என் மலர்
குஜராத்
- நாட்டு மக்களை ஜாதி, பிரதேசம், மொழியின் பெயரால் சண்டையிட்டு பிரிய விரும்புகிறார்கள்.
- பல நேரங்களில் எதிரி, அடிமை மனநிலையின் வடிவத்திலும் நமக்குள் நுழைகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று குஜராத் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர், மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் ஒற்றுமை நமது எதிரிகளுக்கு வேதனை அளிக்கிறது. ஒற்றுமையை உடைக்கும் முயற்சிகளில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது இருந்தது. கடந்த காலத்தில் அவர்கள் நம்மை ஆட்சி செய்யும் போதெல்லாம் அதை உடைக்க முயன்றனர்.
அனைத்து வெளிநாட்டு சக்திகளும் இந்த ஒற்றுமையை உடைக்க அவர்கள் விரும்பியதை செய்தார்கள். நீண்ட காலத்தில் பரப்பப்பட்ட விஷமாகும். அதன் காரணமாக நாடு இன்னும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அவர்கள் நாட்டு மக்களை சாதி, மண்டலம், மொழியின் பெயரால் சண்டையிட விரும்புகிறார்கள்.
நமது ஒற்றுமையை உடைக்க முயல்பவர்கள் நமது வெளிப்படையான எதிரிகள் மட்டுமல்ல. உள்ளே இருக்கும் யாரோ ஒருவர் கூட இருக்கலாம்.
இந்த நாட்டின் மகனாக நாம் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நாம் ஒன்றாக உறுதியாக நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொங்கு பாலம் அமைந்திருந்த பகுதியில் ஆற்றுக்குள் ஏராளமானவர்கள் பிணமாக மிதந்தனர்.
- விடிய விடிய அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகமதாபாத்:
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வட மாநிலங்களில் சாத் பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பூர்வீக விழாவாக நடந்த இந்த சாத் பூஜை சமீப காலமாக வடமாநிலங்கள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 4 நாட்கள் கடுமையான விரதங்களுடன் புனித நீராடல் உள்ளடக்கியதாக இந்த விழா அமைந்துள்ளது.
நீர் நிலைகளை கங்கையாக கருதி மக்கள் அன்றைய தினம் புனித நீராடுவார்கள்.
வட மாநிலங்களில் நேற்று சாத் பூஜை விழா தொடங்கியது. ஆனால் குஜராத்தில் நடந்த விழா மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றிலும் இந்த விழா நடத்தப்பட்டது.
இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது.
சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க குஜராத் மாநில அரசு தனியார் நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து இருந்தது. அந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்பு பணியை முடித்து கடந்த 26-ந்தேதி பாலத்தை திறந்தது.
அன்று முதல் அந்த பாலத்தில் கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்ல தொடங்கினார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை தினம் என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டனர்.
அந்த தொங்கு பாலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி நின்று சாத் பூஜை செய்தனர். சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அந்த பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாதபடி பாலத்தில் தொய்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில் சில இளைஞர்கள் தொங்கு பாலத்துக்குள் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் கேபிள்கள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்த மக்களும் மசசூ ஆற்று தண்ணீருக்குள் விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந்த விபத்தை கண்டதும் அந்த பகுதியில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்பு பணியை தொடங்கினார்கள். இதற்கிடையே தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினார்கள்.
நேற்று மாலை 6.42 மணிக்கு தொங்கு பாலம் அறுந்து விழுந்த பிறகு 7.30 மணிக்குத்தான் முழுமையான மீட்பு பணிகள் தொடங்கின. நள்ளிரவு வரை சுமார் 60 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி விடிய விடிய நடந்தது.
தொங்கு பாலம் அமைந்திருந்த பகுதியில் ஆற்றுக்குள் ஏராளமானவர்கள் பிணமாக மிதந்தனர். விடிய விடிய அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று காலை வரை 180 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் மற்றும் ஆற்றில் மூழ்கி பலியானவர்களின் உடல்கள் பல்வேறு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
பாலத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. இதற்காக கூடுதலாக 5 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படையினர் குஜராத்துக்கு விரைந்து உள்ளனர்.
மீட்பு பணியை விரைந்து முடிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் டிரோன்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள். டிரோன்கள் மூலமாகவும் ஏராளமானோர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர். ராணுவமும் உதவிக்கு அங்கு அழைக்கப்பட்டு உள்ளது. இதனால் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
- திட்டத்தில் சில நீர் விநியோக குழாய்கள், கால்வாய் அமைத்தல் மற்றும் 56 தடுப்பு அணைகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.
- குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நேற்று முதல் குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பனாஸ் கந்தா மாவட்டத்தில் உள்ள தராட் நகரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைக்கிறார்.
இதையடுத்து, சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை யொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் நடந்த விழாவில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து குஜராத் முதலமைச்சர் ஆறுதல்
- விபத்து தொடர்பாக தனியார் குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு
மோர்பி:
குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக 60 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த பணியில் தேசிய பேரீடர் மீட்பு குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆற்றுத் தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்த அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாலைவரை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே மீட்புப் பணிகளை ஆய்வு செய்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கே ராணுவ டாக்டர்கள் குழு மற்றும் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும்.
- எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்களை பெற முடியும்.
பிரதமர் மோடி இன்று குஜராத்தின் வதோதரா நகரில் ராணுவ போக்குவரத்துக்கான சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் ஏர்பஸ் தலைமை வர்த்தக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் ஆகியோர் இந்த இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் திசையில் இன்று நாம் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளோம். பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும். தற்போது இந்தியா உலக அளவில் ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதில் மிகப்பெரிய நாடாக மாறி வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ போக்குவரத்து விமானங்கள், ஆயுதப்படைகளுக்கு பலம் கொடுப்பது மட்டுமின்றி, வதோதரா நகரை விமானத் துறை மையமாக அடையாளப்படுத்தும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமையுடன் பயணிகள் போக்குவரத்திற்கான பெரிய விமானங்களை இந்தியா விரைவில் தயாரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது.
இந்தத் திட்டம் மூலம் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்களை பெற முடியும். ராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பு வரிசை பட்டியலில் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக நாம் நுழைய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
+2
- மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியதவி.
- மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்நிலையில் சாத் பூஜையில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் தொங்கு பாலம் மீது நடந்து சென்றுள்ளனர். இந்த பாலத்தின் மீது சுமார் 400 பேர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆற்றில் பலரும் மூழ்கினர். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தற்போதைய நிலவப்படி 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி வழங்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
- குழு அமைப்பது என மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
- உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல் ஒரு குழுவை அமைக்கும் திட்டத்திற்கு குஜராத் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த குழுவுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை வகிப்பார் என்றும், இதில் 3 முதல் 4 உறுப்பினர்கள் வரை இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் அரசின் இந்த அறிவிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக அரசின் இந்த முடிவு சட்டசபை தேர்தலுக்கு முன்பான ஒரு ஏமாற்று வேலை என்று குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குறிப்பிட்டார். இதுபோன்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- விபத்துக்கு பிறகு, அரை-அதிவேக ரெயில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
- இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும்.
குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணியளவில் மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
மேலும் இந்த விபத்து கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த விபத்துக்கு பிறகு, அதிவேக ரெயில் சேவை சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே அதிவேக ரெயிலான வந்தே பாரத் நான்கு எருமை மாடுகள் மீது மோதியது. பிறகு இரண்டு நாட்களில் மீண்டும் மற்றொரு மாடு மீது மோதியது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "கால்நடைகளுடன் இதுபோன்ற மோதலை தவிர்க்க முடியாது. இருப்பினும், ரயிலை வடிவமைக்கும் போது இது மனதில் வைக்கப்படும்" என்றும் கூறினார்.
வந்தே பாரத் ரெயிலின் மூன்றாவது சேவையான இந்த ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும் என்றும் மற்ற ரெயில்களை விட சிறந்த சேவை வசதியைக் கொண்டுள்ளது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
- நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம்.
- நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் ஆம் ஆத்மியும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் (பாஜக) ஒரு வருடத்திற்கு முன்பு முதல்வரை மாற்றினார்கள். முதலில் விஜய் ரூபானி இருந்தார். அவருக்கு பதில் பூபேந்திர பட்டேலை ஏன் மாற்றினார்கள்? அப்போது விஜய் ரூபானியிடம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
விஜய் ரூபானியை தேர்வு செய்தபோது பொதுமக்களிடம் ஏன் கருத்து கேட்கவில்லை. இது டெல்லியில் இருந்து எடுத்த முடிவு. ஜனநாயகத்தில் யார் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். 2016ல் நீங்கள் (பாஜக) கேட்கவில்லை. 2021ல் நீங்கள் கேட்கவில்லை.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியில் நாங்கள் இதை செய்யவில்லை. நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம். பஞ்சாபில் யார் முதலமைச்சராக வேண்டும் என்று மக்களிடம் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மக்களின் விருப்பத்திற்கு, நாங்கள் பகவந்த் மான் என்று பெயரிட்டோம்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் முதல்வர் வேட்பாளர்தான் குஜராத்தின் அடுத்த முதல்வர். எனவே இன்றே உங்கள் முதல்வராக யார் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இதற்காக, பொதுமக்களின் கருத்தை அறிய, 6357000360 என்ற எண்ணை வழங்குகிறோம். இந்த எண்ணில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் செய்தி அனுப்பலாம் அல்லது குரல் செய்தி அனுப்பலாம். aapnocm@gmail.com என்ற மின்னஞ்சலும் செய்யலாம். எனவே, பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹசீரா ஆலை விரிவாக்கம் மூலம்புதிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
- இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
குஜராத்தில் நடைபெற்ற ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
கச்சா உருக்கு உற்பத்தி திறனை இருமடங்காக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது இந்த உருக்காலை விரிவாக்கம் மூலம் ரூ.60,000 கோடிக்கும் அதிகமான முதலீடு கிடைத்துள்ளது. இதற்கு பின்னர் ஹசீரா ஆலையின் கச்சா உருக்கு உற்பத்தி திறன் 9 மில்லியன் டன்னில் இருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.
மேக்-இன்- இந்தியா தொலை நோக்கிற்கு இந்த உருக்காலை திட்டம் ஒரு மைல்கல்லாக இருக்கும். இது குஜராத் மற்றும் நாட்டின் பிற பகுதி இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகங்கள், கட்டுமானம், வாகனத் தொழில், மூலதனப்பொருட்கள், பொறியியல் உற்பத்தி ஆகியவற்றில் உருக்குத்துறை பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
வலுவான உருக்குத்துறை உள்கட்டமைப்பு துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஹசீரா ஆலை விரிவாக்க ஒப்பந்தம் மூலம் புதிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதனால் மின்சார வாகனம் மற்றும் இதர உற்பத்தி துறையில் இது மிகப்பெருமளவில் உதவிகரமாக இருக்கும்.
உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் அனைவரது முயற்சியின் காரணமாக இந்தியா உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
- சர்வதேச நெட்வொர்ட் வழக்குகளை மாநிலங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்.
- கடந்த எட்டு ஆண்டுகளில், ரூ.20,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.
காந்திநகர்:
போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் மேற்கு பிராந்திய மாநிலங்களுடனான ஆலோசனை கூட்டம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்டார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் கோவா அரசுகள் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும். நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து ஹெராயின் கடத்தல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டில் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மத்திய அமைப்புகளும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். போதையில்லா இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நாம் நனவாக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகம் 75 நாட்களில் குறைந்தது 75,000 கிலோ போதைப்பொருட்களை அழிப்பதாக உறுதியளித்தது.
ஆனால், நாங்கள் ஏற்கனவே 1,65,000 கிலோ போதைப்பொருட்களை காலக்கெடுவிற்கு முன்பே அழித்துவிட்டோம். நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் அழிக்கப்பட்டது ஒரு சாதனை.
சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க்குகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மாநிலங்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் அல்லது தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காந்திநகரில் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், குஜராத் மற்றும் டெல்லியில் இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 12,500 கிலோ போதைப்பொருள் அழிக்கப்பட்டது. மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் மாநில முதலமைச்சர்கள் இதன் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டனர்.
- கெஜ்ரிவால் குஜராத்திற்கு வந்தால் பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்?
- பண்டிகை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ராஜ்கோட்:
தேசிய தலைநகரான டெல்லியில் பசுமைப் பட்டாசு உள்பட அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீண்டும் கடந்த மாதம் தடை விதித்தது. டெல்லியில் இன்று தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் அண்மையில் அறிவித்தார்.
பட்டாசுகளை சேமித்தல் மற்றும் விற்பனை செய்தால் ரூ. 5,000 வரை அபராதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், கூறியதாவது:
டெல்லி முதல்வர், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததாக செய்திகளைப் படித்தேன். அந்த சகோதரர் இங்கு (குஜராத்) நடைபெறும் தேர்தலுக்கு வர முயற்சிக்கிறார். பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்? எனவே பட்டாசு வெடித்து எங்கள் பண்டிகைகளை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தீபாவளியன்று மட்டும் டெல்லியில் மக்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பட்டாசு வெடிக்க முதல்வர் கெஜ்ரிவால் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






