என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்
    X

    பேராசிரியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்திய காட்சி.

    காரைக்காலில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்

    • காரைக்காலில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செருமாவிலங்கையில், பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பதவி உயர்வை வலியுறுத்தி நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து கல்லூரி பேராசிரியர் தாமோதரன் கூறியதாவது:-

    2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பேராசிரியர்களுக்கு எந்தவித பதவி உயர்வும் அளிக்கவில்லை. எனவே பேராசிரியர் கான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். புதுச்சேரியில் அமைந்துள்ள என்ஜினியரிங் கல்லூரியில் அங்குள்ள பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

    Next Story
    ×