என் மலர்tooltip icon

    டெல்லி

    • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
    • நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி ஆதரவு

    ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் "மூத்த குடிமக்களுக்குச் சிரமம்" ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    எதிர்பாராத சூழலில், மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், கட்கரி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

    நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

    பட்ஜெட் விவாதத்தின்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று அவர் பேசிய வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

    "மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. நிதின் கட்கரியின் இந்த கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் குமார் ராய் தெரிவித்தார்.

    நிதின் கட்கரியின் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    • சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்- அனுராக் தாக்கூர்.
    • அனுராக் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியிருந்தார்.

    மக்களவையில் ராகுல் காந்தி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது உரையாற்றினார். அப்போது பல்வேறு விசயங்கள் குறித்து மத்திய அரசை விமர்சனம் செய்தார். மேலும் ஆறு பேர் தாமரை வடிவிலான சக்கரவியூகம் அமைத்து நாட்டு மக்களை சிக்கவைத்துள்ளனர் எனக் கூறினார்.

    இதற்கு மந்திரியல்லாத பாஜக எம்.பி.யான அனுராக் தாக்கூர் பதில் அளித்தார். அப்போது தங்களது சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனக் குறிப்பிட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.

    பின்னர் அனுராக் தாக்கூரின் பேச்சு அடங்கிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அனுராக் தாக்கூரை பாராட்டியிருந்தார்.

    இந்த நிலையில் நேருக்குநேர் ராகுல் காந்தியை பிரதமர் மோடியால் எதிர்கொள்ள முடியவில்லை என சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சத்ருகன சின்ஹா இது தொடர்பாக கூறுகையில் "அனுராக் தாக்கூர் பேசியது தவறானது. சக்தி வாய்ந்த, பிரபலமான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியின் சாதி பற்றி கேட்டது தவறானது. இதுபோன்று சாதி பற்றி நீங்கள் கேட்க முடியாது. அனுராக் தாக்கூரைப் புரியவைக்க முயற்சிக்கிறோம். மேலும் அவர் எங்களுக்கு சொந்தமானவர்.

    தற்போது இருப்பது முன்னதாக இருந்ததுபோன்ற எதிரக்கட்சி அல்ல. அதேபோல் மத்திய அரசும் முன்னர் இருந்தது போன்ற மத்திய அரசு அல்ல. எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் மோடியை எதிர்த்து பயங்கரமாக விமர்சனம் செய்தபோது அவரை நேருக்குநேர் பிரதமர் மோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இது ஒரு பலவீனமான அரசாங்கம். இப்படியே தொடர்ந்தால் பிரச்சனையாகிவிடும்" என்றார்.

    • தெலுங்கானாவில் விவசாயிகள் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ரேவந்த் ரெட்டி கூறினார்.
    • விவசாயிகள் கடன் தொகைக்கான இரண்டாவது தவணையை முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, விவசாயிகள் கடன் தொகைக்கான இரண்டாவது தவணையை முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று அறிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    தெலுங்கானா விவசாய சகோதர, சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

    தேர்தல் வாக்குறுதியின்பட, தெலுங்கானா அரசு விவசாயக் கடன் தள்ளுபடியின் இரண்டாவது தவணையை வெளியிட்டுள்ளது.

    ஒருபுறம், பா.ஜ.க. அரசு நாட்டின் விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கை மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மறுத்து வருகிறது.

    மறுபுறம், காங்கிரஸ் விவசாயிகளுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    எம்.எஸ்.பி.க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் என்ற ஆயுதத்தை வழங்குவதன் மூலம் இந்தக் கடன் பொறியிலிருந்து இந்தியா கூட்டணி விவசாயிகளை விடுவிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • ரெயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 80 கிமீ ஆகும்.
    • கடந்த ஓராண்டில் 5,000 கி.மீ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    டெல்லியில் இன்று நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் ரெயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடத்தப்பட்டது.

    அதில், பேசிய அனில் பலுனி கறியதாவது:-

    கடந்த ஓராண்டில் 5,000 கி.மீ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் காலகட்டம் ரெயில்வே வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது செயல்பட்டு வருகிறது.

    ரெயில்களை மட்டுமே கனவு காணக்கூடிய பல பகுதிகளுக்கும் இப்போது ரயில்வே பாதை உள்ளது.

    ரெயில்களின் சராசரி வேகம் இப்போது மணிக்கு 80 கிமீ ஆகும்.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மாபெரும் மகத்தான பணிகள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளும் இந்திய ரயில்வே துறையின் பொற்காலம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாதி பெயர் தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்- அனுராக்
    • இளம் மற்றும் மிகுந்த ஆற்றல் உள்ள அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும்- மோடி

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். நாடு தற்போது ஆறு பேரின் கைகளில் உள்ளது. மோடி மார்பில் அணிந்துள்ள தாமரை வடிவிலான சக்கரவியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கியுள்ளனர். இந்த சக்கரவியூகத்தை நாங்கள் உடைத்தெறிவோம் என்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசினார். அப்போது "சாதி பெயர் தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். RG-1 ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றார். ராகுல் காந்தியை மறைமுகமாக திட்டினார். இதற்கு ராகுல் காந்தி, நீங்கள் இழிவுப்படுத்திக் கொண்டிருங்கள். நான் தொடர்ந்து போராடுவேன் என பதில் அளித்திருந்தார்.

    அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, "இளம் மற்றும் மிகுந்த ஆற்றல் உள்ள அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும். உண்மைகளை நகைச்சுவையுடன் கலந்து அவர் பேசியது, இந்தியா கூட்டணியின் பொய் அரசியல் பிரசாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி உரிமை மீறல் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

    மக்களவை செயலாளரிடம் அளித்த அந்த நோட்டீஸில் "அனுராக் தாக்கூர் பேசியதில் குறிப்பிட்ட ஆட்சேபனைக்கு உரிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் எதையும் நீக்காமல் அனுராக் தாக்கூரின் முழு வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளையும் மோடி வெளியிட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஓபிசி சான்றிதழ் முறைகேடு, உடல் ஊனம் குறைபாடு உள்ளவர் சான்றிதழ் என புகார் கூறப்பட்டது.
    • விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில் சரியாக விளக்கம் அளிக்காததால் ரத்து நடவடிக்கை.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் பூஜா கேத்கர். இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது. அத்துடன் போலி சான்றிதழ் வழங்கி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission- UPSC) விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே மகாராஷ்டிரா அரசு பயிற்சி பெறுவதற்கான அளித்த அனுமதியை ரத்து செய்தது.

    இந்த நிலையில் பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. மேலும் யுபிஎஸ்சி நடத்தும் எந்த தேர்விலும் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு விதிமுறை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    போலி அடையாள சான்றிதழ் கொடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி யுபிஎஸ்சி பூஜா கேத்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஜூலை 25-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால, பூஜா ஆகஸ்ட் 4-ந்தேதி வரை அவகாசம் கேட்டிருந்தார் யுபிஎஸ்சி ஜூலை 30-ந்தேதி வரை காலஅவகாசம் கொடுத்தது. இதற்கு மேல் காலஅவகாசம் கொடுக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக தெரிவித்திருந்தது.

    நோட்டீஸ்க்கு பதில் அளிக்காததால் யுபிஎஸ்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பூஜா கேத்கர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் தேர்வுக்கான விதிமுறையை மீறியது தெளிவாக தெரியவந்தது என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. பூஜா தனது பெயரை மாற்றியது மட்டுமல்ல பெற்றோரின் பெயரையும் மாற்றியது தெரியவந்துள்ளது.

    பூஜா பயிற்சி காலத்தில் கார், ஸ்டாஃப், அலுவலகம் போன்ற சலுகைகள் கேட்பதாக புனே கலெக்டர் சுஹாஸ் திவாஸ் மகாராஷ்டிர மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இரண்டு வருட பயிற்சி காலத்தில் இதுபோன்று சலுகைகள் கேட்க அவருக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து பூஜா வாஷிம்-க்கு மாற்றம் செய்யப்பட்டடார். இதில் இருந்துதான் பூஜா ஐஏஎஸ் தேர்வுக்காக செய்த மோசடிகள் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

    • கர்நாடகாவை சேர்ந்த ப்ரீத்தி சுதன் 2025 ஏப்ரல் மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.
    • 1983 ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மத்திய உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்குமுன் தலைவராக இருந்த மனோஜ் சோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததையடுத்து, ப்ரீத்தி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பதவியேற்கவுள்ளார்.

    கர்நாடகாவை சேர்ந்த ப்ரீத்தி சுதன் 2025 ஏப்ரல் 29 வரை இப்பதவியில் இருப்பார். 1983 ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர் மத்திய உணவுத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    யுபிஎஸ்சியின் 2 ஆவது பெண் தலைவராக ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு ஆர் எம் பாத்யூ என்பர் யுபிஎஸ்சியின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனோஜ் சோனி அதன்பின் கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி ஆணைய தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    • மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல.
    • கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீது விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் "மூத்த குடிமக்களுக்கு சிரமம்" ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பிரீமியத்தின் மீதான 18% வரி என்பது, சமூகரீதியாக அவசியமாகக் கருதப்படும் வணிகப் பிரிவினரின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    எதிர்பாராத சூழலில், மக்கள் தங்களது குடும்பத்தை பாதுகாப்பதற்கு உதவும் காப்பீட்டு திட்டங்கள் மீது வரி விதிப்பது நியாயமல்ல என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வரிவிதிப்பு தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள நிலையில், கட்கரி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

    நாக்பூரின் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் தொழில் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையின் பேரில் மத்திய நிதியமைச்சருக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
    • கேரளாவிற்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 200-க்கு மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலர் மாயமான நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் தம்பிதுரை வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


    பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மத்திய அரசு ஏற்கனவே இந்த அவையில் கூறி இருக்கிறது.

    ஆனால், எங்களது கோரிக்கை மறு சீரமைப்புகளுக்கான தொகையினையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதுதான்.

    இதை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு, சிறப்பு நிவாரண தொகுப்பும் கேரளாவிற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • 2022ல் 1,123 மாணவர்கள் தேர்வில் தேல்வி அடைந்ததால் தற்கொலை
    • 2022ல் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை

    மாணவர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் குறித்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மௌசம் நூர் பாராளுமன்றத்தில் இன்று பேசினார்.

    பாராளுமன்றத்தில் பேசிய அவர், "தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 8% பேர் மாணவர்கள் என்றும் இது ஒரு வருடத்தில் 30,000 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்ததற்கு சமம். இந்த விவாகரத்திற்கு நாம் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தற்கொலை செய்து கொள்பவர்களின் 35% பேர் 18-30 வயதுக்குட்பட்டவர்களாய் இருக்கிறார்கள். இது மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையின் அப்பட்டமான தோல்வியாகும்.

    2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 1,123 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,445 இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்து உயிரை இழந்துள்ளனர்.

    இந்தாண்டு 1.8 லட்சம் மருத்துவ இடங்களுக்காக இளங்கலை நீட் தேர்வை 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

    அதேபோல் வெறும் 39,767 பொறியியல் இடங்களுக்காக JEE மெயின்ஸ் தேர்வை 12.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

    இந்த ஏற்றத்தாழ்வு தான் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. மாணவர்களின் மதிப்பு தேர்வு முடிவுகளுடன் தவறாக இணைத்து பார்க்கப்படுகிறது.

    மிகைப்படுத்தப்பட்ட ஊடக விளம்பரம், சமூக ரீதியிலான அவமானம், கல்வி ஆலோசனை வழங்கப்படுவதில் உள்ள போதாமை மற்றும் வாலைவாய்ப்பின்மை ஆகியவை மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

    இந்த ஆண்டு நடைபெற்ற இளங்கலை நீட், முதுகலை நீட், யுஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு தயாராகி வந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாக உள்ளது.

    நமது நாட்டின் கல்வி நிலை ஒரு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாணவர்களின் தற்கொலையும் தேசியளவிலான சோகமாகும். இளைஞர்களை அரசு ஆதரிக்க தவறியதை இது அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.

    எனவே, நாட்டின் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு முறையை சீர்திருத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    • மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.
    • மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

    கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மண்ணில் புதையுண்ட பலரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால், உயிரிழப்பு எண்ணக்கை மேலும் உயர வாயப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில் மாநிலங்களவையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    அதில், கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம். எச்சரிக்கையை குஜராத் அரசு அபாயத்தைப் புரிந்துக்கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை.

    இதுபோல், மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரளா புறம் தள்ளியது ஏன்?

    பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே வெளியேற்றாதது ஏன் ?

    முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தான், தேசிய பேரிடர் மீட்பு படை முன்கூட்டியே அங்கு சென்றது.

    மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீத தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

    இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா பேசினார்
    • அதிக்ராபூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும்

    எல்லைப் பிரச்சனைகள் என்பது எல்லா நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவும் பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என அனைத்து எல்லைகளிலும் பிரச்சனையை சந்தித்து வருகிறது.

    அதிலும் முக்கியமாக இந்தியாவை விட பொருளாதார பலம் கொண்ட நாடக விளங்கும் சீனா சமீப காலமாக திபெத், லடாக் எல்லாப் பிரதேசங்களில் ராணுவ நடமாட்டத்தை அதிகரிப்பது, சீன வரைபடத்தில் இந்திய பகுதிகளில் பெயர்களை மாற்றுவது என தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது. இருநாட்டு வெளியுறவுத் துறையும் சம்பிரத்யமாக அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், சீனா அதை செயலில் காட்டவில்லை.

    இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த மாநிலங்களவை பட்ஜெட் விவாத கூட்டத்தில் பேசிய சிக்கிம் பாஜக எம்.பி டொர்ஜீ செரிங் லெப்சா, லைன் ஆப் கண்ட்ரோலில் உள்ள பகுதியை இந்திய சீன எல்லை என்று குறிப்பிடாமல் திபெத் எல்லை சட்டப்பூர்வமாக பெயரை மாற்றி குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    லே லடாக், அருணாச்சல் பிரதேஷ், சிக்கிம் என திபெத் வரை 1400 கிலோமீர் வரை எல்லைப் பகுதி நீண்டுள்ளது. இது சீன எல்லை கிடையாது திபெத் எல்லை என்றே குறிப்பிட்டுள்ளார். இதக்கிடையில் நேற்று எல்லையில் உள்ள  பாங்காங் நதியின் சீனா கட்டிய பாலத்தில் வாகனங்கள் செல்லும் சாட்டிலைட் காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    ×