என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.
    • பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    திருப்பதி:

    தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பி.ஆர்.அம்பேத்கர், சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிட்டார், ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தப் பிரச்சினையை போதுமான அளவு கவனிக்கவில்லை. 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.

    அறுதிப் பெரும்பான்மையை வைத்துள்ள நரேந்திர மோடி அரசு ஏன் மசோதாவை நிறைவேற்றவில்லை. "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எனது வேண்டுகோள் என்ன வென்றால், அவர்கள் இதை பொது பிரச்சினை யாக பார்க்க வேண்டும்.

    இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.இது நம் நாட்டில் உள்ள 70 கோடி பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.

    போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, பாஜகவின் ஸ்மிருதி , டிகே அருணா ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுமியை திடீரென சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றது.

    இதனையடுத்து வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கியது.

    குழந்தையை கொன்றது இந்த சிறுத்தைகள் தானா என்பது குறித்து தெரிந்துகொள்ள, சிறுத்தை ரத்த மாதிரிகள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அலிப்பிரி நடைபாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து வனத்துறையினர் ஆங்காங்கே 300 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நடைபாதை முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அலிப்பிரி நடைபாதையில் பொருத்தப்பட்ட 300 கண்காணிப்பு கேமராக்களில், நேற்று ஒரே நாளில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    50 கேமராக்களில் பதிவான சிறுத்தை ஒன்று தானா? அல்லது சிறுத்தைகள் அதிகமாக உள்ளதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    இது குறித்து திருப்பதி வனவிலங்கு மேலாண்மை வட்டத்தின் தலைமைப் பாதுகாவலர் நாகேஸ்வரராவ் கூறியதாவது:-

    நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கண்டறிந்து, நடைபாதைகளில் இருந்து விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள சிறுத்தையின் தடவியல் மாதிரிகளின் அறிக்கை 15 நாட்களில் வந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷோரூம் முதல் தளத்தில் எலக்ட்ரீக் பைக்குகளும், கீழ் தளத்தில் பெட்ரோல் பைக்குகளும் நிறுத்தி வைத்திருந்தனர்.
    • தீயணைப்புத் துறையின் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பைக் ஷோரூம் உள்ளது.

    விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்ட தலைமையகம் என்பதால் இங்கு ஏராளமான பைக்குகள் விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    ஷோரூம் முதல் தளத்தில் எலக்ட்ரீக் பைக்குகளும், கீழ் தளத்தில் பெட்ரோல் பைக்குகளும் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் அதே வளாகத்தில் பைக் ஷோரூம் சர்வீஸ் சென்டரும் இயங்கி வந்தது.

    நேற்று இரவு ஷோரூம் ஊழியர்கள் முதல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு எலக்ட்ரீக் பைக்குக்கு சார்ஜ் போட்டனர்.

    பின்னர் ஞாபக மறதியால் எலக்ட்ரீக் பைக்குக்கு போட்டா சார்ஜை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். எலக்ட்ரீக் பைக்கிற்கு நீண்ட நேரம் சார்ஜ் ஏறியது. இன்று அதிகாலை எலக்ட்ரானிக் பைக் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அருகில் உள்ள பைக்குகளுக்கு தீ பரவியது.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளிகள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் முதல் தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பைக்குகளுக்கும் பரவியது.

    அங்கு தீயணைப்புத் துறையின் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர்.

    பெட்ரோல் பைக்குகளில் இருந்த டெங்குகள் வெடித்து சிதறியதால் ஷோரூம் முழுவதும் தீ மளவளவென பரவியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 300 பைக்குகளும் எரிந்து நாசமானது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நடைபாதை பக்தர்கள் உடமைகளை சுமந்து செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
    • திருப்பதியில் நேற்று 72,695 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் செல்போன்களை விரைவாகவும் எளிதாகவும் வைத்துவிட்டு திரும்பப்பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கவுண்டர்களுக்கு வந்ததும் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ஆட்டோமெட்டிக் முறையில் தானாக சேமிக்கப்படும்.

    தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு அவர்களின் விவரங்கள் மற்றும் பெயரை உள்ளீடு செய்து கியூ ஆர் கோடு ஜெனரேட் செய்யப்பட்டு பையில் இணைக்கப்படும். பக்தர்களுக்கு அதே கியூ ஆர் கோடு கொண்ட ரசீது வழங்கப்படும்.

    அதேபோல் செல்போன் டெபாசிட் செய்யும்போது கியூஆர் கோடு குறியுடன் இணைத்து ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும் பக்தர்கள் உடைமைகள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் தரிசனத்திற்கு வரும் நடைபாதை பக்தர்கள் தங்கள் உடமைகளை அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலையடிவாரங்களில் உள்ள தேவஸ்தான அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை மலைக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி உடமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், செல்போன் எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    பின்னர் கோவில் அருகே உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், ரூ.300 சிறப்பு தரிசன மையம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் தங்கள் உடமைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    இதன்மூலம் நடைபாதை பக்தர்கள் உடமைகளை சுமந்து செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 72,695 பேர் தரிசனம் செய்தனர். 27,060 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் 'லேண்டர்' செல்லும்.
    • நிலவை நெருங்கும் 'லேண்டரின்' கடைசிக்கட்ட நிகழ்வுகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன.

    ஸ்ரீஹரிகோட்டா:

    உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன.

    அந்த வரிசையில், கடந்த 2008-ம் ஆண்டு 'சந்திரயான்-1' விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது. அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு 'சந்திரயான்-2' விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் 'லேண்டர்' கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது.

    ஆனால் 'சந்திரயான்-2'-ல் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி 'சந்திரயான்-3' விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

    ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது. இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இறுதிக்கட்ட செயல்பாடுகள் சவால் நிறைந்தவை என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 'சந்திரயான்-3' குழுவினர், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    ஏற்கனவே 'சந்திரயான்-2' விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி, தற்போதைய 'லேண்டர்' கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது, சாதகமான சூழ்நிலையாக கருதப்படுகிறது. இரண்டும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. இதனால், 'லேண்டர்' நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த 'கிளைமாக்ஸ்' நிகழ்வுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

    நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது. மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.

    தற்போதுவரை, திட்டமிட்டபடி 'லேண்டரின்' செயல்பாடு சரியாக உள்ளது. வழக்கமான பரிசோதனைகளை சீரான இடைவெளியில் விஞ்ஞானிகள் செய்துவருகின்றனர்.

    நிலவு நோக்கிய 'லேண்டரின்' நகர்வு சுமுகமாக இருக்கிறது. கடந்த 19-ந்தேதி நிலவுக்கு மேலே 70 கி.மீ. உயரத்தில் இருந்த 'லேண்டர்', நிலவின் தரைப்பகுதியை துல்லியமாக புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ளது.

    கடைசிக் கட்டத்தில் 'லேண்டரின்' செயல்பாடு இயல்புநிலையில் இருந்து வேறுபட்டால், நிலவில் தரையிறங்கும் திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இன்று (புதன்கிழமை) நிலவுக்கு மேலே 30 கி.மீ. உயரத்தில் 'லேண்டர்' இருக்கும்போது, அதை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் தொடங்கும்.

    அப்போது, நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் 'லேண்டர்' செல்லும். இந்த சமயத்தில் நிலவின் ஈர்ப்புவிசையும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், 'லேண்டரின்' வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த இருக்கின்றனர். இதில் ஏதும் தவறு ஏற்படும்பட்சத்தில், நிலவின் தரையில் 'லேண்டர்' மோதி சேதமடைய வாய்ப்பு இருக்கிறது.

    இதனால், நிலவை நெருங்கும் 'லேண்டரின்' கடைசிக்கட்ட நிகழ்வுகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன. நிலவின் தரையில் பத்திரமாக 'லேண்டர்' தரையிறங்கும் அந்த தருணத்தை இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விண்வெளியில் புதிய வரலாறு படைக்க தயாராகி உள்ளது 'சந்திரயான்-3'.

    'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தை பெறும். நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும். 

    • கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
    • திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம், சில்லறை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தினமும் ரூ 3 முதல் 5 கோடி வரை வசூல் ஆகிறது. உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கோவிலில் இருந்து உண்டியல்கள் சிறிய வாகனங்கள் மூலம் கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்குள்ள கிரேன்கள் மூலம் உண்டியல்கள் லாரிகளில் ஏற்றி காணிக்கை எண்ணிக்கை நடைபெரும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.

    காணிக்கை உண்டியல்கள் இந்த லாரியில் பாதுகாப்பான முறையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அருண் கணேஷ் விடுதி அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் கணேஷ் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    சென்னையை சேர்ந்தவர் அருண் கணேஷ் (வயது 41). இவர் கடந்த சனிக்கிழமை திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

    நேற்று முன்தினம் உறவினர்கள் வருவதாக கூறி சாதாரண அறையில் இருந்து ஏசி அறைக்கு மாறினார்.

    நேற்று முழுவதும் அருண் கணேஷ் விடுதி அறையில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது அருண் கணேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் கணேஷ் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தினருடன் அடிக்கடி நிஜாம்பட்டினம் அருகே உள்ள அத்தாரிக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் செல்வது வழக்கம்.
    • சிறிது நேரத்தில் சைவர்ணிகா அவரது மகன்கள் தன்வீஷ் குமார், தருனேஷ் கடலில் மூழ்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், நிஜாம் பட்டினம் அடுத்த ஏழை செட்டிலப்பாவை சேர்ந்தவர் சோம்பாபு. இவரது மனைவி சைவர்ணிகா. தம்பதியின் மகன்கள் தன்வீஷ்குமார் (வயது 8), தருனேஷ் (11 மாதம்).

    சோம்பாபு தனது குடும்பத்தினருடன் அடிக்கடி நிஜாம்பட்டினம் அருகே உள்ள அத்தாரிக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் செல்வது வழக்கம்.

    அதன்படி நேற்று காலை தனது மனைவி மகன்களுடன் சோம்பாபு கடல் வழியாக படகில் சென்று கொண்டு இருந்தார். கடல் அலை வேகமாக வீசியது. இதனால் படகு தள்ளாடியது. எப்படியாவது கரைக்கு சென்று விட வேண்டும் என எண்ணி சோம்பாபு துடுப்பை வேகமாக செலுத்தினார். இருப்பினும் படகு திடீரென கவிழ்ந்தது.

    இதனால் படகில் இருந்த 4 பேரும் கடலில் விழுந்தனர். கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். சிறிது நேரத்தில் சைவர்ணிகா அவரது மகன்கள் தன்வீஷ் குமார், தருனேஷ் கடலில் மூழ்கினர்.

    சோம்பாவுக்கு நீச்சல் தெரிந்ததால் கடலில் மூழ்காமல் காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டார்.

    இதனைக் கண்ட அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சோம்பாபுவை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து கடற்படை வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் கடலில் மூழ்கியவர்களை தேடினர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இன்று காலை முதல் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. 

    • அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தர்ஷியை சேர்ந்தவர் வரப்பிரசாத் (வயது 45). கோட்டா மிஷின் பஜாரில் நகைக் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு சொந்தமான கடையை சீனிவாசலு என்பவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு வாடகைக்குவிட்டார். சீனிவாசலு சாமியானா பந்தல் போடும் கடை நடத்தி வந்தார்.

    சரிவர ஷாமியானா பந்தல் வாடகைக்கு செல்லாததால் சீனிவாசலுக்கு போதிய அளவு வருமானம் வரவில்லை. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கடை உரிமையாளருக்கு சீனிவாசலு வாடகை பாக்கி தரவில்லை.

    வாடகை பாக்கி வராததால் வரப்பிரசாத்திற்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் கடையை தீவைத்து எரிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை சாமியான பந்தல் கடைக்கு வந்த வரப்பிரசாத் ஷட்டரின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்றார்.

    பின்னர் கடையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தான் எடுத்துச் சென்று பெட்ரோலை ஷாமியானா பந்தல் மீது ஊற்றினார். அப்போது பெட்ரோல் சிதறி வர பிரசாத் மீது தெரித்தது.

    இதை எடுத்து வரப்பிரசாத் தீக்குச்சியை கொளுத்தி ஷாமியானா பந்தல் மீது வீசினார். சாமியான பந்தல் குபீரென தீ பற்றி எரிந்தது.

    அப்போது வரப்பிரசாத் மீது பெட்ரோல் பட்டதால் அவரது உடலிலும் தீ பரவியது. இதனால் வலியால் அலறி துடித்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வரப்பிரசாத்தை மீட்டனர்.

    ஓங்கோல் ரீம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வர பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    • ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும்.
    • பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அக்னிகுல் ஸ்டார்ட் அப் நிறுவனம் 3டி பிரிண்டிங் முறையிலான 'அக்னிபான்' என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

    இஸ்ரோ மூலம் பெரிய அளவிலான செயற்கை கோள்கள் அனுப்பி வரும் நிலையில் அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய அளவிலான செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ முடியும்.

    விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தவும் முடியும். இதனால் குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை ஏவலாம். இதற்கான ராக்கெட் ஏவுதளம் (அக்னிகுல்) இஸ்ரோவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டின் 2 பாகங்கள் தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பாகம் 3டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையை தளமாக கொண்ட ராக்கெட் ஸ்டார்ட் அப் அக்னி குல் காஸ்மோஸ் நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள தனது ஏவு தளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒரு பகுதியாக ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல் முறையை தொடங்கி உள்ளது.

    இது அக்னிலெட் எந்திரத்தால் இயக்கப்படும் சிங்கிள் ஸ்டேஜ் லான்ஜ் வாகனம் மற்றும் முற்றிலும் 3டி அச்சிடப்பட்ட, சிங்கிள் பீஸ், 6 கே.என். அறை- கிரையோ ஜெனிக் எந்திரம் ஆகும். இந்த ராக்கெட் ஏவப்படும் போது திட்டமிடப்பட்டவாறு செங்குத்தாக மேலே ஏறி அதன் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும். இந்த பணிகளை இன்னும் சில நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அக்னி பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • பக்தர்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் தற்போது குறைந்து காணப்படுகிறது. இதனால், நேற்று காலை 12 காத்திருப்பு அறைகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்க்காக காத்திருந்தனர்.

    தர்ம தரிசனத்தில் தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள் 12 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று முழுவதும் 79,444 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,744 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.4.21 கோடி வசூலானது.

    காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமியையொட்டி இன்று இரவு 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கருட சேவை(தங்க கருட வாகன வீதி உலா) நடக்கிறது.

    உற்சவர் தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    • கல்லூரியில் படிக்கும் போது இருவரும் நட்பாக பழகி வந்தனர். நட்பு காதலாக மாறியது.
    • மகன், மகளை காணாததால் அவர்களது பெற்றோர்கள் புங்கனூர் போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர்.

    இருவரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது இருவரும் நட்பாக பழகி வந்தனர். நட்பு காதலாக மாறியது.

    இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதல் தேவைதானா என இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருப்பதி அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மகன், மகளை காணாததால் அவர்களது பெற்றோர்கள் புங்கனூர் போலீசில் புகார் செய்தனர்.

    பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததை அறிந்த காதல் ஜோடி எப்படியாவது தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணி கவலை அடைந்தனர்.

    இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருப்பதி பீளேரு சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    நேற்று மாலை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் காதல் ஜோடி தூக்கில் தொங்குவதை கண்டனர்.

    இது குறித்து பாக்ராபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கியவர்களின் பிணங்களை மீட்டனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×