புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அதாவது 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com