என் மலர்
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்கு 12 மணி நேரமாகிறது
- பக்தர்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் தற்போது குறைந்து காணப்படுகிறது. இதனால், நேற்று காலை 12 காத்திருப்பு அறைகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்க்காக காத்திருந்தனர்.
தர்ம தரிசனத்தில் தரிசன டோக்கன்கள் இல்லாதவர்கள் 12 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு 2 முதல் 3 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முழுவதும் 79,444 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,744 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.4.21 கோடி வசூலானது.
காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமியையொட்டி இன்று இரவு 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கருட சேவை(தங்க கருட வாகன வீதி உலா) நடக்கிறது.
உற்சவர் தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.






