புதுச்சேரி:

  காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி தென்பாதியைச்சேர்ந்தவர் விஜயக்குமார். இவரது மகன் கிஷோர் (வயது 12). சம்பவத்தன்று சிறுவன் கிஷோர் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு, மேலகாசாகுடி சாலையில் சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, மேலகாசாகுடி சாலையில் திரும்பும், போது, அதே ஊரைச்சேர்ந்த சாலித்நாதன் (22) என்பவர் ஓட்டி வந்த வாகனம் பயங்கரமாக மோதியது. இதில், கிஷோரின் தலையில் பலத்த காயமுற்று மயங்கினார்.

  இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 2 பேரையும், அங்குள்ளோர், காரைக்கால் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்த்தனர். மேல்சிகிச்சைகாக கிஷோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, செந்தில் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×