என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "today weather news"

    • தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றி நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.

    நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்தது. அதிகாலையில் இருந்து பெய்த மழை காரணமாக நகரில் குளிர்ச்சியூன சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டகளில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொருத்தவரை இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
    • நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

    தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.

    காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அதாவது 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ×