என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நியமன கடிதம்"

    • அரசு வேலை வழங்குவதற்கான பணி தொடர்ந்து நடக்கிறது.
    • இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி வாயிலாக 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதத்தை வழங்கினார்.

    மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இந்த கடிதம் வழங்கப்பட்டது.


    நியமன கடிதத்தை வழங்கிய பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:-

    "இந்த பண்டிகை சூழலில், இந்த நன்னாளில், 51,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கடிதம் வழங்கப்படுகிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    லட்சக் கணக்கானோருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவதற்கான பணி தொடர்ந்து நடக்கிறது. பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காட்டிலும் காதி விற்பனை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் வணிகர்களுக்குப் பலனளிக்கும் வகையில் காதி தொழில் வளர்ந்து வருகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

    இந்த வளர்ச்சி காதி தொழிலுக்கு மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் நன்மை பயக்கும். இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    ×