என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மம்தாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்தது.
- ஸ்ரீதரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம்,பூஜாரி வண்டல பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா (34).
ஸ்ரீதர் 15 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை செய்து விட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தார்.
இதற்கிடையே மம்தாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்தது.
ஸ்ரீதரிடம் அவரது தாயை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என மம்தா வற்புறுத்தினார். இதற்கு ஸ்ரீதர் எதிர்ப்பு தெரிவித்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீதர் மது குறித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஸ்ரீதர் மனைவியை சரமாரியாக தாக்கினார். பின்னர் ஸ்ரீதர் தன்னுடைய அறையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் ஸ்ரீதர் அறைக்கு சென்ற மம்தா அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அவர் தப்பிச் செல்வதை தடுக்க அறையின் கதவை பூட்டிவிட்டு தப்பி சென்றார்.
ஸ்ரீதரின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வலியால் அவர் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது ஸ்ரீதர் மீது தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ஸ்ரீதரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முடிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மம்தாவை தேடி வருகின்றனர்.
- சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
- சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி அனுப்பப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது. 14 நாட்களுக்கான ஆய்வு பணியை இஸ்ரோ ரோவருக்கு வழங்கி உள்ளது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில் தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
செப்டம்பர் 2-ந்தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய உள்ளது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகள் காணாமல் போனதால் அவரது தாய் மகளைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.
- சிறுமி அழுதபடி நின்று இருப்பதை கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி மண்டலத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி. இவர் வாய்பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி.
அதே பகுதியை சேர்ந்தவர் மால்யாத்ரி (வயது 27). மாற்றுத்திறனாளி சிறுமியும் அவரது தாயும் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் வாரச்சந்தையில் பொருட்களை வாங்க சென்றனர்.
அப்போது மால்யாத்ரியும் அங்கு சென்றார்.
சிறுமியின் தாய் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மால்யாத்ரி சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து தனது பைக்கில் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். மகள் காணாமல் போனதால் அவரது தாய் மகளைப் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.
இந்த நிலையில் மால்யாத்ரி சிறுமியை சந்தை அருகே விட்டுவிட்டு சென்றார்.
சிறுமி அழுதபடி நின்று இருப்பதை கண்ட அவரது தாய் சிறுமியிடம் விசாரித்தார்.
அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து செய்கை மூலம் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள மால்யாத்ரியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது.
- விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர், கல்யாணராம் கலந்து கொள்கின்றனர்.
திருப்பதி:
ஆந்திராவில் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது.
அதன்படி 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட நாணயம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து செய்யப்பட்டு உள்ளது.
நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி.ஆர். ராமராவ் உருவம் பதித்து, அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923-2023 என அச்சிடப்பட்டுள்ளது.
நாணய வெளியிட்டு விழா நாளை மறுநாள் நடக்கிறது.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிடுகிறார்.
நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள என்.டி.ராமராவின் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர், கல்யாணராம் கலந்து கொள்கின்றனர்.
- வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிகோட்டுரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25).
இவர் நேற்று முன்தினம் குப்பம் வந்தார். அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். சிறிது நேரத்தில் வினோத்குமாரின் அறைக்கு 2 இளம்பெண்கள் சென்றனர்.
அன்று மாலை அறையில் தங்கியிருந்த 2 பெண்கள் வினோத் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வினோத்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து 2 பெண்களும் வினோத்குமார் பிணத்தை அவரது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
வினோத் குமாரின் பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் 2 பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வினோத்குமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
- எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி:
திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஷெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நடந்து சென்ற 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது.
இதேபோல் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. தற்போது மலை பாதை அருகே சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.
இதனால் பக்தர்கள் அச்சத்துடன் நடை பாதையில் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதை முழுவதும் இரும்பு வேலி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.
- பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 170 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
- ஹரிநாத் கவுட்டின் இறுதிச் சடங்குகள் இன்று காவடிகுடாவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.
அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைப்பார்கள்.
இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்தை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் அங்கே கூடி வருகின்றனர்.
இதை பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 170 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக மீன் பிரசாதம் வழங்கும் பாத்தினி சகோதரர்களில் முக்கியமானவர் பாத்தினி ஹரிநாத் கவுட் (வயது 84).
இவர் நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள காவடிகுடாவில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று இரவு அவர் காலமானார்.
இவரது மனைவி சுமித்ரா தேவி, மகன்கள் அனில், அஜய் மற்றும் அல்கானந்தா மற்றும் அர்ச்சனா என்ற மகள்கள் உள்ளனர்.
ஹரிநாத் கவுட்டின் இறுதிச் சடங்குகள் இன்று காவடிகுடாவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மீன் மருந்து தயாரித்து வழங்குவதில் பாத்தினி ஹரிநாத் மூளையாகவும் செயல்பட்டு வந்தவர். அவரது இறப்பு பாத்தினி குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கணவர் இறந்து விட்டதால் வெங்கடம்மா பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று குடும்பம் நடத்தி வந்தார்.
- குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், கஜ்வேல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடம்மா (வயது 40).
இவரது கணவர் இறந்து விட்டார். 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் வெங்கடம்மா பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடம்மா தனது வீட்டில் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வெங்கடம்மாவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தைகள் தாய் கால், கைகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்
குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கஜ்வேல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட்ம்மாவின் உடல் பகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடம்மா எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலையாளி யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த ரோஜா பின்னர் வீட்டிற்கு வந்தார்.
- ரோஜாவின் குடும்பத்தினர் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை மண்டலம், தர்சங்க தண்டாவை சேர்ந்தவர் ரிக்யா. இவரது மனைவி ரோஜா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவை கடந்த 15-ந்தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.
ரோஜாவிற்கு சுகப்பிரசவம் ஆவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து டாக்டர் கிருஷ்ணா என்பவர் அறுவை சிகிச்சை செய்து ரோஜா வயிற்றிலிருந்து ஆண் குழந்தையை எடுத்தார். பின்னர் தையல் போடும்போது வயிற்றில் தெரியாமல் பஞ்சை வைத்து தைத்து விட்டார்.
3 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த ரோஜா பின்னர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தது முதல் ரோஜாவுக்கு கடும் வயிற்று வலி மற்றும் தையல் போட்ட இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டது.
இதனை கண்டு பதறிபோன ரோஜாவின் குடும்பத்தினர் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரோஜாவின் வயிற்றை ஸ்கேன் செய்த பார்த்தபோது வயிற்றில் பஞ்சு இருந்தது தெரியவந்தது.அங்கிருந்த டாக்டர் கிருஷ்ணா ரோஜாவை சிகிச்சைக்காக அவரது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை அளித்தும் ரோஜாவுக்கு ரத்தக்கசிவு தொடர்ந்தது.
இதையடுத்து ரோஜாவை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா பரிதாபமாக இறந்தார்.
ரோஜாவின் உறவினர்கள் அவரது பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் கர்ப்பிணி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
- விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்.
- இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை.
அமராவதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது.
இந்நிலையில், கோவில் அதிகாரிகள் சார்பில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று நடந்தது. அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தக் காசோலையில், 100 கோடி ரூபாய்க்கு கோவில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என தெரிய வந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடக் வங்கி கிளையின் பெயரில் இருந்தது. அதிலும் வராகலட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ10 என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் வங்கிக்குச் சென்று அந்த சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை விசாரித்தனர். அந்த சேமிப்பு கணக்கில் 17 ரூபாய் மட்டும் இருப்பு இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, காசோலையை காணிக்கையாக போட்டவரைக் கண்டுபிடித்து, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க கோவில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய்க்கு காசோலை போட்ட நபரின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடைந்தனர்.
- தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார்.
- கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் தொடர் முயற்சியின் பலனாக இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
பெங்களூரு:
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி முலம் பார்த்தார். லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர், காணொலி வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்து தெரிவித்தும் பேசினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். அன்றே அவர் இந்தியா திரும்புகிறார்.
நாடு திரும்பியவுடன் பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளை சந்திக்கிறார். இந்தியா சரித்திர சாதனை படைக்க பணியாற்றிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த ஜி-20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை 3-வது பெரிய உலக பொருளாதாரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மையை கொண்டு வந்து உள்ளோம். அன்னிய நேரடி முதலீட்டை தாராள மயமாக்கி உள்ளோம்.
போட்டித்திறன், மேம்பட்ட வெளிப்படைத் தன்மை, விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல், புதுமைகளை ஊக்குவித்து உள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 60 முதல் 70 சதவீத வேலை வாய்ப்பை கொண்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை பங்களிக்கிறது. அவர்களுக்கு நமது தொடர்ச்சியான ஆதரவு தேவையாகும்.
வர்த்தகம் மற்றும் உலக மயமாக்கல் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உலக ளாவிய நம்பிக்கையை காண்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் தொடர் முயற்சியின் பல னாக இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது.
- ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் கே முனிரத்தினம் ரெட்டி கூறுகையில்:-
புதையலில் இருந்த தங்க காசுகள் 15 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள், விஜயநகர மன்னர் I மற்றும் II ஹரிஹரர் மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது.
ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள பழமையான கோவிலுக்கு அருகிலேயே இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இடைக்காலங்களில், முறையான வங்கி முறை இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் டெபாசிட் செய்தனர்.
ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.
இந்த நாணயங்களை அருங்காட்சியகங்களில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.






