என் மலர்
குஜராத்
- அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்
- ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் நேற்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'அரசியல் ஆதாயத்துக்காக பாஜக முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே குஜராத்திலும் மோடியை முறியடிப்போம்' என்று தெரிவித்தார்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம், கலவரங்களின் மூலம் பாபர் மசூதியை இடிக்கப்படும் அளவுக்கு சென்றது.
அன்று முதல் புகைந்து கொண்டிருந்த இந்த ராமர் கோவில் இயக்கத்தில் முக்கிய கட்டமாக கடந்த 2014 ஆம் ஆனது மக்களவைத் தேர்தலில் பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் காட்டுவோம் என்று வாக்குறுதியுடன் வெற்றி பெற்று அமைந்த மோடி தலைமையிலான பாஜக அரசால் மீண்டும் தீவிரம் பெறத் தொடங்கியது.
அதன்விளைவாக 1800 கோடி செலவில் மத்திய பாஜக அரசால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக ராமர் கோவிலை திறந்தது தேர்தல் ஆதாயத்துக்கான நகர்வாக எதிர்கட்சிகலால் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்.மேலும் பாஜகவின் கோட்டையாக விளங்கிய அம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெருமபான்மை வெற்றியை பெற்றது.
இந்த பின்னணியிலேயே ராமர் கோவில் இயக்கம் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து விபத்துக்குள்ளானது.
குஜராத்தின் டாங் மாவட்டத்தில் இன்று 64 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
சொகுசுப் பேருந்து சூரத்தில் இருந்து சபுதாராவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, இன்று மாலை 5 மணியளவில், மலை நகரமான சபுதாராவிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில், படுகாயமடைந்த மூன்று பயணிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயமடைந்த மற்ற நபர்கள் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து பாதுகாப்புச் சுவரை இடித்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
- ப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
- இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பயங்கர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வேறுயாரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். இந்த கட்டிடங்களில் 5 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், வெறும் 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்.
- பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.
குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். அங்கு வசிக்கும் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறுமாறு சூரத் நகராட்சி வலியுறுத்தியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கடையில் தேனீர் பருகும் வாடிக்கையாளர்கள் விஜய் பாய் படேலின் இனிமையான குரலை ரசித்தபடியே டீ குடிக்கின்றனர்.
- ஆன்-லைனில் பதிவிடப்பட்ட 1 மணி நேரத்தில் இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் சாலையோர சிறு வியாபாரிகள் கூட தங்களது தனித்தன்மையால் பிரபலமாகி வருகிறார்கள். அவ்வாறு பிரபலமான நாக்பூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரது கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இதே போன்று ரஜினிகாந்த் போன்று ஸ்டைலாக டீ வியாபாரி ஒருவர் கிளாஸ்களை வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் பரவி இருந்தது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த டீ வியாபாரி ஒருவர் பாட்டு பாடியபடியே டீ போடும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் வைரல் பயானி என்பவர் இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் சூரத்தில் டீ கடை நடத்தி வரும் விஜய் பாய் படேல் என்பவர் பிரபலமான ஒரு இந்தி பாடலை பாடியபடியே டீ தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. கடையில் தேனீர் பருகும் வாடிக்கையாளர்கள் விஜய் பாய் படேலின் இனிமையான குரலை ரசித்தபடியே டீ குடிக்கின்றனர்.
ஆன்-லைனில் பதிவிடப்பட்ட 1 மணி நேரத்தில் இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
- மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
கவுகாத்தி:
இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் துணை நதிகளில் வெள்ளம், அபாய அளவை தாண்டி பாய்ந்தோடுகிறது.
மேலும் 8 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கச்சார், தேமாஜி, மோரிகான், திப்ருகார், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர், தவாம்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 6 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஜோர்காட் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் முழுவதும் தொடர் மழையால் இதுவரை 45 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெள்ளத்தால் மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவில் கனமழை காரணமாக தேங்கிய மழை வெள்ளத்தில் தப்பிக்க விலங்குகள் அருகே உள்ள மலைக்கு இடம்பெயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்க ளுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இதனால் அசாமில் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
அசாமில் கனமழை தொடர்வதால் நிலைமை மோசமாக மாறி உள்ளதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் வெள்ளப்பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் என்னை அழைத்து நிலைமையை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே அவசர நிலையை சமாளிக்க ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.
இதற்கிடையே இன்று டெல்லி, அரியானா, அசாம் மற்றும் குஜராத் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லியில் ஏற்கனவே கடந்த வாரம், 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இதேபோல வடக்கு குஜராத் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கேரளா, புதுச்சேரியில் மாகே, கடலோர கர்நாடகா, கோவா, கொங்கன், குஜராத், லட்சத்தீவு, கடலோர ஆந்திரா, மத்திய மராட்டியம், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 6-ந்தேதி வரை இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
- நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது.
நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதனால் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது.
இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
- குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது
வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக நேற்று டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். 8 பேர் காயமடைந்தனர்.
இந்த சோகம் நீங்காத நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இன்று குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- எங்கு சென்றாலும் காரில் செல்லும் நிராஜால் இந்த அறிவுரையை பின்பற்ற முடியவில்லை.
- வீட்டில் சமைக்கும் உணவுகளோடு பன்னீர், சோயா, பருப்பு ஆகிய சைவ புரத உணவுகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
ஜிம்முக்கு செல்லாமலும், உணவு கட்டுப்பாடுகள் இல்லாமலும் 10 மாதங்களில் 23 கிலோ எடையை தொழில் அதிபர் குறைத்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிராஜ். 10 மாதங்களுக்கு முன்பு 92 கிலோ எடையுடன் இருந்த இவர் எடையை குறைக்க உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ்கோஹெலை சந்தித்துள்ளார். அவர் வகுத்து கொடுத்த உடற்பயிற்சி திட்டங்களை நிராஜால் பின்பற்ற முடியவில்லை. இதையடுத்து தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று சதேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
எங்கு சென்றாலும் காரில் செல்லும் நிராஜால் இந்த அறிவுரையை பின்பற்ற முடியவில்லை. ஆனாலும் நாளடைவில் அதை பழக்கப்படுத்தி கொண்டார். அதோடு வீட்டிலேயே சாதாரண உடற்பயிற்சி செய்வதற்கும் சதேஷ் வடிவமைத்து கொடுத்தார். அதனுடன் வீட்டில் சமைக்கும் உணவுகளோடு பன்னீர், சோயா, பருப்பு ஆகிய சைவ புரத உணவுகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டெப்ஸ் நடந்த நிராஜ் உணவையும் பின்பற்றியதன் மூலம் 10 மாதங்களில் 23 கிலோ எடை குறைந்ததாக அவரது உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி 4.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
No gym, No fancy food.
— Satej Gohel (@SatejGohel) June 21, 2024
A Gujarati businessman eating Gujarati homemade food and home workouts led to this transformation!
This is how we were able to achieve Niraj's transformation ?.
Save this Thread. pic.twitter.com/seJXAw2Hzw
- கடல்நீர் உள்ளே சென்றதால் ஜீப்-ன் எஞ்சின் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விதமான ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போன்ற வீடியோக்களை எடுக்கும் போது உயிரை பணயம் வைத்து எடுக்கும் சாகச காட்சிகள் பயனர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், பல சமயங்களில் அவை விபரீதத்தில் முடிந்து விடுகிறது.
இந்நிலையில், ரீல்ஸ் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள மகிந்திரா ஜீப் கார்களை கடலுக்குள் எடுத்துச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள கடற்கரையில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கார்கள் இரண்டும் கடல்நீரில் சிக்கின. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவழியாக கார்கள் மீட்கப்பட்டன. ஆனால், கடல்நீர் உள்ளே சென்றதால் ஜீப்-ன் எஞ்சின் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது நாய் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இந்த கொடூரமான வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நெடுஞ்சாலையில் டொயோட்டா இன்னோவா என அடையாளம் காணப்பட்ட எஸ்யூவியின் பின்புறத்தில் தெருநாய் ஒன்று கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது நாய் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த இடம் இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த கொடூரமான வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- ஓட்டலுக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
- பயனர்கள் பலரும் தங்கள் பகுதிகளிலும் ஓட்டல்களில் இதுபோன்று சுகாதாரமற்ற உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் அபினாஸ்-தேவி தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அப்போது அந்த தம்பதி தங்களுக்கு தோசை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி ஊழியர் ஒருவர் தோசை கொண்டுவந்து கொடுத்துள்ளார்.
தோசையுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் ஒரு இறந்த எலி கிடந்துள்ளது. இதைப்பார்த்து அந்த தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த தம்பதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடமும், சுகாதாரத்துறையிடமும் புகார் அளித்தனர்.
அதன் பேரில் ஓட்டலுக்குள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் அந்த உணவகத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் பகுதிகளிலும் ஓட்டல்களில் இதுபோன்று சுகாதாரமற்ற உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.






