என் மலர்
கேரளா
- கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் கேரளாவில் மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு, மலப்புரம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் அந்த 8 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாளை தினம் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை ஆகஸ்டு 3-ந்தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் வரை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தினம்திட்டா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டயத்தில் உள்ள எம்.ஜி. பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக் கழகம் ஆகியவை இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளன. மேலும் அனைத்து பி.எஸ்.சி. தேர்வுகளும் நாளை மறுநாள் (2-ந்தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
- வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே இன்று விபத்துக்குள்ளானது.
கேரளாவில் பெய்த பருவமழையின் கோர தாண்டவத்தால் மலைக்கிராமங்கள் மண்ணில் புதைந்தன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 160 பேர் பலியானார்கள். மேலும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், ராணுவம் மீட்புப்பணியில் இறங்கி உள்ளது. வயநாட்டில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் பலியாகியுள்ள நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே இன்று விபத்துக்குள்ளானது.
அவர் வயநாடுக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அம்மாநில சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
- பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.
வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
முண்டக்கை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் மரங்களும், பாறைகளும் அடித்து வரப்பட்டன.
கட்டுக்கடங்காத வெள்ளம், அங்கிருந்த வீடுகளையும், சாலைகளையும், பாலங்களையும் மூழ்கடித்தவாறு சென்றன.
ஒரே நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் பற்றி அறியாமல், பலர் தங்களது வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அவ்வாறு தூங்கிக்கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்களில் சிலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். சிலர், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பியவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு பணிகளில் களமிறங்கியது.
முண்டகை பகுதியில் மீட்பு பணிக்கு ஏற்பாடு நடந்து வந்த நேரத்தில், அதிகாலை 4 மணியளவில் அருகில் உள்ள சூரல்மலை மற்றும் மேப்பாடி பகுதியிலும் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கிராமங்கள் மண்ணில் புதைந்தன. அதிலும் ஏராளமான மக்கள் சிக்கினர்.
அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருந்ததாலும் அந்த பகுதி முழுவதும் மணலும், சகதியும், வெள்ளமுமாக காட்சியளித்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இருந்த இடங்கள் தரைமட்டமாகின. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
அவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்பு படையினர், குன்னூர் வெலிங்டனில் இருந்து ராணுவத்தினர், திருவனந்தபுரத்தில் இருந்து மாநில மீட்பு படையினரும், 130 ராணுவ வீரர்களும், பெங்களூருவில் இருந்து 150 ராணுவ வீரர்களும் அங்கு விரைந்தனர்.
அவர்கள் ஆங்காங்கே முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மாயமானவர்களை தேடும் பணியில் டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எனினும் கடும் சிரமங்களுக்கிடையே மீட்பு பணி தொடர்ந்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் 143 பேர் பலியானார்கள். அவர்களில் 39 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது. இன்றும் 2-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு வந்தடைந்தனர்.
முன்னதாக, வயநாடு வந்த தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
- இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
- கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது.
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கேரளா மாநிலம் வயநாடு சூரல் மலையில் ஆற்றின் நடுவே இரவிலும் தொடந்து மீட்புபணிகள் நடந்து வருகிறது. சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கயிரை கட்டி உடல்கள் ஆற்றின் நடுவில் இருந்து கரைக்கு கொண்டு வரப்படுகிறது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணியானது நடைப் பெற்று வருகிறது.
- மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கேரள இன்று நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் சவாலுக்கிடையில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணி சிக்கலாக உள்ளது. மேப்பாடி மருத்துவமனையில் 62 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்பாராமல் நடைபெற்ற நிலச்சரிவு. மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை காணாத பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் நிலச்சரிவு குறித்து விசாரித்துள்ளனர். கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 108 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 60 குழுக்கள் களத்தில் உள்ளனர்.
மீட்பு பணிக்கு வந்த 2 ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலையால் கோழிக்கோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீட்பு பணியில் கேரள போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
- நிலச்சரிவில் சிக்கியவர்களைக் மீட்பதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வேதனை அளிக்கிறது என அத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்காமல் உயிர் பிழைத்தவர்கள் தங்களின் துயர அனுபவங்களை விவரிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:
வயநாடு நிலச்சரிவில் வீடு இடிந்த தம்பதியினர், இரவு 11 மணியளவில் தங்கள் பகுதியில் சேறும் சகதியுமாக ஓடுவதைக் கண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் அருகில் உள்ள ஒரு மலையில் தஞ்சம் புகுந்தனர். அவர்களது அண்டை வீட்டாரைக் காப்பாற்ற முயற்சித்து அவர்களையும் அழைத்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வர மறுத்துவிட்டனர்.
நாங்கள் அவரை எங்களுடன் வரும்படி கெஞ்சினோம். ஆனால் அவர் அதிகாலை 1 மணிக்கு எங்களுடன் சேருவார் என கூறினார். அவர் வரவே இல்லை. காலை வரை மலை உச்சியில் காத்திருந்த அவர்கள் திரும்பி வந்தபோது அந்த பகுதி முழுவதும் அடித்து செல்லப்பட்டது என சோகத்துடன் தெரிவித்தனர்.
இதேபோல், உயிர் பிழைத்த மற்றொரு பெண் கூறுகையில், உறவினர் ஒருவர் அவர்களது குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து ஓடினார். இரவில் எனக்கு போன் செய்து அவர்கள் இப்பகுதியில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக கூறினார். அதற்கு பிறகு அவர்களை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்தக் குடும்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பதைபதைக்க தெரிவித்தார்.
- 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்,
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காளிதாஸ், கல்யாண குமார் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். காளிதாஸ் என்பவர் கட்டிட வேலைக்காக அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் காளிதாஸ் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காளிதாஸின் உடல் மேப்படி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கேரளா வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தமிழக அரசு சார்பில் 1070 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுவரை உதவிக்கோரி எந்த அழைப்பும் வரவில்லை என்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நாங்கள் 70-க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துள்ளோம். உடல்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
- அதிகமான மக்கள் காணாமல் போனதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கனமழை காரணமாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்கள் (இன்று மற்றும் நாளை) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் மேலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மிகவும் மோசமான நிலை தொடர்வதாக கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை குறித்து கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு கூறியதாவது:-
வயநாட்டில் இன்னும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. நாங்கள் 70-க்கும் மேற்பட்ட உடல்களை எடுத்துள்ளோம். உடல்களை மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். விசாரணை நடத்தப்பட்டு உடல் பரிசோதனைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிகமான மக்கள் காணாமல் போனதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளோம். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
அடிப்படை பிரச்சனை என்னவென்றால் ஒரு பகுதி (region) முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியின் பெரும்பகுதியை எங்களால் சென்றடைய முடியவில்லை. ஒரு சிறிய குழு ஆற்றைக் கடந்து அந்த பகுதியை அடைந்துள்ளது. ஆனால் உதவி வழங்கி, மீட்புப்பணியில் ஈடுபட இன்னும் அதிகமானோரை அனுப்ப வேண்டியது அவசியம்.
இன்றும் நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களால் ஹெலிகாப்படரை இயக்க முடியாது. இதனால் வான்வழி மீட்பு, மற்றும் வான்வழியாக பொருட்களை கொண்டு செல்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலம் வழியாக மட்டுமே மீட்புப்பணி மேற்கொள்ள முடியும் என்பதால் மிகவும் சவாலானது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. பாலம் இழுத்துச் செல்லப்பட்டது. இது பேரிடியாகும். என்டிஆர்எஃப் உள்ளது. ராணுவ உதவியையும் பெற்றுள்ளோம். மற்ற அமைப்புகளும் உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கேரள மாநில தலைமை செயலாளர் டாக்டர் வி. வேணு தெரிவித்துள்ளார்.
- தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள்.
- 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாவும், தொடரந்து பெய்துவரும்ம கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கிகயிருக்கும் பலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் அங்கு ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மொத்தம் 225 ராணுவ வீரர்கள் வீரர்கள் வயநாட்டில் மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணி மட்டுமின்றி, நிலச்சரிவால் அடித்துச்செல்லப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்
வயநாடு நிலச்சரிவில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணுள் புதைத்து இறந்துவிட்டனர். பலியானவர்களில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவர். சம்பவம் நடந்தது அதிகாலை 2 மணி என்பதால் பலர் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்து சமாதியானார்கள்.
கனமழை பெய்தபடி இருந்ததால், ஒருவித பதட்டத்துடனே வீட்டுக்குள் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர். அவர்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
- வயநாட்டில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
- கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன்.
- மத்திய அமைச்சர்களிடம் பேசி, வயநாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கேரள மாநிலம் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.
முண்டக்கை, சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளன. மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவார்கள் என்று நம்புகிறேன். கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
நானும் மத்திய அமச்சர்களிடம் பேசி, தேவையான உதவிகளை வழங்க கோரிக்கை விடுக்கிறேன். மீட்பு பணிகளில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த பணியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.
- பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாட்டில் 3 இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
மேலும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசவிருக்கிறேன். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.






