search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம்
    X

    காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம்

    • காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் நேற்று இரண்டாம் நாளாக மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் தொடர்ந்து பலக்கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசு இந்த தனியார் மய கொள்கையை எதிர்க்காமல், மின்துறையை தனியார் மையமாக்குவதற்கு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்த முடிவை கண்டித்து, காரைக்கால் மாவட்ட மின் துறை ஊழியர்கள், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊழியர்களின் போராட்டத்தால் மின் பழுது பார்த்தல், மின் கட்டணம் கட்டுதல், மின் அளவீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு ஏற்படும் பல பகுதிகளில் பொதுமக்கள் 2 நாட்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தத் தொடர் மின்வெட்டை கண்டித்து அம்பகரத்தூர், திருநள்ளார், சேத்தூர், விழுதியூர், நல்லம்பல், திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரண்டாம் நாளாக மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின் தடை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் காரைக்கால் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.

    Next Story
    ×