search icon
என் மலர்tooltip icon

    அருணாசலப் பிரதேசம்

    • இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
    • விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டர் விபத்து குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    • போருக்கு தூண்டப்பட்டால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயார் என பாதுகாப்புத்துறை மந்திரி கூறினார்.
    • அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது என்றார்.

    இடாநகர்:

    அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியா போரை விரும்பாத நாடு. அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது.

    இந்த தத்துவம் கடவுள் ராமர் முதல் கடவுள் புத்தரின் போதனைகள் வரை நமது மரபில் பெறப்பட்ட தத்துவம்.

    போருக்கு தூண்டப்பட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

    எல்லையில் எத்தகையை சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.

    • அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சியை இந்தியா முறியடித்தது.
    • கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இடாநகர்:

    இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. 300-க்கு மேற்பட்ட வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

    கடந்த 9-ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கடந்த பிப்ரவரி மாதம் 2019ம் ஆண்டு அன்று பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
    • விமான நிலையம் இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.

    அருணாச்சல் பிரதேசம் மாநிலம் இட்டா நகரில் டோனி போலோ என்கிற புதிய பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    அருணாச்சல பிரதேசத்தின் தலைநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 2019ம் ஆண்டு அன்று பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

    இதன் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி இன்று புதிய பசுமை விமான நிலையத்தை தொடங்கி வைத்தார். இந்த விமான நிலைய சேவை வடகிழக்கு மாநிலத்தின் தலைநகரை இணைக்கும். இது மாநில எல்லை மற்றும் மற்ற இந்திய நகரங்களுடன் வணிக விமானங்கள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பிற பகுதிகளுடன் ஹெலிகாப்டர் சேவைகள் மூலம் இணைக்கும்.

    இந்த விமான சேவை மூலம் பிராந்தியத்தில் இருந்து சுமார் 20 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும், இணைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.

    • பாசர் பகுதியில் இருந்து 52 கி.மீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பசார் பகுதி அருகே இன்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    அருணாச்சல பிரதேசம் மாநிலம் த்தில் உள்ள பசார் பகுதி அருகே இன்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

    பாசர் பகுதியில் இருந்து 52 கிமீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம்சாட்டுயுள்ளனர்.
    • தாமதமாக வந்த தீயணைப்பு துறையினர் போதிய தண்ணீர் கொண்டு வரவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள பழமையான மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 700க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சாம்பலாயின. மேலும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    இட்டாநகர் அருகே உள்ள நஹர்லகுன் டெய்லி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீபாவளிக்கு வெடித்த பட்டாசு அல்லது வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதனால், ரூ.3 கோடிக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் மூங்கில் மற்றும் மரக்கட்டைகளால் ஆனது. அங்குள்ள கடைகளில் ஏராளமான உலர் பொருட்கள் சேமித்து வைத்திருந்ததால் தீ சீக்கிரம் பிடித்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலையம் சந்தைக்கு அருகே இருந்தும், தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுயுள்ளனர்.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க விரைந்தபோது அங்கு யாருமில்லை என்றும், தாமதமாக வந்த தீயணைப்பு துறையினர் போதிய தண்ணீர் கொண்டு வரவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் மார்க்கெட்டின் பெரும்பகுதி தீயிக்கு இரையானது.

    இதையடுத்து, அலட்சியமாக பணியிலிருந்த அனைத்து தீயணைப்பு வீரர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அருணாச்சல வர்த்தக மற்றும் தொழில்துறையின் தலைவர் தர் நச்சுங் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • விபத்து நடந்த பகுதிக்கோ அருகில் உள்ள கிராமத்திற்கோ வாகனங்கள் செல்வதற்கான சாலை வசதி இல்லை
    • விபத்து குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்

    கவுகாத்தி:

    அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மிக்கிங் கிராமத்தின் அருகே மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அத்துடன் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது.

    தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதிக்கோ அருகில் உள்ள கிராமத்திற்கோ வாகனங்கள் செல்வதற்கான சாலை வசதி இல்லை. அதனால் ராணுவம் மற்றும் விமானப்படையின் மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்களில் அப்பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணிக்கு உதவினர். விபத்து நடந்த பகுதியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. அவரை தேடும் பணி நடைபெறுகிறது.

    ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு தொடர்பாக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, விபத்து நடந்த பகுதியில் இருந்து புகை வெளியேறும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அருணாச்சல பிரதேசத்தில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பைலட் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

    • தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
    • ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.

    தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. சிங்கிங் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

    தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • கிராம மக்கள் சமையலுக்கு விறகுகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
    • மழைக் காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

    கவுகாத்தி:

    இந்தியாவில் முதல் எல்.பி.ஜி. சிலிண்டர் இணைப்பு 1965-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 57 ஆண்டுகள் கடந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதாவது அருணாச்சல பிரதேசத்தில் மியான்மார் எல்லையையொட்டிய சாங்லாங்க் மாவட்டத்தின் மியாவ், டிவிஷன் பகுதிக்குட்பட்ட விஜயநகர் என்ற கிராமத்தில் சுமார் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரில் இருந்து சுமார் 157 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பகுதிக்கு நீண்ட காலமாகவே சாலை வசதி இல்லாமல் இருந்தது.

    மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சிலிண்டர் இணைப்புக்கான ஆவணங்கள் இல்லாததால் நீண்டகாலமாக சிலிண்டர் இணைப்பு இல்லாமல் இருந்தது. இதனால் இந்த கிராம மக்கள் சமையலுக்கு விறகுகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் மழைக் காலங்களில் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு கேட்டு மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து தற்போது அந்த கிராம மக்களுக்கு எல்.பி.ஜி. சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளதாக மந்திரி கம்லுங் மொசாங் கூறினார்.

    ×