என் மலர்
டெல்லி
- தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
- நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அதாவது 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது.
- அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.
புதுடெல்லி:
கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தது. சக்தி திட்டம் எனும் இத்திட்டத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.
இந்நிலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், "பஸ் டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்' என சில மாணவிகள் இ - மெயில் மற்றும் 'எக்ஸ்' வலைத்தளம் வழியாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் மாநில பிரிவுகள், சரியான பட்ஜெட்டையும், நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்காத தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
தேர்தலுக்கு முந்தைய சில அறிவிப்புகளைக் கடைப்பிடிப்பதில் கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகள் பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில், காங்கிரஸ் மாநில பிரிவுகள், சரியான பட்ஜெட்டையும், நிதிச் சிக்கல்களுக்கு வழிவகுக்காத வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்.
உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது.
ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். அதை அவர்கள் ஒருபோதும் வழங்கமுடியாது. இப்போது மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள்.
மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆட்சிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்தும் அக்கட்சி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறது.
இன்று காங்கிரசுக்கு எந்த மாநில அரசுகள் உள்ளன? இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வளர்ச்சிப் பாதை மற்றும் நிதி ஆரோக்கியம் மோசமாக இருந்து வருகிறது. அவர்களின் உத்தரவாதங்கள் என அழைக்கப்படுபவை நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. இது இந்த மாநிலங்களின் மக்களுக்கு இழைக்கப்படும் பயங்கரமான வஞ்சகமாகும் என தெரிவித்துள்ளார்.
- எட்டாவது முறையாக மாதந்திர ஜிஎஸ்டி வரி வசூல்ரூ.1.70 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
- கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.1 சதவீதம் அதிகம்.
புதுடெல்லி:
அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வருமானம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது.
8வது முறையாக மாதந்திர ஜிஎஸ்டி வரி வசூல்ரூ.1.70 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.1 சதவீதம் அதிகமாக உள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில் 1.72 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில், நடப்பு ஆண்டு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரித்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு பொருளாதார நடவடிக்கை மற்றும் வரி வசூல் முறை சிறப்பாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- நிதி ஆயோக்கின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
- புனேயில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட் துணைவேந்தராக பணியாற்றியவர்.
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தவர் பிபேக் டெப்ராய். 69 வயதான இவர் இன்று காலமானார். இவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். இவர் புனேயில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட்டின் துணைவேந்தராக பணியாற்றியவர்.
குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிபேக் டெப்ராய் சிறந்த அறிஞர் என வர்ணித்த பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் "டாக்டர். பிபேக் டெப்ராய் ஜி ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார், பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் மற்றும் பல துறைகளில் நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம், அவர் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார். பொதுக் கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர் மகிழ்ச்சியாக பணியாற்றினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா மற்றும் டெல்லியில் பள்ளிப்படிப்பை முடிநத்த பிபேக் டெப்ராய், கேம்பிரிட்ஜ்-ல் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படப்படிப்பை முடித்தார்.
2019-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி அவரை நிதி ஆயோக்கின் உறுப்பினராக இருந்தார். இவர் ஏராளமான புத்தங்கங்களை எழுத்தியுள்ளார். பல செய்தித்தாள்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
- மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
புதுடெல்லி:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
- நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்நிலையில், கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இருளுக்கு எதிராக ஒளி நிறைந்த தீபத்தின் வெற்றித் திருவிழா. அநீதி, பொய் மற்றும் ஆணவத்துக்கு மத்தியில் நீதி, உண்மை மற்றும் அடக்கத்தின் வெற்றித் திருவிழா. வண்ணங்கள், விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா.
தூய்மை மற்றும் வழிபாட்டுக்கான நேரம் இது. ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவத்தை அன்புடன் வரவேற்கும் ஒரு சிறந்த பண்டிகை. நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்" என இந்தி மொழியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மலையாளத்தில் தீபாவளி வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திரா காந்தி நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை.
- ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-
பண்டிட்ஜியின் இந்து, பாபுவின் அன்புக்குரியவர், அச்சமற்றவர், துணிச்சலானவர், நீதியை விரும்புபவர் - இந்தியாவின் இந்திரா!
பாட்டி, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உங்கள் தியாகம், பொது சேவையின் பாதையில் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பண்டிகையை தொடர்ந்து மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழ வாழ்த்துகிறேன்.
மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் ஆசியுடன் அனைவரும் செழிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
புதுடெல்லி:
லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தின் பெட்டகத்தில் இருந்து மேலும் 102 டன் தங்கம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த முறையை போலவே ரிசர்வ் வங்கியும், அரசும் சிறப்பு விமானங்களில் தங்கத்தை கொண்டு செல்ல விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய ரகசிய பணியை மேற்கொண்டனர்.
செப்டம்பர் மாத இறுதியில் உள்ளூர் பெட்டகங்களில் சேமிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 510.46 டன்னாக இருந்தது. மார்ச் இறுதி நிலவரப்படி 408 டன்னாக இருந்தது.
- காங்கிரஸ் தலைவர்கள், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.
- விசாரித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகாரை நிராகரித்துள்ளது.
புதுடெல்லி:
அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் ஏமாற்றம் அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.
இதை விசாரித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகாரை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதிலில், தன் கடுமையான கண்டனத்தை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டு எண்ணிக்கை நடைமுறை மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும் என்று கூறியுள்ளது.
- எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
- எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.
புதுடெல்லி:
2020-ம் ஆண்டு மே மாதம் சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் நுழைய முயன்றது. இந்த முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ஆய்வு செய்து, அதை உறுதி செய்யும். எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் அகற்றப்படும்.
- அரசு வேலை வழங்குவதற்கான பணி தொடர்ந்து நடக்கிறது.
- இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி வாயிலாக 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதத்தை வழங்கினார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இந்த கடிதம் வழங்கப்பட்டது.

நியமன கடிதத்தை வழங்கிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-
"இந்த பண்டிகை சூழலில், இந்த நன்னாளில், 51,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கடிதம் வழங்கப்படுகிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
லட்சக் கணக்கானோருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவதற்கான பணி தொடர்ந்து நடக்கிறது. பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காட்டிலும் காதி விற்பனை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் வணிகர்களுக்குப் பலனளிக்கும் வகையில் காதி தொழில் வளர்ந்து வருகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
இந்த வளர்ச்சி காதி தொழிலுக்கு மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் நன்மை பயக்கும். இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.
இவ்வாறு மோடி பேசினார்.






