search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Polls"

    • 2027-ல் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம் என கெஜ்ரிவால் நம்பிக்கை
    • சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

    புதுடெல்லி:

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டெல்லி மாநகராட்சியை வென்று விட்டோம். கோவாவில் 2 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளார்கள். குஜராத்தில் 14 சதவீத வாக்கு வங்கியுடன் 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ளோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல. இந்த வெற்றிக்குப் பிறகு என்னிடம் பேசிய ஒருவர், நீங்கள் காளையிடம் பால் கறந்துவிட்டீர்கள் என்றார்.

    அந்த அளவுக்கு கடினமான வெற்றி இது. பசுவில் பால் கறக்க அனைவராலும் முடியும். ஆனால், குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் வாக்குகள் பெற்று நாங்கள் காளை மாட்டில் பால் கறந்துள்ளோம். இதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி. எனவே கட்சியினர் கவலைப்பட வேண்டாம், 2027-ல் நாம் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்.

    சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பொருட்களை யார் வாங்குகிறார்கள்? சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு பாஜகவுக்கு என்ன நிர்ப்பந்தம்? நமது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியாதா? நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதே பொருட்களை சீனாவிலிருந்து வாங்குகிறோம்.

    மோடி அரசுக்கு ராணுவ வீரர்களின் உயிர் மீது அக்கறை இல்லை. இந்திய மக்களை விரட்டி அடிக்கும் பாஜக அரசு, சீன மக்களை கட்டிப்பிடிக்கிறது. வியாபாரிகள், தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரு கட்சி ஊழலில் சிக்கியுள்ளது, மற்றொரு கட்சி குண்டர்களை ஊக்குவிக்கிறது மற்றும் குண்டர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
    • காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கியப் பங்காற்றியது.

    ஜெய்ப்பூர்:

    குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வென்றது. சுமார் 13 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பை பறித்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு ஆம் ஆத்மி தான் முக்கிய காரணம் என கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    குஜராத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றியது. ஆம் ஆத்மி இல்லாவிட்டால், ஆளும் பாஜகவை தோற்கடித்திருப்போம்.

    குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பினாமியாக செயல்பட்டது. அந்த கட்சி பாஜகவின் பி டீம், காங்கிரசை வீழ்த்த பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது. அவர்கள் (பாஜக) இந்தியாவைப் பிளவுபடுத்துகிறார்கள், வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். அவர்கள் கொள்கையில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதை காங்கிரஸ் புரிந்துகொள்ளும்போது ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
    • பூபேந்திர படேலுக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக கடந்த 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி 156 இடங்களை கைப்பற்றியது. கடந்த முறையை விட கூடுதலாக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் குஜராத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. 60 தொகுதிகளை அந்த கட்சி இழந்தது. புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மி 5 தொகுதிகளை வென்றது. பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் குஜராத் முதல்வரின் பதவி ஏற்பு விழா இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப்டம்பரில் மாற்றப்பட்டு அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது.

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் மற்ற மந்திரிகளும் பங்கேற்றார்கள்.

    பா.ஜனதா ஆளும் முதல்-மந்திரிகளான யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), ஹிமந்தா பிஸ்வா சர்மா (அசாம்), மனோகர்லால் கட்டார் (அரியானா), சிவ்ராஜ்சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), பசவராஜ் பொம்மை (கர்நாடகா), புஷ்கர்சிங்தாமி (உத்தரகாண்ட்) மற்றும் கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர் சந்தோஷ், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.பி.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    • 1985-ல் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையை பாஜக முறியடித்தது.
    • கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

    அகமதாபாத்:

    182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பாஜக வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. வெற்றி பெற 92 இடங்கள் தேவை என்ற நிலையில், 150க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆளும் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி, 7வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் 2002-ல் 127 இடங்களை கைப்பற்றி பாஜக சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இந்த தேர்தலில் முறியடித்தது மட்டுமல்லாமல், 1985-ல் மறைந்த மாதவ்சிங் சோலங்கியின் தலைமையில் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையையும் முறியடித்தது.

    காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக குஜராத்தில் கால் பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் 49 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகள் 42 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

    மொத்த தொகுதிகள்- 182

    பாஜக- 156

    காங்கிரஸ்- 17

    ஆம் ஆத்மி கட்சி - 5

    சுயேட்சைகள் - 3

    மற்றவை - 1

    • குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என தெரிவித்தன.

    புதுடெல்லி:

    குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 5-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

    இதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. குஜராத்தில் 182 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தன.

    இதேபோல, இமாச்சல பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்புகள் கூறின.

    இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியத்துக்கு மேல் மகுடம் சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    • குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
    • பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெறலாம்.

    புதுடெல்லி:

    குஜராத், இமாச்சலபிரதேச சட்டசபைக்கும், டெல்லி மாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெற்றது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

    அதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேலும், 250 வார்டுகளுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

    இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

    ஆங்கில, இந்தி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பின்வருமாறு:

    குஜராத் - மொத்த தொகுதிகள் 182 - பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

    நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்: பாஜக - 117 முதல் 140 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் கூட்டணி - 34 முதல் 51 இடங்களில் வெற்றி,

    ஆம் ஆத்மி - 6 முதல் 13 இடங்களில் வெற்றி

    ரிபப்ளிக் டிவி செய்தி நிறுவனம்: பாஜக - 128 முதல் 148 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் - 30 முதல் 42 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 2 முதல் 10 இடங்களில் வெற்றி

    டிவி 9 குஜராத்தி செய்தி நிறுவனம்: பாஜக - 125 முதல் 130 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் கூட்டணி - 40 முதல் 50 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 3 முதல் 5 இடங்களில் வெற்றி

    என்டி டிவி செய்தி நிறுவனம்: பாஜக - 131 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் கூட்டணி - 41 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 10 இடங்களில் வெற்றி

    பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெறலாம்.

    இமாச்சலபிரதேசத்தில் 68 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

    ஆஜ் தக் செய்தி நிறுவனம்: பாஜக - 24 முதல் 34 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் - 30 முதல் 40 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 0

    இந்தியா டிவி செய்தி நிறுவனம்: பாஜக - 35 முதல் 40 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் - 26 முதல் 31 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 0

    நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்: பாஜக - 32 முதல் 40 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் - 27 முதல் 34 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 0

    ரிபப்ளிக் டிவி செய்தி நிறுவனம்: பாஜக - 34 முதல் 39 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் - 28 முதல் 33 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 0

    முதல் 1 இடத்தில் வெற்றி

    என்டி டிவி செய்தி நிறுவனம்: பாஜக - 37 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் - 30 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி - 0 முதல் 1 இடத்தில் வெற்றி

    பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் இமாச்சலபிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கலாம்.

    • குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
    • குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.

    காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது.

    காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 சதவீதமாகவும், மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதமாகவும் பதிவாகியிருந்தன. மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீதமாகவும், 5 மணி நிலவரப்படி 58 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    மாலை 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில், குஜராத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இரு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 8-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • குஜராத் மாநிலத்தில் இன்று 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
    • 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது

    அகமதாபாத்:

    பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

    காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது. காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 ஆக இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதிகட்சமாக சபர்கந்தா மாவட்டத்தில் 57.24% வாக்குகள் பதிவாகியிருந்தன.

    5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 58.38 சதவீதமாக உயர்ந்தது. 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த முழு விவரத்தை தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கும். வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    • இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வாக்கு சாவடிக்கு வந்தார்.
    • பிரதமரின் தாயார் வாக்களிக்க குடும்ப உறுப்பினர்கள் உதவி செய்தனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் காந்திநகர் அருகே ரேசன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வருகை தந்தார். பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தமது வாக்கை அவர் பதிவு செய்தார்.

    முன்னதாக அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நேற்று பிரதமர், தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
    • இரு கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.

    பிரதமர் மோடி 31 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார். சூரத், அகமதாபாத் ஆகிய இடங்களில் மிகப்பிரமாண்டமான வாகன பேரணியை நடத்தினார்.

    காங்கிரசுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை. உள்ளூர் தலைவர்களே பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், ஆகியோர் ஆம் ஆத்மிக்கு பிரசாரம் செய்தனர்.

    பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    • குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
    • பெண்கள் தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என மதபோதகர் கூறினார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 1-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

    இந்நிலையில், அகமதாபாத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஜும்மா மசூதியின் இமாம் எனப்படும் தலைமை மதபோதகர் ஷபீர் அகமது சித்திக் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நீங்கள் இஸ்லாமிய மதம் குறித்து பேசுகிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். இஸ்லாமிய மதம் அனுமதித்தால் பெண்கள் பொதுவெளியில் அவ்வாறு (ஹிஜாப் அணியாமல்) செல்ல அவர்கள் மசூதிக்குள் வழிபாடு நடத்த செல்ல எந்த தடையும் இல்லை.

    பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், இஸ்லாமிய மதத்தில் பெண்கள் சில நிலையில் உள்ளனர். ஆகையால், இஸ்லாமிய மத பெண்கள் தேர்தலில் போட்டியிட யாரேனும் சீட் கொடுத்தால் அவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர்கள். ஆண்களே இல்லையா நீங்கள் ஏன் பெண்கள் தேர்தலில் போட்டிட சீட் கொடுக்கிறீர்கள்?

    தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இஸ்லாமிய மதத்தை பலவீனபடுத்தும். நீங்கள் பெண்கள் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், கவுன்சிலர்களை உருவாக்கினால் என்ன ஆகும்? நாங்கள் ஹிஜாப்பை பாதுகாக்க முடியாது. மேலும், ஹிஜாப் விவகாரத்தை எழுப்ப முடியாது.

    பெண்களை அரசியலில் ஈடுபடுத்தினால் ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டில் எங்கள் வாதம் பலவீனமாகும். ஏனென்றால் இஸ்லாமிய மத பெண்கள் சட்டசபை, பாராளுமன்றம், மாநகராட்சியில் அங்கம் வகிக்கின்றனர் என்று கோர்ட்டு கூறும் என தெரிவித்தார்.

    ஷபீர் அகமது சித்திக்கின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டன குரல் எழுந்து வருகிறது.

    • குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
    • இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பனஸ்கந்தா மாவட்டம் கங்ரேஜ் கிராமத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள அகர்நாத் கோவிலில் வழிபட்டபின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சிக்கு தடுப்பது, தாமதப்படுத்துவது, திசைதிருப்புவது ஆகியவற்றில்தான் நம்பிக்கை. நர்மதை ஆற்று நீரை இந்த வறண்ட பகுதிக்கு கொண்டு வருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது வயதானவர்களுக்கு தெரியும். ஆனால் எதுவுமே செய்யவில்லை.

    சர்தார் சரோவர் அணை கட்டுவதை காங்கிரஸ் தடுக்க முயன்றது. அந்த திட்டத்துக்கு எதிராக மனு மேல் மனு போட்டு தாமதப்படுத்தியவர்களை ஆதரித்தது. இந்த பாவத்தை செய்த காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது. நீங்கள் மன்னிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை செலுத்தும். பணம் சம்பாதிக்க முடியாத திட்டங்களில் கவனம் செலுத்தாது. பா.ஜக. தான் நர்மதை நீரை இங்கு கொண்டு வந்தது. விடுபட்ட பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்வோம்.

    நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்ட 99 குடிநீர் திட்டங்களை முடிக்க எனது அரசு ரூ.1 லட்சம் கோடி அளித்துள்ளது.

    ஏழை மக்களை கொள்ளையடித்தவர்கள், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்னை திட்டுகிறார்கள். ஏழைகளுக்கு செல்ல வேண்டிய உணவு தானியங்கள் வேறு எங்கோ திருப்பி விடப்பட்டன. அதனால், 4 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை ஒழித்தோம்.

    ஏழைகளைக் கொள்ளையடித்தால், மோடி நடவடிக்கை எடுப்பான். அத்தகையவர்கள் பிடிபடும்போது என்னை திட்டுகிறார்கள்.

    குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் மக்கள் திரண்டு வந்ததைப் பார்க்கும்போது பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

    ×